Published:Updated:

இதுதான் அந்த ரத்தம் தெறிக்கும் ரயில் சேஸிங் கதையா க்ளின்ட் ஈஸ்ட்வுட்? 15:17 பாரீஸ் எப்படி இருக்கிறது?

அலாவுதின் ஹுசைன்
இதுதான் அந்த ரத்தம் தெறிக்கும் ரயில் சேஸிங் கதையா க்ளின்ட் ஈஸ்ட்வுட்? 15:17 பாரீஸ் எப்படி இருக்கிறது?
இதுதான் அந்த ரத்தம் தெறிக்கும் ரயில் சேஸிங் கதையா க்ளின்ட் ஈஸ்ட்வுட்? 15:17 பாரீஸ் எப்படி இருக்கிறது?

2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து பாரிஸ் சென்ற ரயிலில் நடக்கவிருந்த தீவிரவாதி தாக்குதலை தடுத்து நிறுத்திய மூன்று அமெரிக்கர்களின் வாழ்க்கையை பற்றிய  படம் தான்  க்ளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் தி  15:17 டு பாரிஸ் படத்தின் கதை.

 2015 ஆகஸ்ட் 15-ம் தேதி ஆம்ஸ்டர்டாம் ரயிலில் ஸ்பென்சர்ஸ் ஸ்டோன், ஆண்டனி ஸாட்லர், அலெக் ஸ்கார்லட்டோஸ் ஆகிய நிஜத்தில் இருக்கும் மூவரின் வீரச் செயலை அடிப்படையாகக்கொண்ட இப்படத்தில் அவர்களையே நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் க்ளின்ட் ஈஸ்ட் வுட். கிட்டத்தட்ட க்ளின்ட் ஈஸ்ட்வுட்டின் முதல் டாக்குடிராமா இது தான். 

சிறு வயது முதலே நண்பர்களான ஸ்பென்சர்ஸ் மற்றும்,  அலெக் ஸ்கார்லட்டோஸ் தங்கள் பள்ளியில் பயின்று வரும் ஆண்டனி ஸாட்லருடன் நட்புகொள்கிறார்கள். ஆசிரியர்களால் அடிக்கடி வெளியேற்றப்படும் இந்த மூவர், தங்கள் விடுமுறை நேரத்தில் ராணுவ பயிற்சி மேற்கொள்வதுபோல் விளையாடி வருபவர்கள்.  ஸ்பென்சருக்கு 'ஏடிடி' குறைபாடு உள்ளது அவனுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என ஆசிரியர் கூற அந்தப் பள்ளியிலிருந்து விடுப்பட்டு. ஸ்பென்சரும், ஸ்கார்லட்டொஸூம் பிரிந்து விடுகிறார்கள். இவர்கள் எப்படி மீண்டும் இணைந்தார்கள், பாரிஸ் நகருக்கு ஏன் வந்தனர், எப்படி ஃப்ரான்சின் உயரிய லீஜியன் விருதைப் பெறுகிறார்கள் என்ற கேள்விகளுக்கு நான் லீனியர் நேரேஷன்  மூலம் கதை சொல்லும் படம் தி 15:17 டு பாரிஸ்.

ஒரு உண்மை சம்பவத்திற்கென ஒரு திரைக்கதையையும் லீட் மற்றும் ஆஃப்டர் மாத் எழுதுவது பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதை எவ்விதத்திலும் பொருட்படுத்தாமல் இயக்குநர் தன் பாணியில் எடுத்திருக்கிறார். முதலில் வேறு நடிகர்களை வைத்து த்ரில்லர் சினிமாவாக எடுக்க நினைத்த ஈஸ்ட்வுட், பின்னர் என நினைத்தாரோ, உண்மை சம்பவத்தில் ஈடுபட்டவர்களையே நடிக்க வைத்துவிட்டார். கதை எந்தவொரு சுவாரஸ்யமோ, எதிர்ப்பார்ப்போ இல்லாமல் நகர மறுக்கிறது.  

ஹாலிவுட்டில் மாதாமாதம் ஒரு சூப்பர் ஹீரோ படம் வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த வேளையில் நிஜ ஹீரோக்களைப் பற்றிக் காட்டியது படத்தின் பெரிய ப்ளஸ், 87 வயதில் இயக்குநர் செய்யும் அட்ராசிட்டி செம.  சில இடங்களில் மட்டுமே பின்னணி இசை, கேண்டிட் ஷாட்ஸ் என படத்தின் ஓட்டத்திற்கு வலு சேர்க்கக்கூடிய அம்சங்கள் பெரிதாய் இல்லாததால் இப்படத்தை ஆவரேஜ் படமாகத்தான் காட்டுகிறது. படத்தின் கான்ஃபிலிக்ட் என்று சொல்லக்கூடிய தீவிரவாதி காட்சிகளோ அதைத் தடுக்க இவர்கள் மூவரும் மேற்கொள்ளும் விஷயங்களும் அந்தளவிற்கு நம்மை பாதிக்காத வகையில் இருப்பதும் பின்னடைவுகளாக இருக்கின்றன. இயக்குநரின் முந்தைய படமான 'சல்லி'யும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டது. ரசிகர்களிடம் அப்படம் பெரிதளவில் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

ஒரு ரெகுலர் க்ளின்ட் ஈஸ்ட்வுட் ரசிகனுக்கு இப்படம் சற்றுக் குறைவாகவே திருப்தி அளிக்கும்.

படத்தின் ட்ரெய்லரைக் காண