Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸ்கர் விருது விழாவின் 6 சுவாரஸ்யங்கள்! #OscarHighlights

ஹாலிவுட்டின் பெருமைக்குரிய விருது ‘ஆஸ்கர்’. 89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி காலை 7 மணிக்குத் தொடங்கியது. ஆனால் அவர்களுக்கு தென்றல் தீண்டும் மாலைப் பொழுது. கலிஃபோர்னியாவில் உள்ள டால்பி திரையரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கம்போல ரெட் கார்பெட் ஷோ, கலை நிகழ்ச்சி, யாரெல்லாம் விருது பெறப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது ஆஸ்கர் விழா. 

ஆஸ்கர் விருது சுவாரஸ்யங்கள்

ஆஸ்கர் விருது மட்டுமே ஒட்டுமொத்த உலக மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்கர் விருதில் சிறந்த நடிகராக லியோனார்டோ விருது பெற்றதும், பருவநிலை சார்ந்து அவர் பேசிய வார்த்தைகளும் பிரபலமானது. எப்போதுமே, ஆஸ்கர் மேடையில் வெற்றியாளர்கள் பேசுவது வைரலாகும். அதேபோல, இந்த முறையும் ஆஸ்கர் மேடையில் சில சுவாரஸ்யங்கள் அரங்கேறின.

2017ம் ஆண்டிற்கான 89வது ஆஸ்கர் விருதின் முழுமையான பட்டியல்: 

 

வ.எண் பிரிவு படங்கள் வெற்றியாளர்கள்
1 சிறந்த படம் மூன் லைட் அடலே ரொமன்ஸ்கி
2 சிறந்த அயல்நாட்டு மொழி திரைப்படம் தி சேல்ஸ்மேன் (ஈரான்) அஸ்ஹர் ஃபர்ஹாடி
3 சிறந்த அனிமேஷன் திரைப்படம் ஜூடோபியா பைரான் ஹாவர்ட், ரிச் மூர்
4 சிறந்த ஆவணப்படம் ஓ.ஜெ: மேட் இன் அமெரிக்கா எஸ்ரா எடேல்மேன்
5 சிறந்த குறும்படம் சிங் கிரிஸ்டோஃப்டீக் , அன்னா உட்வர்டி
6 சிறந்த குறும்படம் (அனிமேஷன்) பைபர் அலன் பரில்லோரா
7 சிறந்த இயக்குநர் லா லா லேண்ட் டாமின் சாஸெல்லே
8 சிறந்த நடிகர் மான்செஸ்டர் பை தி சீ கேஸி ஆஃப்லெக்
9 சிறந்த நடிகை லா லா லேண்ட் எம்மா ஸ்டோன்
10 சிறந்த உறுதுணை நடிகை பென்சஸ் வயோலா டேவிஸ்
11 சிறந்த உறுதுணை நடிகர் மூன்லைட் மஹெர்சலா அலி
12 சிறந்த திரைக்கதை மான்செஸ்டர் பை தி சீ கென்னத் லோனர்கன்
13 சிறந்த தழுவல் திரைக்கதை மூன்லைட் பாரி ஜெக்கிங்ஸ், டாரெல் ஆல்வின் மெக்கிரானி
14 சிறந்த ஒளிப்பதிவு லா லா லேண்ட் லினஸ் சண்ட்ஜர்ன்
15 சிறந்த பின்னணி இசை லா லா லேண்ட் ஜஸ்டின் ஹர்விட்ஸ்
16 சிறந்த பாடல் லா லா லேண்ட் (‘சிட்டி ஆஃப் ஸ்டார்’) - ஜஸ்டின் ஹர்விட்ஸ், ஜஸ்டின் பால்
17 சிறந்த ஒலித்தொகுப்பு அரைவல் சில்வியன் பெல்மேர்
18 சிறந்த எடிட்டிங் ஹாக்‌ஷா ரிட்ஜ் ஜான் கில்பர்ட்
19 சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் தி ஜங்கிள் புக் ராபர்ட் லெகாடோ, அடம் வால்டஸ்
20 சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு லா லா லேண்ட் டேவிட் வாஸ்கோ
21 சிறந்த ஒலிக்கலவை ஹாக்‌ஷா ரிட்ஜ் கெவின் ஓ கானெல், ஆண்டி ரைட்
22 Best Documentary Short Subject The White Helmets Orlando Von Einsiedel and Joanna
23 சிறந்த ஒப்பனை சூசைட் ஸ்குவாட் அலெஸாண்ட்ரோ பெட்ரோலாஸி, கியோர்கியோ
24 சிறந்த ஆடை வடிவமைப்பு பெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் காலின் அட்வுட்

ஆஸ்கர் ஹைலைட்ஸ்: 

ஆஸ்கர் விருது சுவாரஸ்யங்கள்

லவ்லி ப்ரியங்கா முதல் வாவ் ஜாக்கி சான் வரை ஆஸ்கர் ரெட் கார்ப்பெட் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு.. க்ளிக் செய்க

 சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதினை அறிவிக்க பிரபல இயக்குநரும், நடிகருமான வாரன் பீட்டி மேடைக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் தரப்பட்ட கவரில் ‘லா லா லேண்ட்’ படத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது. எனவே, சிறந்த படமாக ‘லா லா லேண்ட்’ படத்தை அறிவித்தார்.  இப்படத்தின் தயாரிப்பாளரான ஜோர்டன் விருதினைப் பெற்றுவிட்டு, மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது, ஆஸ்கர் விருது குழுவிலிருந்து இருவர் மேடைக்கு வந்தனர். அறிவிப்பாளருக்கு சிறந்த படத்துக்குப் பதிலாக, சிறந்த நடிகைக்கான கவர் தரப்பட்டதாக குழப்பத்தைப் புரியவைத்தனர். உடனே பரபரப்பைப் புரிந்துகொண்ட ‘லா லா லேண்ட்’ தயாரிப்பாளரே ‘மூன் லைட்’ படக்குழுவினரை மேடைக்கு அழைத்தார். ஆஸ்கர் விருது வழங்குவதில் குளறுபடி ஏற்படுவது இதுவே முதன்முறை. 

 ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அதிபர் டிரம்ப் விதித்த தடையை எதிர்க்கும் விதமாக, பல நடிகர்கள் நீல நிற ரிப்பன் அணிந்து விழாவுக்கு வந்திருந்தனர். நீல நிறம் சிவில் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம்.

 ‘மூன் லைட்’ படத்தில் போதை மருந்து டீலராக வந்து மிரட்டியவர் மஹெர்சலா அலி. இவருக்கே சிறந்த துணை நடிகருக்கான விருது தரப்பட்டது. ஸ்பெஷல் என்னவென்றால், நடிப்புக்காக ஆஸ்கர் விருது பெறும் முதல் முஸ்ஸீம் இவரே. 

 சிறந்த வெளிநாட்டுப் படமாக தேர்வான ‘தி சேல்ஸ் மேன்’ படத்தின் இயக்குநர் அஸ்ஹார் ஃபர்ஹாடி விருது விழாவுக்கு வரவில்லை. இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு ட்ரம்ப் தடை விதித்ததே, அந்த இயக்குநர் விழாவைத் தவிர்த்ததற்கான காரணம். அவருக்குப் பதில் மற்றொருவர் விருது பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த விழாவில் இயக்குநர் ஃபர்ஹாடி அனுப்பிய அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில், “இன்று இரவு உங்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாததற்கு வருந்துகிறேன். என் நாட்டின் மீதும் என் மக்களின் மீதும் மரியாதை வைத்திருக்கிறேன். அதனால்தான் அங்கு வரவில்லை. ஆறு இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் சட்டம் நிச்சயம் மனிதத் தன்மையற்றது” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையை வாசிக்கும்போதே கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது. 

 நகைச்சுவையாக பேசி ஒட்டுமொத்த விருது வழங்கும் விழாவையும் கலகலப்பாக்கினார் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல். நிகழ்ச்சி தொடங்கிய பத்தாவது நிமிடமே, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வம்புக்கு இழுத்தார். நாடு இரண்டாகப் பிளந்துகிடப்பதாகவும், ஒற்றுமை கட்டாயம் வேண்டும் என்றும், ட்ரம்பின் இனவெறி கண்டிக்கத்தக்கது என்றும் காமெடியில் பேசி அப்ளாஸ் அள்ளினார். இந்த மாதிரியான நேரடித் தாக்குதல்கள் ஆஸ்கர் மேடைக்குப் புதிதல்ல.

 சிறந்த துணை நடிகர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட  நடிகர்களில் ஒருவர் இந்திய வம்சாவளி நடிகர் டேவ் படேல். ‘லயன்’ படத்துக்கு நிச்சயம் தனக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாயுடன் விழாவுக்கு வந்திருந்தார். ஏமாற்றமே என்றாலும் துணைநடிகருக்கான விருது வென்ற மஹெர்சலா அலிக்கு வாழ்த்துச் சொல்லி, அவரைக் கட்டித்தழுவியது, அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. 

ஆஸ்கர் விருது ஹைலைட்ஸ்

பெஸ்ட் சாய்ஸ்:

பைபர் : (சிறந்த அனிமேஷன் குறும்படம்) 

‘பயப்படுகிற எந்த விஷயத்தையும் கத்துக்கவே முடியாது. துணிஞ்சா தான் விடை கிடைக்கும்’ என்பதை கடல் ஓரத்தில் வாழும் சாண்ட் பைபர் பறவையைக் கொண்டு, ஜாலியாக மெசேஜ் தட்டிவிடும் அனிமேஷன் குறும்படம் தான் ‘பைபர்’. ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய அனிமேஷன் நிறுவனமான பிக்ஸார் தயாரிப்பு... குறும்படத்தை பார்த்து ரசிக்கவும் மேலும் படிக்கவும் க்ளிக்குக!

சூசைட் ஸ்குவாட்: (சிறந்த ஒப்பனை)

வில்லன்களே சூப்பர் ஹீரோக்கள். தப்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வில்லன்கள், அவர்களை விட பெரிய வில்லனுடன் சண்டை போடும் வில்லனுக்கெல்லாம் வில்லன் படம் ‘சூசைட் ஸ்குவாட்’. காமெடியும், அதிரடியுமாக செம ரகளையான படம்... படிக்க: 

தி ஜங்கிள் புக்: (சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் )

மனித இனத்தைச் சேர்ந்த மெளக்லியை, தன் மகனாக வளர்க்கிறது பெண் ஓநாய் ராக்‌ஷா. காட்டுக்குள் வளரும் மெளக்லியால் மிருகங்களுக்கு ஆபத்து என்று கொல்லத் துடிக்கும் புலி ஷேர்கான். மெளக்லி காட்டை விட்டு வெளியேறினானா?, “பேட் பாய்” ஷேர்கானின் கதி என்னவானது? என்ற ஜாலியான டிராவல் தான் ‘தி ஜங்கிள் புக்’... படிக்க: 

ஹாக்‌ஷா ரிட்ஜ்: (சிறந்த ஒப்பனை)

போரில் துப்பாக்கியும், பீரங்கியும், அசூர போர் வீரர்களும் மட்டும் போதாது. அன்பெனும் விதையும் வேண்டும். போரில் அடிபட்டு போராடும் வீரர்களைக் காப்பாற்றி போர்க்களத்திலேயே அவர்களுக்கு முதலுதவி செய்யும் அசாத்திய மனிதனின் கதை தான் ‘ஹாக்‌ஷா ரிட்ஜ்’.... படிக்க: 

-முத்து பகவத்- 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement