Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மர்லின் மன்றோ உடை எத்தனை ரூபாய்க்கு ஏலம் போனது தெரியுமா? #HBDMarilynmonroe

அமெரிக்காவின் டாப் மாடல், 5௦களில் புகழின் உச்சத்திற்கே சென்ற மார்லின் மன்றோ பிறந்த தினம் இன்று. ப்ளேபாய் பத்திரிக்கையின் முதல் பிரதி அட்டையை அலங்கரித்தவர் இவர். மர்லின் மன்றோ பற்றிய சில விஷயங்கள்...

1.       இவரது இயற்பெயர் நோமா ஜீன். சிறு வயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், ஆதரவற்றோர் இல்லத்தில்தான் தனது குழந்தை பருவத்தை கழித்தார். கிட்டத்தட்ட 11 தம்பதியினர் இவரை தத்தெடுத்து வளர்த்துள்ளனர்.

2.       ப்ளேபாய் பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு மாடலாக நின்ற மார்லினுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் 50 டாலர்களே!

3.       “ஒரு பெண்ணை சிரிக்கவைத்து விட்டால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்க முடியும்” என்கிற பிரபலமான வாக்கியத்திற்கு சொந்தக்காரர்.

4.       சருமம் வெள்ளையாகத் தெரிய ஹார்மோன் க்ரீம் பூசிக்கொண்டார். இதன் பக்கவிளைவாக இவரது முகத்தில் லேசாக தாடி வளர ஆரம்பித்தது. ஆனாலும் அதை எடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார்.


5.      1954ல் இவர் நடித்த ‘செவன் இயர்ஸ் இட்ச்’ படத்தில் இவரது வெள்ளை உடை சப்வே ஒன்றில் நிற்கும்போது காற்றில் பறக்க, அந்த ஸ்டில் மிகப் பிரபலமானது. பின்னர் ‘White Subway Dress" என்ற அந்த உடை 55.6 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது!


6.       இவர் ஒரு விளையாட்டு வீராங்கனையும் கூட. ஹோவார்ட் காரிங்க்டன் என்னும் ஒலிம்பிக் வீரரிடம் முறையாக பளு தூக்குதல் கற்றுக்கொண்டார்.

7.       DIAMONDS ARE GIRL’S BEST FRIENDS என்ற புகழ்பெற்ற பாடலுக்கு குரல் கொடுத்த இவருக்கு நகைகள், குறிப்பாக வைரங்கள் என்றாலே பிடிக்காதாம்.

8.       இவருடைய மரணம் தற்கொலையா கொலையா என்றே இன்னும் புரியாத புதிராக உள்ளது. இவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான விசிறிகள் பங்கேற்றனர். இவர் உடலுக்கு வந்த மலர்களை போட்டிப்போட்டுக்கொண்டு சூறையாடி ஒரு கலவரத்தையே ஏற்ப்படுத்தினர்.

9.       இவர் மரணத்திற்கு பிறகு நியூயார்க் நகரத்தில் ஒரு நாளுக்கு 12 பேர் விகிதம் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு விசிறி, “உலகின் மிக அழகான ஒன்றிற்கு இப்போது உயிர் இல்லாதபோது நான் மட்டும் வாழ்ந்து என்ன பயன்?” என்று கடிதம் எழுதி தற்கொலை செய்துள்ளார்.

10.   இவருடைய மருத்துவக்குறிப்புகள் அனைத்தும் 25000 டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.

11.   இவர் இறப்பதற்கு முன்னர் தன் கணவர் ஜோ டிமாகியோவிடம் ஒரு சத்தியம் வாங்கினார். அதன்படி, தான் சாகும் வரை சுமார் 20 வருடங்களுக்கு மார்லினின் கல்லறையை தினம் தினம் பூக்களால் அலங்கரித்தார் ஜோ!

12.   ஹாலிவுட் பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள் என்றால், ரசிகர்கள் ஏலத்தில் எடுக்க போட்டி போடுவார்கள். அதற்கு இந்தச் செய்தி  ஓர் உதாரணம். அதே போலவே,  River of No Return படத்தில் நடிக்கும்போது மர்லின் மன்றோ பயன்படுத்திய ஜீன்ஸை டாமி ஹில்ஃபிகர் 37000 டாலருக்கு ஏலத்தில் எடுத்தார்.  பின்னர் அவர் அதை, ப்ரிட்னி ஸ்பியர்ஸிற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டாராம். 

தா. நந்திதா
மாணவப்பத்திரிக்கையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்