ஆஸ்கர்விருதுக்குப் பிறகு அந்நியன் விக்ரம் கேரக்டரில் நடிக்கும் லியனார்டோ

ரெவனன்ட் படம் மூலம் ஆஸ்கர் வென்ற லியனார்டோ டி காப்ரியோ அடுத்த படத்துக்குத் தீவிரமாகத் தயாராகிவருகிறார். இந்த முறை நடிக்கவிருக்கும் படம் கண்டிப்பாக லியோவிற்கு சவாலானது தான். காரணம் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதை அப்படிப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டான்லி மில்லிகன் என்ற பில்லி மில்லிகன் என்பவரின் கதையில் தான் நடிக்கிறார் லியோ. பில்லி மல்டிபிள் டிஸார்டர் பாதிப்புள்ளவர். கிட்டத்தட்ட அந்நியன் பட விக்ரம் போன்று, ஆனால் இவர் அதுக்கும் மேல. 24 கேரக்டர்கள் இவரின் உடலுக்குள் இருக்கிறதாம்.

கொள்ளை, கற்பழிப்பு என ஏகப்பட்ட வழக்குகள் பில்லி மேல் இருக்கிறது. ஆனால், அவருக்குள் இருக்கும் வேறு பெர்சனாலிட்டி செய்ததற்கு பில்லிக்கு தண்டனை கொடுக்க முடியாது என தானே வாதாடியிருக்கிறார். பிறகு பல ஆண்டுகள் மனநல மருத்துவமனையிலேயே கழித்த பில்லியின் வாழ்க்கையைப் பற்றி டேனியல் கீஸ் எழுதிய நாவல் 'தி மைன்ட்ஸ் ஆஃப் பில்லி மில்லிகன்'

இந்த நாவல் தான் இப்போது லியோனார்டோ நடிப்பில் திரைப்படமாக உருவாக இருக்கிறது. 20 வருடங்களாக இந்தக் கதையில் நடிக்க தீவிர ஆர்வம் காட்டி வந்தார் லியோ. அல்லெக்ஸான்ட்ரா மில்லிகன் மற்றும் ஜெனிஃபர் டேவிசனுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார் லியோ. ஆனால் இப்படத்தை இயக்கப் போவது யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லையாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!