Published:Updated:

அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விகடன் விமர்சனக்குழு
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மூன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற உலகப்புகழ் படம் அவதார். இப்படத்தின் வெற்றியும் வரவேற்பும் நாமறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாகம் எப்போது என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

2017 கிறிஸ்துமஸ் தினத்தில் அவதார் 2 படத்தை எதிர்பார்க்கலாம் என ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 டிசம்பர் மாதம் வெளியான அவதார், உலகம் முழுவதிலும் மாபெரும் வெற்றியடைய, இன்று வரை எந்த படமும் தொட முடியாத வசூல் சாதனையைப் படைத்தது.

அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கன்னடியன் என்டர்டெயின்மென்ட் கம்பெனியின்  ’தி ஃபர்ஸ்ட் பிளைட்" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேமரூன் 2017 டிசம்பரில் அவதார் 2 வெளியாகும் என தெரிவித்தார்.தற்சமயம் படப்பிடிப்பில் இருந்துவரும் அவதார் படம் மூன்று பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் ஏற்கனவே வெளியான நிலையில் இரண்டாம் , மூன்றாம் பகுதிகள் முடிவடைந்தவுடன் 2017 முதல் 2019 வரை அடுத்தடுத்து ஆண்டுகளில் படங்களை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு படமும் தனித் தனி என்றாலும், அது ஒரு மிகப் பெரியகதையைக் கொண்டது எனவும் தெரிவித்தார். நீண்ட நாட்களுக்குப்  பிறகு அவதார் 2 பற்றிய செய்தி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.