உலக சினிமா ரசிகர்களின் பிரார்த்தனை பலித்தது- லியனார்டோ ஆஸ்கர் வென்றார்

சிறந்த நடிகருக்கான விருதை, "தி ரெவனண்ட்" திரைப்படத்தில் நடித்த, லியோனார்டோ டி காப்ரியோ பெற்றார். இதுவரை, சிறந்த நடிகர் விருதுக்கு நான்கு முறை நாமினேட் ஆன டி காப்ரியோ, ஐந்தாவது முறை இவ்விருதை பெற்றுள்ளார். மேட் டேமன், ப்ரையன் க்ரான்ஸ்டன், மைக்கெல் ஃபாஸ்ட்பெண்டர் போன்றோரும் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.

88வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான விருதை, "ரூம்" திரைப்படத்தில் நடித்த, ப்ரீ லார்சன் பெற்றார். கேட் ப்ளான்செட், 69 வயதான ஷார்லெட் ரேம்ப்லிங் போன்ற நடிகைகளும் இந்த விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

சிறந்த திரைப்படத்திற்கான விருதை, டாம் மெக்கார்த்தி இயக்கிய "ஸ்பாட்லைட்" திரைப்படம் வென்றது. 

மிக நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சிறந்த நடிகருக்கான விருதை Revenant படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றார் டிகாப்ரியோ

2016 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த குறும்படத்திற்கான விருதை, "ஷட்டரர்" எனும் குறும்படம் வென்றது. சிறந்த பிறமொழித் திரைப்படத்திற்கான விருதை ஹங்கேரி நாட்டுத் திரைப்படமான, "சன் ஆஃப் சௌல்" தட்டிச் சென்றது.


சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை "ஹேட்ஃபுல் எயிட்" திரைப்படத்திற்காக, என்னியோ மோரிகோனி பெற்றார். இவருக்கு வயது 87. சிறந்த பாடலுக்கான விருதை, "ஸ்பெக்டர்" படத்தில் இடம்பெற்ற "ரைட்டிங்க்ஸ் ஆன் தி வால்" பாடல் வென்றது. இவ்விருதினை, ஜிம்மி நேம்ஸ் மற்றும் சாம் ஸ்மித் பெற்றனர். 

சிறந்த இயக்குனருக்கான விருதை, "தி ரெவனண்ட்" திரைப்படத்தை இயக்கிய அலெஹான்ரோ கொன்சாலஸ் இன்யாரிட்டோ பெற்றார். சென்ற ஆண்டும், இவரே, "பேர்ட்மேன்" திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதைப் பெற்றிருந்தார்.   

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை, "பியர் ஸ்டோரி" எனும் குறும்படம் வென்றது. இந்த விருதை "மினியன்ஸ்" எனப்படும் அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் அறிவித்தன.

அமெரிக்கா: சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'ஸ்பாட் லைட்' திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை, "பியர் ஸ்டோரி" எனும் குறும்படம் வென்றது. இந்த விருதை "மினியன்ஸ்" எனப்படும் அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் அறிவித்தன.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை, "இன்சைட் அவுட்" திரைப்படம் வென்றது. இந்த விருதை "டாய் ஸ்டோரி" எனப்படும் அனிமேஷன் திரைப்படத்தின், ஷெரிஃப் ஹுட்டி மற்றும் பஸ் லைட் யியர் கதாப்பாத்திரங்கள் அறிவித்தன.

சிறந்த துணை நடிகருக்கான விருதை, "ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்" திரைப்படத்தில் நடித்த மார்க் ரைலான்ஸ் பெற்றார். க்ரிஸ்டியன் பேல், சில்வெஸ்டர் ஸ்டால்லோன் போன்ற நடிகர்களும் இந்த விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருதை, "ஏ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃப்ர்கிவ்னஸ்" அவணக் குறும்படம் வென்றது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை "ஏமி" எனும் ஆவணப்படம் பெற்றது. 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 88வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 88-வது ஆஸ்கார் விருது போட்டியில்,சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஏராளமான நடிகர், நடிகைகள் குவிந்துள்ளனர்.

இதில், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை 'ஸ்பாட் லைட்' திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை 'தி பிக் ஷார்ட்' திரைப்படம் வென்றுள்ளது. எழத்தாளர்கள் சார்லஸ் மற்றும் ஆடம் ஆகியோர் இதற்கான விருதை பெற்றனர்.

இதேபோல், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை அலிக்கா விக்கேண்டர் வென்றார்.  சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை ஜெனி பேவன் வென்றுள்ளார்.

சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கார் விருதை 'மேட் மேக்ஸ்' திரைப்படம் வென்றது. சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கார் விருதை 'தி ரெவனன்ட்' திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. இதற்கான விருதை ஒளிப்பதிவாளர் இம்மானுவேல் ருபேஸ்க்கி பெற்றுக் கொண்டார்.

இதேபோல், சிறந்த படத்தொக்குப்புக்கான ஆஸ்கார் விருதை 'மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்' படம் தட்டிச் சென்றுள்ளது.

- ஜெ.விக்னேஷ் (மாணவர் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!