பேட்மேன் Vs சூப்பர்மேன்! கற்பனையில் உச்சத்தை தொட்ட ஹாலிவுட்

ஹாலிவுட் பட ரசிகர்களை மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தது  "பேட்மேன்  vs சூப்பர்மேன்: டான் ஆப்  தி ஜஸ்டிஸ் ".

ஃ சேக் ஸ்நைடர் இயக்கத்தில் 25 மார்ச் மாதம் 2016 யில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. பேட்மேனும்   சூப்பர்மேனும் திரையைப் பகிர்ந்து ஒன்றாய் நடித்தது இதுவே முதல் படம் என்பதே இதன் ஹைலைட்.

இது ஜூன் 13, 2013 யில் வெளிவந்த "மேன் ஆப் ஸ்டீல் " படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டது. இந்த படங்கள் முழுக்க முழுக்க DC என்னும் நிறுவனத்தின் படக்கதைகளில் வரும் காமிக் கதாபாத்திரங்களின் அடிப்படையில் படமாக்கப்பட்டது .

இந்த படத்தின் அடுத்த தொடர்ச்சியாக உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் "ஜஸ்டிஸ் லீக் ".  அந்த படத்தின் ட்ரெய்லர் ஜூலை மாதம் 23, 2016 யில் யூ டுயூப் இணையதளத்தில் வெளிவந்து ஏராளமான பார்வைகளை அள்ளியது.

DC படக்கதை ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவும் இந்த டிரைலரில், பேட்மேன் உலகின் உள்ள (வொன்டர் வுமன், அக்வா மேன் , சைபோர்க் , ஃப்ளாஷ் ) போன்ற மற்ற சூப்பர் ஹீரோக்களை ஒன்று சேர்த்து ஸ்டெப்பேன் வூல்ப் மற்றும்  இன்னும் வில்லனின் பாராடீமன்ஸ்  படையை எதிர்த்து உலகை காப்பாற்ற குழு திரட்டுகிறது என்று படத்தின் தகவல்களை பார்வையாளர்களுக்கு தந்தது.

அதிக எதிர்பார்ப்புகளைப் பெற்று படப்பிடிப்பில் இருக்கும் இந்த படம் நவம்பர் மாதம் 17, 2017 இல் திரையரங்குகளில் வெளிவரும் என்று திட்டமிடப்பட்டுள்ளது . இத்துடன் படத்தில் பங்குபெறும் அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் தனித்தனியாக படங்கள்  எடுக்கப் படுகின்றன.

அந்த வரிசையில் ஒண்டெர் வுமனுக்கான  படத்தின் ட்ரைலரும் ஜஸ்டிஸ் லீக் ட்ரைலருடனே வெளிவந்து  ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு டபுள் விருந்து அளித்தது .  

- ரா. ஹரி பிரசாத்
மாணவர் பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!