ஸ்டார் ஹோட்டல்களில் தங்கக் கூட பயம்! பிரியங்காவின் கவலை

பாலிவுட்டின் ஆப்பிள் கன்னத்தழகி பிரியங்கா சோப்ரா ஓட்டலில் தங்குவதைத் தவிர்த்துவருகிறார், இதற்கான காரணத்தையும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்ப்பவர்கள், நடிகைகள் தங்கும் விடுதிகளில் ரகசிய கேமிராக்களை பொருத்தி விடுகின்றனர், இதனால் இணையத்தில் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து பிரியாங்கா சோப்ரா கூறும்போது, “ நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை அசவுகரியமாக நினைக்கிறேன். ரகசிய கேமராக்கள் பொருத்தி வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இதனால் ஓட்டல்களில் நான் தங்குவது இல்லை. வெளிநாடுகளுக்கு போகும்போதும் ஓட்டல்களில் தங்குவதைத் தவிர்க்கிறேன். அவ்வாறான ஓட்டலில் தங்கவே எனக்குப் பயமாக இருக்கிறது.

தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காகவும் அமெரிக்கா  அடிக்கடி செல்ல வேண்டி இருக்கிறது. அங்கு ரகசிய கேமரா பயத்தினால்,  ஓட்டல்களில் தங்குவது இல்லை” என்று கூறினார்.

அமெரிக்காவில் பிரபலமான தொடர், குவாண்டிகோவில் நடித்துவரும் பிரியங்கா, அங்கேயே சொந்தமாக வீடு ஒன்றை வாங்கவும் முடிவு செய்துள்ளார். இதற்காக அங்கு வீடு தேடும் படலத்தையும் ஸ்டார்ட் செய்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!