Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நோலனின் முதல் வரலாற்று படத்தில் உடைகிறது 5 மில்லியன் டாலர் கப்பல் #Dunkirk #Updates

304 நாட்கள் இருக்கின்றன க்ரிஸ்டோஃபர் நோலனின் அடுத்த படம் 'டன்கிர்க்' வெளியாக. 

 

இரண்டாம் உலகப்போரின் போது ஒருகட்டத்தில், வடக்கு ஃப்ரான்ஸின் டன்கிர்க் என்ற இடத்தில், பெல்ஜியம்-பிரிட்டன்-ஃப்ரான்ஸ் படைவீரர்களை ஜெர்மன் வீரர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். எட்டுநாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அங்கிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. இதுதான் டன்கிர்க் வெளியேற்றம் என்ற நிகழ்வு. இதைத் தான் சினிமாவாக்கிக் கொண்டிருக்கிறார் நோலன். முந்தைய படத்தைப் போலவே இதற்கும் ஒளிப்பதிவு ஹாய்ட் வேன் ஹாய்டமா, இசை ஹான்ஸ் ஸிம்மர் தான். இவை அனைத்தும் நோலனை தொடர்ந்து ஃபாலோ செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்... படம் பற்றி தெரியாத டீட்டெயில்ஸ் கீழே....

* இதுவரை நோலன் எடுத்திருக்கும் ஒன்பது படங்களில் பேட்மேன் பிகின்ஸுக்குப் பிறகு தொடர்ந்து ஆறு படங்களின் நடித்தவர் மைகேல் கைன் (Michael Caine). இந்தப் படத்தில் அவர் இல்லை. நோலன் படத்தில் பெரும்பாலும் மெய்ன் லீடுக்கோ, அல்லது எதாவது ஒரு கதாப்பாத்திரத்திற்கோ இறந்து போன மனைவி கண்டிப்பாக இருக்கும். அதுவும் இதில் இருக்க வாய்ப்பிலை .

* 'ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்' படத்துக்காக சிறந்த துணைநடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற மார்க் ரைலன்ஸ், நடிகர், இயக்குநர் என ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆன நடிகரும் இயக்குநருமான கென்னத் முதல் புதுமுகங்கள் ஃபியோன் வொயிட்ஹெட், ஜேக் லோடென், அனிருன் பர்னார்ட், ஹாரி ஸ்டைல்ஸ் வரை வெரைட்டியான நடிகர்களை பிடித்திருக்கிறார். 

* இதில் ஹாரி ஸ்டைல் ஒன் டைரக்‌ஷன் என்ற பிரபலமான பேண்டைச் சேர்ந்த பாடகர். அவரையும் விட பிரபலமானது அவரது நீளமான முடி. படத்துக்காக இவரை அழைத்த நோலன் முதலில் செய்தது அவரின் தலையில் மிலிட்டரி கட்டிங் போட்டது தான். கொஞ்சம் பிரபலம் என்பதால் இவரின் புகைப்படங்கள் மட்டும் அடிக்கடி இணையங்களில் வெளியான படியே இருந்தது. ஆனால் அது இனி நடக்காது. காரணம் அவரது ரோல் முழுவதும் படம்பிடிக்கப்பட்டு அவருக்கு டாட்டா காட்டிவிட்டார் நோலன். " படத்தின் இறுதி வடிவத்தைக் காண காத்திருக்க முடியவில்லை" என ட்வீட்டைத் தட்டிவிட்டு கிளம்பியிருக்கிறார் ஹாரி.

* இரண்டாம் உலகப்போர் காலம், கடல் பகுதியில் ஷூட்டிங், போர் காட்சிகள் நிறைய இருக்கும் அதனால் கிராஃபிக்ஸுக்கு எக்கச்சக்க வேலை இருக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. நோலனின் ஸ்பெஷலே நிஜம் அல்லது நிஜத்துக்கு நெருக்கமான விஷயங்களைக் காட்டுவது தான். இன்டர்ஸ்டெல்லர் படத்துக்காக ஒரு ஸ்பேஷ்ஷிப் தேவைப்பட்ட போது அதை அவர் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் செய்யவில்லை. ஒரு லைஃப் சைஸ், அதாவது நிஜமான ஒரு ஸ்பேஷ்ஷிப்பை உருவாக்கினார். அதே தான் டன்கிர்க் படத்துக்கும். இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட கப்பல்களையும் படத்தில் பயன்படுத்துகிறார் நோலன். படத்தின் பட்ஜெட்டிலிருந்து 5 மில்லியன் டாலரை ஒதுக்கி ஒரு வின்டேஜ் ஜெர்மன் லுஃப்ட் வேஃப் ஃபைட்டர் கப்பலை வாங்க இருக்கிறார். எதற்கு தெரியுமா? அது உடைந்து நொறுங்குவது போல் படம் பிடிக்க.

* அதற்காக படத்தில் எந்த எஃப்க்டும் பயன்படுத்தவில்லையா என்று நினைக்க வேண்டாம். இத்தனை பெரிய படத்துக்கு கண்டிப்பாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தேவைப்படும் தானே. 300, மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் படங்களில் பணியாற்றிய ஆண்ட்ரூ ஜாக்சன் தான் விஷுவல் எஃபக்ட்ஸ் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.

* நோலனின் முதல் திரைப்படம் ஃபாலோயிங் மற்றும் இன்செப்ஷன் படங்களுக்கு மட்டுமே நோலனே கதையும் எழுதியிருப்பார். மற்றது எல்லாம் அவரது சகோதரர் ஜோனதனோ அல்லது வேறு யாரோ எழுதியிருப்பார்கள். இப்போது மூன்றாவது முறையாக 'டன்கிர்க்' படத்துக்கு கதை எழுதி தனிஒருவனாக களம் இறங்கியிருக்கிறார். 

* வழக்கமாக மற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து படத்தை தயாரிப்பவர், இந்தப் படத்தை தன் மனைவி எம்மா தாமஸுடன் இணைந்து நடத்தும் 'சின்காப்பி' நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படத்தை வெளியிடுகிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். 

* ஃப்ரான்ஸ், ஹாலந்த், லண்டன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. 

* ஐமாக்ஸ் மற்றும் 65எம்.எம் என இரு முறையிலும் படமாக்கப்படும் 'டன்கிர்க்' படத்தை ஜூலை 21, 2017ல் வெளியாகவிருக்கிறது. ஐம் வெயிட்டிங் சொல்லிக் காத்திருப்பதைத் தவிர நமக்கு வேறுவழி இல்லை.

-பா.ஜான்சன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்