Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த ஸ்மர்ஃப்ஸ்ல எல்லோருக்கும் ஜோடி இருக்கு! - Smurfs: The Lost Village படம் எப்படி?

நீல நிற குட்டி க்யூட் ஸ்மர்ஃப்களின் ஜாலி கேலி அட்டகாசங்கள் தான் Smurfs திரைப்படமாக, கார்ட்டூனாக பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. 2011,2013 ஆண்டுகளில் சோனி நிறுவனம் ஸ்மர்ஃப்ஸ்களை வைத்து இரு லைவ் ஆக்ஷன் அனிமேஷன் படங்களை வெளியிட்டது. இந்த முறை முழுக்க முழுக்க அனிமேஷன் கதாப்பாத்திரங்களை வைத்து மட்டும் வெளியிட்டு இருக்கும் படம் தான் ஸ்மர்பஸ் : தி லாஸ்ட் வில்லேஜ். Smurfs: The Lost Village. 

ஸ்மர்ஃப்ஸ்

எப்போதும் போல் ஸ்மர்ஃப் கிராமத்தில் "லா லல்ல்ல்ல லல்லலா " பாடிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் ஸ்மர்ஃப்கள். செவப்பு குல்லா பாப்பா ஸ்மர்ஃப் , பீதியிலேயே இருக்கும் க்ளம்ஸி ஸ்மர்ஃப், படிப்ஸான ப்ரைனி ஸ்மர்ஃப், பலசாலியான ஹெஃப்ட்டி ஸ்மர்ஃ, கேக் செய்யும் பேக்கர் ஸ்மர்ஃப் என நீல நிற வாண்டுகளுடன், கிராமத்தின் ஒரே அழகியான ஸ்மர்ஃபெட்டும் வாழ்ந்து வருகிறாள். ஒத்தைப்பல் வில்லனான கார்கமல் , வழக்கம்போல் ஸ்மர்ஃப்களை அழித்து, அவற்றின் எஸ்சென்ஸை வைத்து உலகின் பெரிய மந்திரவாதியாக பிளான் செய்கிறான். அவனுக்கு உதவியாக பூனை அஸ்ரீயலும், பறவை மான்ட்டியும் இருக்கின்றன. ஆனால், இந்த முறை கார்கமல், அழிக்க இருப்பது பாப்பா ஸ்மர்ஃபின் கிராமத்தை அல்ல, புதிதாக கண்டுபிடித்த மற்றொரு கிராமத்தை. கார்கமல்லின் திட்டத்தை ஸ்மர்ஃப் கூட்டணி அழித்தார்களா என்பது தான் படத்தின் கதை. 

முழுக்க முழுக்க அனிமேஷன் படம் என்பதால், அசத்தி இருக்கிறது படக்குழு. ஃபைண்டிங் நீமோ, ஃபைண்டிங் டோரி, மோனாவைத் தொடர்ந்து இதில் வரும் தண்ணீர் காட்சிகளும் செம. அதே போல், கலர் மாறும் முயல் குட்டிகள், நடனமாடும் பூக்கள், புகைப்படம் எடுக்கும் வண்டுகள் என குழந்தைகளுக்காகவே பல கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

smurfs

இந்த பாகத்தில் ஸ்மர்ஃப் கிராம அழகி ஸ்மர்ஃபெட், இன்னும் அழகாக இருக்கிறார். அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரிக்கு பதிலாக, இந்த பாகத்தில் ஸ்மர்ஃபெட்டுக்கு குரலுதவி தந்து இருப்பவர் அமெரிக்க பாடகி டெமி லொவேட்டோ. கார்கமெல்லும், ஸ்மர்ஃப்களும் ஒருவழியாய் அந்த மற்றொரு ஸ்மர்ஃப் கிராமத்தை கண்டுபிடிக்க, அங்கு முழுக்க  பெண் ஸ்மர்ஃப் மட்டும் தான் இருக்கிறார்கள். இவர்கள் கிராமத்துக்கு பாதுகாப்பு அரண் சிவப்பு குல்லா பாப்பா ஸ்மர்ஃப் என்றால், புது கிராம பாதுகாப்புக்கு சிவப்பு குல்லா ஸ்மர்ஃப் வில்லோ. ஸ்மர்ஃப் வில்லோவுக்கு ஜூலியா ராபெர்ட்ஸ் குரலுதவி செய்திருக்கிறார். 

மினியேச்சர் டிராகன், இருளில் ஒளிரும் ரேடியம் முயல்கள், அந்தரத்தில் மிதக்கும் கடல், மசாஜ் செய்யும் புழு, நகத்தை ஷேப் செய்யும் நண்டு, ஸ்மர்ஃப்களைத் துவைத்தெடுக்கும் பூக்கள் என தங்கள் கற்பனைகளுக்கு விஷுவல் வடிவம் தந்த விதத்தில் தங்கள் தரத்தை மறுபடி காட்டியிருக்கிறார்கள். 'எனக்கு ட்ராகன் ரைடெல்லாம் வராது' 'நீ இதுக்கு முன்னால ட்ராகன்ல போயிருக்கியா?, அப்பறம் எப்படி, உனக்கு அது வருமா வராதானு தெரியும்?' என வசனங்கள் மூலமும் கவனிக்க வைக்கிறார்கள் எழுத்தாளர்கள் ஸ்டேச்சி ஹார்மன், பமிலா ரிபன். அதிகமாக பேசவைத்து சிரிக்க வைப்பதை விட இயல்பான காட்சிகள் மூலமே சிரிக்க வைக்கிறார் இயக்குநர் கெல்லி அஸ்புரி. 

 

 

சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ட்ரோல்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட ஸ்மர்ஃப்ஸ் கதாபாத்திரங்களை நினைவுபடுத்தும்படித்தான் கதாப்பாத்திரங்களை உருவாக்கி இருந்தனர். ட்ரோல்ஸ் அளவுக்கு இல்லையென்றாலும், படத்தின் சில காட்சிகள், குழந்தைகளோடு பெரியவர்களையும் கவரும் என்பது நிச்சயம். மண்ணுக்குள் நாலு ஸ்மர்ஃப்களும் சிக்கிக்கொள்ள, அதில் இருந்த வெளிவர முயல்கள் ஸ்மர்ஃப்களுக்கு உதவும். தொடர்ச்சியாக பத்து நிமிடங்கள் திரை அரங்கை குழந்தைகளின் சிரிப்பலை நிறைத்தது. இந்த வார வீக்கெண்டை குழந்தைகள் ஜாலியாக திரை அரங்கில் களிக்க ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் திரைப்படம் பெர்ஃபெக்ட் சாய்ஸ்.

எவ்வளவு யோசித்தும் புரியாத ஒரே விஷயம், இந்தப் படத்திற்கு ஏன் நமது சென்சார் போர்டு U/A கொடுத்து இருக்கிறது என்று தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்