வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (21/03/2016)

கடைசி தொடர்பு:16:00 (21/03/2016)

தமிழ்ப்படத்தில் நடிப்பதற்காக இந்தியா வந்தார் ஜாக்கிசான்

ஜாக்கிசான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பிரம்மாண்ட படம் ‘குங்பூ யோகா’. இப்படம் இந்தியா மற்றும் சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் இந்திய-சீன நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

தமிழில் தனுஷுடன் ‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் வில்லனாக பல படங்களில் கலக்கிய சோனு சூட்டும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

மேலும், ஆரிப் ரகுமான் போன்ற இந்திய நடிகர்களுடன், சீன நடிகர்களான ஜாங் யிஜிங், மிங் ஹு உள்பட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஸ்டான்லி டோங் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு உலகின் பல்வேறு நாடுகளில் நடந்தது.

தற்போது இந்தியாவில் ஜெய்ப்பூரில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஜாக்கிசான் இன்று இந்தியா வருகிறார். 15 நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்தியாவில் படப்பிடிப்பு முடிந்ததும், சீனாவில் சில காட்சிகளைப் படம்பிடிக்க இருக்கின்றனர். இப்படம் இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்படுகிறது.

எஸ்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்