ஒரு நாற்காலி விலை 43 லட்சம். அப்படி என்ன ஸ்பெஷல் ?

மீபத்தில் ஒரு நாற்காலியின் விலை அறுபத்தைந்தாயிரம் டாலர்கள் என்ற செய்தியைக் கண்டவுடன், நம் மனது நம்மூர் மதிப்பிற்குக் கணக்கிட்டது.. சுமாராக 43 லட்சத்துக்கும் மேல் செல்கிறது...

அப்படி என்ன ஸ்பெஷல் என ஆராய்ச்சியில் இறங்கிய போது கிடைத்த அரிய தகவல், இந்த நாற்காலி குழந்தைகளை மிகவும் கவர்ந்த ஆங்கில ஃபேண்டஸி நாவலான ஹாரி பாட்டர் நாவலை எழுதிய ஜே.கே.ரௌலிங் அமர்ந்த நாற்காலி என தெரியவந்தது.

முதல் இரண்டு பாகங்களான ஹாரி பாட்டர் அண்ட் தி பிளாசபர்ஸ் ஸ்டோன், மற்றும் ஹாரி பாட்டர் அண்ட் தி சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ் கதைகளை அந்த நாற்காலியில் தான் அமர்ந்து எழுதியுள்ளார். அந்த இரு புத்தகங்களும் எந்த அளவிற்கு விற்பனை ஆகின, எவ்வளவு வசூல்களைக் கொண்டு வந்தன என்பது உலகமே அறிந்த உண்மை.

இந்த நாற்காலி 1930களில் உருவாக்கப்பட்டது. இதனுடன் நான்கு மேட்ச் ஆகாத நாற்காலிகளையும் இலவசமாகப் பெற்றுள்ளார். அப்போது ஜே.கே ரௌலிங் ஒரு சிறிய வீட்டில் தன் குழந்தையுடன் எடின்பெர்க்கில் இருந்துள்ளார். இன்று புதன்கிழமை நியூயார்க் நகரின் பிரபல கடை ஒன்று இந்த நாற்காலியை விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறது,இதன் விலை $65,000 , நம்மூர் மதிப்பிற்கு 43 லட்சம்... இந்த நாற்காலியே இப்படின்னா.... அப்போ சொப்பன சுந்தரி காருக்கு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!