வசூல் சாதனை படைக்கும் இந்தியச் சிறுவன் -ஆச்சரியத்தில் திரையுலகம்

இந்தியாவில் நேற்று வெளியான ஜங்கிள் புக் திரைப்படம் கோடிகளில் வசூல் சாதனை படைத்துள்ளது.

1894ல் வெளியான ஜங்கிள் புக் என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இந்திய காடுகளில் நடப்பதுபோன்ற கதையம்சம் கொண்டுள்ளது. எனவே இந்தியாவில் நேற்று ரிலீஸாகி ஒரு நாளில் மட்டும் 9.76 கோடி சாதனை  படைத்துள்ளது.

இந்தப் படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், இந்தியக் காடுகளில் கதை நடப்பதால், முதன்முறையாக ஹாலிவுட் திரைப்படம், இந்தியாவில் முதலில் ரிலீஸாகி, ஒரு வாரம் கழித்து ஏப்ரல் 14ம் தேதி தான் அமெரிக்காவில் ரிலீஸாகிறது.

இப்படத்தில் நடித்திருக்கும் ஒரே கதாபாத்திரம் நீல் சேத். அச்சிறுவனும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர், அமெரிக்காவில் வாழ்ந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருவதால், உலகளவில் ரிலீஸாகும்போதும் நிச்சயம் பெரிய வெற்றியையும், வசூல்சாதனையும் படைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!