Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

69வது கேன்ஸ் திரைப்பட விருது வெற்றியாளர்கள்

 

உலக சினிமா ரசிகர்களிடையே, ஆஸ்கரைவிடவும் அதிகம் முக்கியத்துவம் தரப்படும் விருது கேன்ஸ். நேற்றுடன் முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில், சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  மேட் மேக்ஸ் புகழ் , இயக்குனர் ஜியார்ஜ் மில்லர் நடுவராக செயல்பட்டார். திருவிழாவின் முதல் படமாக, வுடி ஆலனின் கேஃப் சொசைட்டி திரையிடப்பட்டது.

79 வயதான கென் லோச், ஐ. டேனியல் பிளேக் படத்திற்காக "தங்கப்பனை" விருது பெற்றார்.69 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கேன்ஸ் விழாவில், இரண்டு முறை 'தங்கப்பனை' விருது வென்ற ஒன்பது இயக்குனர்கள் பட்டியலில் கென் லோச்சும் இதன் மூலம் இணைந்து இருக்கிறார். 2006-ம் ஆண்டு தி விண்ட் தட் ஷேக்ஸ் தி பார்லி படத்திற்காக , இதற்குமுன் ‘தங்கப்பனை’ விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய இயக்குனர் அஸ்கார் ஃபர்காடி இயக்கிய தி சேல்ஸ்மேன் திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என இரு விருதுகளைத் தட்டி சென்றது.

திரைப்பட விழாவில், விமர்சகர்களால் அதிகம் கழுவி ஊற்றப்பட்ட இட்'ஸ் ஒன்லி தி எண்ட் ஆஃப் தி வார்ல்ட் திரைப்படம் கிராண்ட் ப்ரிக்ஸ் விருதை வென்று , பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விருதுகளின் பட்டியல்

தங்கப்பனை :              கென் லோச் , " ஐ, டேனியல் பிளேக் "
கிராண்ட் ப்ரிக்ஸ் :     ஷேவியர் டோலன் , " இட்'ஸ் ஒன்லி தி எண்ட் ஆஃப் தி வார்ல்ட் '
நடுவர் விருது :           ஆண்டிரியா அர்னால்டு , " அமெரிக்கன் ஹனி "
சிறந்த நடிகை :           ஜேக்லின் ஜோஸ் , " மா ரோசா"
சிறந்த நடிகர் :             ஷஹாப் ஹொஸெனி , " தி சேல்ஸ்மேன் "
சிறந்த இயக்குனர் :   ஒலிவியர் அஸ்ஸாயஸ் ( பெர்சனல் ஷாப்பர்)

                                            கிறிஸ்டியன் முஞ்சி , " கிரேஜுவேஷன் "
சிறந்த திரைக்கதை : அஸ்கார் ஃபர்காடி , " தி சேல்ஸ்மேன் "
கேமரா  டி'ஓர் :            :  ஹௌடா பென்யாமினா, " டிவைன்ஸ் "
குயிர் பால்ம் (திரைப்படம் ) : செபஸ்டியன் லிஃஸ்ஹிட்ஸ்
குயிர் பால்ம் (குறும்படம் ) : அன்னா கஜெனவி-கம்பெட் , "கேப்பர் லவ்வர் "

.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்