Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தி காஞ்சூரிங்' டெரர் பேயின் வசூல் சாதனை!

வ்வளவு தான் வெரைட்டியான பேய்ப்படங்கள் வெளியானாலும் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டவே தட்டாது. பேய்ப்படப்பிரியர்களை அலறவைப்பதில் அவைகளும் தவறியதில்லை என்பதை மீண்டும் சொல்லிவிட்டது தி காஞ்சூரிங் 2.

2013-ம் ஆண்டு வெளியான  “தி காஞ்சூரிங்”(முதல்பாகம்) திரைப்படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. வெறும், 20 மில்லியன் டாலர் பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டு, 320 மில்லியன் டாலர் ஜாக்பாட் அள்ளியது முதல் பாகம்.

தொடர்ந்து “தி காஞ்சூரிங் 2” கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. இந்தப் படம் 40 மில்லியன் பட்ஜெட்டில் உருவானது. இன்று வரை உலகளவில் 90 மில்லியன் வரை வசூலித்துவிட்டது. இந்தியாவில் மட்டும் முதல் நாள் 5.25கோடியும், இரண்டாம் நாள் 6.50கோடியும் வசூல் சாதனை படைத்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20 கோடிரூபாய் வசூலித்திருக்கிறது இந்த டெரர் காஞ்சூரிங். குறிப்பாக சென்னையில் மட்டும் 1கோடி வசூல் என்று சொல்லப்படுகிறது.   இந்திய அளவில் 900 திரையரங்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காஞ்சூரிங்குடன் வெளியான அன்று அமிதாப் பச்சன் நடித்த டீன் (TE3N) முதல் நாள் 2.61கோடியும், காஜல் அகர்வால் நடித்த டூ லஃஸோன் கி ககானி 1.03 கோடியுமே முதல் நாள் வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்திய ஸ்டார் நடிகர்களின் படங்களையே ஓவர்டேக் செய்துவிட்டதால் பெரும் ஆச்சரியத்தில் இருக்கின்றன திரையுலக வட்டாரங்கள்.

ஜங்கிள் புக், கேப்டன் அமெரிக்கா, எக்ஸ் மேன், பேட்மேன் Vs சூப்பர் மேன் , குங்பூ பாண்டா உள்ளிட்ட பல படங்கள் இந்தியாவில் ரிலீஸாகி பெரும் தொகையை வசூலித்து வருவது தொடர்கதையாகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!