ஷாரூக்கானை உற்சாகப்படுத்திய 200 நொடி வீடியோ

உங்களின் ஃபேவரைட் ஹீரோவுக்காக கட் அவுட், ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ, இன்ட்ரோவுக்கு விசில் பறக்கவிடும் ரசிகரா நீங்கள், இதோ உங்களைப் போல் ஒருவன் தான் இந்த ராகுல் ஆர்யா.

ஷாரூக்கானின் தீவிரமான ரசிகரான இவர், ஷாரூக் கானின் சினிமா உலகை பெருமைபடுத்தும் விதமாக நிறைய மணல் ஓவியங்களை  உருவாக்கியிருக்கிறார். இவை அனைத்தையும் 200 நொடிகள் ஓடக்கூடிய ஒரு விடியோவாக்கியிருக்கிறார். 

அதில் ஷாரூக்கின் குழந்தைப் பருவம் தொடங்கி, அவரின் டிவி அறிமுகம், முதல் படமான தீவானா, விரைவில் வெளியாகவிருக்கும் ஃபேன் படம் வரையிலான அனைத்தையும் மணல் ஓவியங்களாகப் பதிவு செய்திருக்கிறார்.

இதைப் பார்த்த ஷாரூக்கான் 'நன்றி, இந்த வீடியோ என்னை இன்னும் தீவிரமாக உழைக்கத் தூண்டுகிறது. என்னுடைய வாழ்வை சின்னச் சின்ன ஃப்ளாஷ்களின் மூலம் பார்த்தேன். இன்னும் நிறைய உழைக்க இது போதுமானதாக இருக்கிறது' எனத் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்.

ராகுல் ஆர்யாவை வாழ்த்தலாமே ஃப்ரெண்ட்ஸ்....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!