எமிலி ப்ளன்ட்டின் ஒன் வுமன் ஷோ. நாவலுக்கு ஈடு கொடுக்கிறதா திரைப்படம். #TheGirlOnTheTrain #படம் எப்படி

தினமும் நீங்கள் பயணிக்கும் ஒரு பாதையில், உங்கள் வாழ்க்கையில் கடந்தவர்களை பார்க்கும் சூழல் உருவானால் எப்படி இருக்கும்.?ரேச்சல்,மேகன்,அன்னா இந்த மூன்று பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், அவர்கள் வாழ்வை இணைக்கும் ஒரு மையப்புள்ளி, இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் தி கேர்ள் ஆன் தி டிரெய்ன் திரைப்படம். 


கணவர் டாமை விவாகரத்து செய்துவிட்டு, தனியாக வாழ்ந்து வருகிறாள் ரேச்சல்.டாம், தற்போது அன்னாவை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.அன்னாவின் வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்கிறார் மேகன்.எதன் மீதும் நம்பிக்கை இல்லாத மேகன், தன் கணவர் ஸ்காட்டுக்குத் தெரியாமல், சிலருடன் பழகுகிறார். மேகனும், அன்னாவும் ஒரே இடத்தில் வசித்து வருகிறார்கள்.

தன் தோழியுடன் வசித்து வரும் ரேச்சல், போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் வேலையை இழந்துவிடுகிறார்.தினமும் ரயிலில் செல்வது மட்டுமே, ரேச்சலின் வாடிக்கை.ஒருநாள் அப்படி செல்லும் போது, மேகன் வேறொருவருடன் இருப்பதை காண்கிறாள். ஒரு உத்வேகத்தில் ரயிலில் இருந்து இறங்கி செல்கிறாள் ரேச்சல். யாரோ ரேச்சலைக் காயப்படுத்திவிட்டு செல்கிறார்கள். மேகன் மாயமாகிறாள். மேகன் நிலை என்ன? மேகனைக் கொன்றது யார்? மேகன் கணவர் நல்லவரா? ரேச்சல் தான் கொலை செய்தாரா? டாம் எப்படிப்பட்டவன்? போன்ற கேள்விகளுக்கு சற்றே சுற்றியடித்து பதில் தருகிறது கேர்ள் ஆன் தி டிரெய்ன் திரைப்படம்.


படம் முழுக்க வியாபித்திருப்பது ரேச்சலாக வரும் எமிலி பிளன்ட். போதைப் பழக்கத்துக்கு அடிமையானவராக;கணவன் இல்லாமல் ஏங்கித் தவிப்பவராக; நினைவு இழந்து வாடுபவராக ;உண்மைக்காக போராடுபவராக என ஒவ்வொரு காட்சியும் அவ்ர்வளவு நேர்த்தி. அடுத்த ஆண்டு ஆஸ்கரில் எமிலியின் பெயரை தற்போதே பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்ஸ். 


2015-ம் ஆண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர் பௌலா ஹாக்கின்ஸ் எழுதி ஹிட் அடித்த நாவலான தி கேர்ள் ஆன் தி டிரெய்னை தழுவி படமாக எடுத்து இருக்கிறார்கள். நாவலில் வரும் லண்டனுக்கு பதில், கதை நியூ யார்க்கில் நடக்கிறது.நாவலைப் படித்தவர்களுக்கு கதை பெரும் ஏமாற்றம். பக்கத்துப்பக்கம் கதை நகர்வில் கில்லியாய் இருந்த ஒரு த்ரில்  நாவலை திரைப்படமாக சொதப்பி வைத்து இருக்கிறார்கள் என்கிறார்கள் விமர்சகர்கள்

நாவல் படிக்காத நபர்களுக்கு, சற்றே குழப்பம் வரும் அளவுக்கு காட்சி அமைப்புகள் இருந்தாலும், நல்ல ஒரு ஸ்லோ த்ரில்லர் ஃபீலை கண்டிப்பாக இந்தப் படம் தரும் 

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!