Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெகஜ்ஜால ஜேம்ஸ்பாண்ட்டின் சீக்ரெட் கேட்ஜெட்ஸ்

தமிழ் சினிமா ஹீரோக்கள் யூஸ் பண்ணும் 'டகால் பகால்’ துப்பாக்கிகளுக்கும், கத்திகளுக்குமே சிலிர்த்து போய் சில்லறை விட்டெறியும் ஆட்கள் நாம். ஜேம்ஸ்பாண்ட் படம் என்றால் சொல்லவா வேண்டும்? ஒவ்வொன்றும் தெறி பேபி ரகம். 70களில் தொடங்கி இன்று வரை டெக் உலகை ஆளும் பாண்ட் பேபியின் சில முக்கிய கேட்ஜெட்கள் பற்றிய கொசுவர்த்தி சுருள் பதிவுதான் இது:

 

 
டுபாக்கூர் கைரேகை (Diamonds are Forever)
’டாப் பாண்ட்’ ஷான் கானரி நடித்த இதில் பாண்ட் பீட்டர் ஃபிராங்க்ஸ் என்பவரின் கைரேகையை லேடக்ஸில்(Latex) பதிய வைத்து, அதை தன் கையில் ஒட்டி ஆள்மாறாட்டம் செய்வார். படம் வெளிவந்த காலத்தில் பயங்கர பரபரப்பை கிளப்பிய இந்தக் காட்சி பின்னாட்களில் நிஜமானது.
ஒரே கடி, ஆள் காலி (The Spy who loved me)
பழைய ரஜினி படங்களில் ஒரு பிரம்மாண்ட மொட்டை வில்லன் இரும்பு பல்லை நறநறவென மாவு அரைப்பாரே. அவருக்கு குருஜி இந்த ஜேம்ஸ்பாண்ட் பட அடியாள்தான். இரும்புக் கம்பியையே இந்த கருவியை வைத்து பிஸ்கட் போல மென்று கொண்டிருப்பார். அவங்க ஊரு ராஜ்கிரண் போல.
டூத்பேஸ்ட் டமால் (License to kill)
டூத்பேஸ்ட் வைத்து பல்லு விளக்குவது எல்லாம் சாதா மனிதனின் வேலை. பாண்ட் 'அதுக்கும் மேல' ரகமாச்சே. வில்லன் சான்சேஸைக் கொல்லும் முயற்சியில் அவன் அலுவலகத்தில் இந்த டூத்பேஸ்ட் வெடியை வைப்பார் பாண்ட் டிமோதி டால்டன். பின்னாட்களில் நிஜமாகவே குளிர்கால ஒலிம்பிக்ஸில் இத்தகைய வெடிகுண்டுகள் வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி கிலி கிளப்பியது.
கிளுகிளுப்பு கண்ணாடி (The World Is Not Enough)
நம்மாட்கள் பலகாலமாய் தேடி அலையும் ’பூவே பூச்சுடவா’ டைப் கண்ணாடிதான். இந்த எக்ஸ்ரே கண்ணாடியை போட்டுக்கொண்டால் துணியைத் தாண்டி பார்க்க முடியும் என்பது பாண்ட் பட லாஜிக். ஆனால் பாண்ட் இதை வைத்து வேலை பார்த்ததை விட 'வெறித்து' பார்த்ததுதான் அதிகம். ஆனாலும் செம ஸ்டைலிஷ் கேட்ஜெட் இது.
மேலே, உயரே, உச்சியிலே (Thunderball)
இதுவும் ஷான் கானரி யூஸ் ப்ராப்பர்ட்டி தான். வில்லன்களின் டிஷ்யூம் டிஷ்யூமில் இருந்து தப்பிக்க முதுகில் ஜெட் பேக் மாட்டிக்கொண்டு சொய்ங்கென பறப்பார். தூரத்தில் தரையிறங்கி எஸ்கேப் ஆவார். பார்க்க ஹெல்மெட் மாட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு போகும் வித்தியாச சிறுவன் போல இருந்தாலும் இந்தக் காட்சி செம ஹிட்.
சிகரெட் சாவு (You only Live Twice)
சிகரெட் எடுத்தவன் சிகரெட்டால் சாவான் என்பதை குறியீடால் உணர்த்திய படம். ஷான் கானரிக்கு இந்த சிகரெட் துப்பாக்கியை டெமோ காட்டுவதே செம மெர்சலாய் இருக்கும். பின்னர், அதை வைத்து ஒரு படா சைஸ் வில்லனை போட்டுத் தள்ளுவார். கண்ணாடியை திருப்பினா எப்படி வண்டி ஓடும் என கேட்க அப்போது ஆளில்லை.
முதலை வேஷம் (Octopussy)
கன்னத்தில் மரு வைத்து மாறுவேடம் என அட்ராசிட்டி பண்ணும் ஆட்களின் அப்டேட்டட் வெர்ஷன் வெர்ஷன் தான் இது. முதலை போல இருக்கும் எந்திரத்தை அணிந்துகொண்டு நீந்தியே சென்று வில்லன் இடத்தை அடைவார். வழக்கம் போல வில்லன் அடியாட்களும் லூசுத்தனமாய் அதை நிஜ முதலை என அசால்ட்டாய் விட்டுவிடுவார்கள். ஜெயம் ஹீரோவுக்கே.
ஆஸ்டன் மார்ட்டின் (நிறைய படங்களில்)
பாண்ட் என்றாலே ஞாபகம் வருவது பிகினி ஹீரோயின்களும் ஆஸ்டன் மார்ட்டின் காரும்தான். இது சகலரும் படிக்கும் குடும்பக் கட்டுரை என்பதால் பிகினியை டீலில் விட்டுவிடலாம். ஜேம்ஸ்பாண்ட்டின் காரை கேட்ஜெட் தொழிற்சாலை என்றே சொல்லலாம். எந்த ஸ்விட்ச்சை தட்டினாலும் ஏதாவது ஒன்று வெளிவந்து ஆச்சரியப்படுத்தும். Goldfinger தொடங்கி எல்லா படங்களிலும் இடம்பெறும் டாப் கேட்ஜெட் இதுதான்.
 
நித்திஷ்-நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்