ஒண்ணு வருது.. ஒண்ணு வரலை! | Hangover and Insidious Sequel

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (30/08/2016)

கடைசி தொடர்பு:13:20 (30/08/2016)

ஒண்ணு வருது.. ஒண்ணு வரலை!

ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தி... முதலில் கெட்ட செய்தியை சொல்லிடுறேன்.

ஹேங் ஓவர் 4:

இளைஞர்களைக் கவரும் அடல்ட் காமெடியாக பட்டையை கிளப்பிய படம் 'ஹேங்ஓவர்'. இதன் மூன்று பாகங்களுமே பக்கா ஹிட். இந்தப் படத்தின் நான்காவது பாகம் விரைவில் வெளியாகிறது என இணையம் எங்கும் சுற்றி வந்தது ஒரு போஸ்டர். ஜாலியாக நாலு ஃப்ரெண்ட்ஸ் கிளம்பி அவுட்டிங்  செல்ல அங்கு ஓவராக குடித்து போதையில் ஓவராக ஆடியிருப்பார்கள். விடிந்து பார்த்தால் அந்த பிரச்சனைகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அவர்களைக் கலங்கடிக்கும். கடைசியில் அதை எல்லாம் சரி செய்து படத்தை சுபமாக முடிப்பார்கள். இது தான் ஹேங் ஒவர் படத்தின் வழக்கம். 

 

ப்ரெட்லி கூப்பர், எட் ஹெல்ம்ஸ், ஸக் கலிஃபியானகிஸ், கென் ஜியோங் என வழக்கமான அதே ஹேங்க்ஓவர் டீம் போஸ்டரில் இடம் பிடித்திருந்தது.  ஆர்வத்துடன் என்ன என்று சர்ச்சிய பின்பு தான் இது வெறும் புரளி எனத் தெரிந்தது. பாயம் யாரோ ஒரு ரசிகர் இந்த போஸ்டரை உருவாக்கி, மிக அவசரம் அதிகம் பகிரவும் எனப் போட #TheHangoverPart4 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியிருக்கிறது. அடுத்த பாகத்துக்கு இயக்குநர் டாட் பிலிம்ஸ் தான் மனசு வைக்க வேண்டும்

 

 

இன்சிடிஸ் 4:

இப்போ நல்ல செய்தி. 2011ல் ஜேஸ் வான் இயக்கத்தில் வெளியாகி மரண ஹிட்டடித்த படம் தான் 'இன்சிடிஸ்'. இரண்டு பாகங்களை ஜேம்ஸ் வான் இயக்க மூன்றாவது பாகத்தை படத்தின் கதாசிரியர் லே வானெல்லே இயக்கினார். தற்போது இன்சிடிஸின் அடுத்த பாகம் வெளியாகவிருக்கிறது. இந்த பாகத்தை இயக்கப் போவது ஆடம் ராபிடெல். படம் அக்டோபர் 20, 2017ல் வெளியாகவிருக்கிறது.

படத்தின் கதை இரண்டு பாகங்களுக்கான லிங்க்காக இருக்குமாறு எழுதியிருக்கிறார் லே வானெல். எலிஸ் கதாப்பாத்திரம் தான் அந்த இணைப்பு. இன்சிடிஸ் 3ம் பாகம் மற்றும் முதல் பாகம் இரண்டையும் இணைக்கும் புள்ளியாக இன்சிடிஸின் இந்த பாகம் இருக்கும் என்கிறார் இயக்குநர் ஆடம் ராபிடெல்.

-பா.ஜான்ஸன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்