Published:Updated:

" 'ஜிகில்ராணி' பூஜா, 'டெட்பூல்-2' டிரெய்லர், முதல்முறை இணையும் அமிதாப் - ஆமிர், நியூ 'ஸ்டார் வார்ஸ்'!" #WoodBits

" 'ஜிகில்ராணி' பூஜா, 'டெட்பூல்-2' டிரெய்லர், முதல்முறை இணையும் அமிதாப் - ஆமிர், நியூ 'ஸ்டார் வார்ஸ்'!" #WoodBits
" 'ஜிகில்ராணி' பூஜா, 'டெட்பூல்-2' டிரெய்லர், முதல்முறை இணையும் அமிதாப் - ஆமிர், நியூ 'ஸ்டார் வார்ஸ்'!" #WoodBits

'டெட் பூல் 2' டிரெய்லர் :

ரியான் ரெனால்ட்ஸ் நடிப்பில் 2016- ம் ஆண்டு வெளிவந்து பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற படம், 'டெட் பூல்'. மரண கலாய், மாஸ் சண்டைக் காட்சிகள் என கெத்தாகத் திரிந்துகொண்டிருக்கும் குணாதிசியங்களைக் கொண்ட வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமான இது, அனைவரையும் ஈர்த்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியிருக்கிறது. சமீபத்தில் வெளியான 'டெட் பூல்-2' போஸ்டர், 1983- ம் வருடம் வெளியான 'ஃப்ளாஷ் டான்ஸ்' திரைப்படத்தில் இருக்கும் ஒரு காட்சியின் ஸ்பூஃப் என நெட்டிசன்கள் ஷேர் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று வெளிவந்த 'டெட் பூல்-2' படத்தின் டிரெய்லரில்  'டாய் ஸ்டோரி' படத்தை கலாய்க்கும் ஒரு காட்சி உள்ளது. போஸ்டர், டிரெய்லர் என இரண்டுமே ரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்டும் வகையில் உள்ளது. 'டெட்பூல் மீட் கேபிள்' என்ற டைட்டிலில் இந்த டிரெய்லர் வெளியாகியுள்ளது. விரைவில் 'டெட் பூல் அண்டு கேபிள்' என்ற படம் தயாரிக்கப்படலாம் என்ற செய்திகளும் வருகின்றன. 'டெட் பூல்-2' மே 18- ம் தேதி வெளியாகவுள்ளது.

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடர் எழுத்தாளர்களின் 'ஸ்டார் வார்ஸ்' தொடர் :

" 'ஜிகில்ராணி' பூஜா, 'டெட்பூல்-2' டிரெய்லர், முதல்முறை இணையும் அமிதாப் - ஆமிர், நியூ 'ஸ்டார் வார்ஸ்'!" #WoodBits

ஆங்கிலத் தொலைக்காட்சி தொடரான 'கேம் அஃப் த்ரோன்ஸ்' உலகளாவிய ரசிகர்களைக் கொண்டது. ஃபேஸ்புக், ட்விட்டரின்  இத்தொடரைப் பற்றியும் அதன் திடீர் ரசிகர்களைப் பற்றியும் பல மீம்ஸ்கள் குவிந்திருக்கின்றன. 2011-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர் 2019-ல் முடிவடையும் என ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் எழுத்தாளர்கள் டேவிட் பினோயிஃப் மற்றும் டி.பி.வீஸ் ஆகிய இருவரும் இணைந்து 'ஸ்டார் வார்ஸ்' தொடரை எழுத கமிட் ஆகியிருக்கிறார்கள். தற்போது இருக்கும் 'ஸ்டார் வார்ஸ்' ட்ரியாலஜி சீரிஸ் 'எபிசோட் IX' என்ற பெயரில் 2019- ம் ஆண்டு முடியவுள்ளது. 'தி லாஸ்ட் ஜேடி' படத்தை இயக்கிய ரியான் ஜான்ஸன், இந்தப் புதிய 'ஸ்டார் வார்ஸ்' தொடரை இயக்கவுள்ளார். டிஸ்னீ  நிறுவனம் இதைத் தயாரிக்கிறது.

'ஆமி' திரைப்படத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!

லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாகவும், எழுத்தாளர் கமலா சுரையா வாழ்க்கையைத் திரித்துப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, மலையாளத்தில் தயாராகியுள்ள 'ஆமி' திரைப்படத்திற்குத்  தடை கோரி வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில், கேரள உயர்நீதி மன்றம் படத்திற்கு தடை வழங்க மறுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்யும்படி மத்திய தணிக்கைக் குழு மற்றும் மத்திய செய்தி மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தடை வழங்கமுடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இப்படம் பிப்ரவரி 9- ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 முதல்முறையாக இணையும் அமிதாப் - ஆமிர் : 

" 'ஜிகில்ராணி' பூஜா, 'டெட்பூல்-2' டிரெய்லர், முதல்முறை இணையும் அமிதாப் - ஆமிர், நியூ 'ஸ்டார் வார்ஸ்'!" #WoodBits

1839- ம் ஆண்டு  பிலிப் மெடோஸ் எழுதிய 'கன்ஃபஷன்ஸ் ஆஃப் ஏ தக்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது, 'தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்' திரைப்படம். 19- ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் தண்ணிகாட்டிய ஒரு கொள்ளைக் கூட்டத்தைப் பற்றிய இப்படத்தில், ஆமீர் கான், அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப், 'தங்கல்' பட புகழ் ஃபாத்திமா சனா ஷேக் ஆகியோர் நடித்து வருகின்றனர். 'தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்' படத்தை விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்குகிறார். அமிதாப், ஆமீர்கான் இருவரும் முதல்முறையாக இணைந்திருக்கும் இப்படம், நவம்பர் 7- ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

'ஜிகில்ராணி' பூஜா ஹெக்டே :

" 'ஜிகில்ராணி' பூஜா, 'டெட்பூல்-2' டிரெய்லர், முதல்முறை இணையும் அமிதாப் - ஆமிர், நியூ 'ஸ்டார் வார்ஸ்'!" #WoodBits

தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழைத் தொடர்ந்து  பாலிவுட்டில் ரித்திக் ரோஷனுடன் இணைந்து 'மொஹஞ்சதாரோ' படத்தில் நடித்தார். தெலுங்குப் பட உலகில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ராம் சரண் தேஜா, சமந்தா  நடிப்பில் உருவாகிவரும் 'ரங்கஸ்தலம்' படத்தில் 'ஜில் ஜில் ஜிகில் ராணி' என்ற பாடலுக்கு நடனமாடியிருக்கிறார், பூஜா. இப்படம், மார்ச் 30- ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.