ஆஸ்கர் விருதுக்காக 30 வருடங்கள் காத்திருந்த இசையமைப்பாளர்

திரைப்பட உலகில் மிக உயர்ந்த கௌரவமாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. உலகமே லியானர்டோ டிகாப்ரியோவுக்கு கிடைத்த விருதை தனக்கு கிடைத்த மாதிரி கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் "தி ஹேட்ஃபுல் எயிட்" படத்தில் இசை அமைத்ததற்காக ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இசையமைப்பாளரான என்னியோ மோரிக்கோனைப் பற்றிப் பார்க்கலாம் .

88 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த இசைக்காக ஆஸ்கர் விருதைப் பெற்ற மோரிக்கோனின் வயது 87 தான். இதுவரைக்கும் ஆஸ்கர் விருது பெற்றவர்களிலேயே இவர் தான் அதிக வயதானவர். இதற்கு முன்பு பிகினர்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை தனது 82 வது வயதில் பெற்றார் கிறிஸ்டோபர் பிளமர்.

குட் பேட் அக்லி, சினிமா பாரடைசோ, மலினா உட்பட ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் இசையமைத்து இருக்கிறார். இதற்கு முன்பே திரைப்படத்துறையில் இசையின் பங்களிப்புக்காக கௌரவ ஆஸ்கர் விருதை பெற்றிருக்கிறார். ஐந்து முறை சிறந்த இசைக்காக ஆஸ்கர் விருதுக்காக பரித்துரைக்கப்பட்டு இருக்கிறார்.

தொடர்ந்து ஐம்பது வருடங்களுக்கு மேலாக இசையமைத்து வரும் மோரிக்கோனுக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் குயின்டின் டராண்டினோவும் மோரிக்கோனின் தீவிர ரசிகர் தான். தி ஹேட்ஃபுல் எயிட் படத்தை இயக்கியது டராண்டினோ தான்.

மோரிக்கோனுக்கு ஆஸ்கர் விருது முப்பது வருடங்களுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆஸ்கரை விமர்சித்துக் கொண்டிருந்தாலும் . இப்போதாவது அவருக்கு விருதை கொடுத்து ஆஸ்கர் தன்னை கௌரவப் படுத்திக்கொண்டது என்று சிலர் பாராட்டவும் செய்கின்றனர்
மோரிக்கோன் ஆஸ்கர் விருதையும், விருதைப் பெற்று தந்த இசையையும் தனது அன்பான மனைவி மரியாவுக்கு அர்ப்பணித்தார்.

-சக்திவேல்

என்னியோ மோரிக்கோனின் இசையில் ஒரு பொக்கிஷம் கீழே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!