ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர்! 

நடிகர், இயக்குநர், மார்ஷியல் ஆர்ட் கலைஞர் என்று பன்முகத்திறன் கொண்ட ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. The Academy of Motion Picture Arts and Sciences, நேற்று இதை அறிவித்தது. 

ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி, எட்டு வயதிலிருந்து கலைத்துறையில் இருக்கிறார். 62 வயதாகும் இவர் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். வாழும் சண்டைக்கலைஞர்களில் அதிக சண்டைக் காட்சிகளில் நடித்தவர் என்ற சாதனை நிகழ்த்தியவர். ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும்போது ஆங்கிலம் தெரியாமல் இருந்தார். 

ஆஸ்கரைப் பொறுத்தவரை வாழ்நாள் சாதனையாளருக்கான விருது, தனி விழாவாகத்தான் நடைபெறும். நவம்பரில் லாஸ் ஏஞ்சலீஸில் நடக்கும் விழாவில் இந்த ஆஸ்கர் விருது இவருக்கு வழங்கப்படும். இவருடன் ஆவணப்பட இயக்குநர் ஃப்ரெட்ரிக் வைஸ்மேன், ப்ரிட்டிஷ் எடிட்டர் அன்னே. வி. கோட்ஸ், லின். ஸ்டால்மாஸ்டர் ஆகியோரும் இந்த விருதைப் பெறுகிறார்கள். 

-சத்ரியன் 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!