தி ஜங்கிள்புக் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்? #அசத்தல் வீடியோ ஆதாரம்! | The Making of The Jungle Book

வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (28/04/2016)

கடைசி தொடர்பு:16:46 (28/04/2016)

தி ஜங்கிள்புக் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்? #அசத்தல் வீடியோ ஆதாரம்!

90களில் பிறந்த குழந்தைகளுக்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் ஜங்கிள் புக் மிகவும் பரிச்சயம். இவர்களை டார்கெட் செய்து ஹாலிவுட்டில் உருவாகி இந்தியாவில் முதலில் ரீலீஸ் செய்யப்பட்ட “தி ஜங்கிள் புக்”வெளியான முதல் நாளே 10 கோடி வசூல் சாதனை படைத்தது.

'அயர்ன் மேன்' பட இயக்குநர் ஜான் ஃபேவ்ரூ இயக்கிய  இப்படத்திற்கு விமர்சகர் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்க இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது டிஸ்னி நிறுவனம் இப்படம் உருவான விதத்தை 2.21 நிமிட வீடியோவாக வெளியிட்டு மிரளவைத்திருக்கிறது. படப்பிடிப்பின் பின்னணியில் நிகழும் ஆர்ட் ஒர்க்ஸ், கேமரா நுணுக்கங்கள், VFX பற்றிய பிரம்மாண்ட இந்த வீடியோவைப் பார்த்தாலே, இந்த கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்புமே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்பது தெரியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close