செல்ஃபி எடுப்பவர்களை வறுத்தெடுத்த பிரபல நடிகை

'வெல்கம் டூ தி ரோஸஸ்', 'ஹாரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து, உலக அளவில் ரசிகர்களைக் குவித்தவர் கிளிமென்ஸ் போஸி. இவருக்கு சமூக வலைதளங்கள் என்றாலே, அலர்ஜியாக இருக்கிறதாம்!

சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதைக் குறிப்பிட்டுள்ள அவர், ''சமூக வலைதளங்கள் அவரவர் சுயபுராணத்தைப் பாடிக்கொள்ளவும், செல்ஃபிகளால் நிறைத்துக்கொள்ளவும் மட்டுமே பயன்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளதோடு, ''ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஒருவரைப் பிரபலப்படுத்திக்கொள்வதற்காகவே பயன்படுகிறது. இதுபோன்ற செயல்களால் சமூகத்தில் எதிர்மறை கருத்துகள் உருவாகின்றன.

சமூக வலைதளங்களால் பிரபலமான செல்ஃபிக்களும் அப்படித்தான். செல்ஃபிகள் நம்மையே கொன்றுவிடும்! இதனால்தான், சமூக வலைதளங்களில் இணைவதை நான் விரும்புவதில்லை. ஆனால், என் பெயரில் பல கணக்குகள் இருக்கின்றன. எல்லாமே போலியானவை! சமூக வலைதளங்கள் நம் மூளையை மழுங்கடிக்கும். தவிர, நம்முடைய புகைப்படங்களை மற்றவர்களுக்குக் காட்டுவதையே நான் வெறுப்பாக நினைக்கிறேன்!'' என சமூகவலைதளங்களில் செல்ஃபி, ஸ்டேட்டஸ் போடுபவர்களை தாறுமாறாக வறுத்தெடுத்திருக்கிறார் கிளிமென்ஸ்.

கிளிமென்ஸியின் இந்த ஓப்பன் டாக், பல செல்ஃபி புள்ளைகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது!

- சி.ஆனந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!