Published:Updated:

`Times Up'-க்கு ஆதரவு அளிக்காத கேட் மிடில்டன், பெண்களுக்கான பெண் இல்லையாம்!

`Times Up'-க்கு ஆதரவு அளிக்காத கேட் மிடில்டன், பெண்களுக்கான பெண் இல்லையாம்!

`Times Up'-க்கு ஆதரவு அளிக்காத கேட் மிடில்டன், பெண்களுக்கான பெண் இல்லையாம்!

`Times Up'-க்கு ஆதரவு அளிக்காத கேட் மிடில்டன், பெண்களுக்கான பெண் இல்லையாம்!

`Times Up'-க்கு ஆதரவு அளிக்காத கேட் மிடில்டன், பெண்களுக்கான பெண் இல்லையாம்!

Published:Updated:
`Times Up'-க்கு ஆதரவு அளிக்காத கேட் மிடில்டன், பெண்களுக்கான பெண் இல்லையாம்!

பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், 71-வது British Academy of Film and Television Arts (BAFTA) விருது வழங்கும் விழா, பிப்ரவரி 18 அன்று லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரைப்படம், சின்னத்திரை நாடகம், ரியாலிட்டி ஷோ, சாதனைச் சிறுவர்கள், வீடியோ கேம்ஸ் எனப் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இத்துடன், TimesUp போராட்டம், எம்மா வாட்சனின் சிறப்புக் காணொளி, கேட் மிடில்டனின் டிரஸ் கோட் சர்ச்சை, சிவப்புக் கம்பள விரிப்பில் போராட்டப் பெண்கள் என, சுவாரஸ்யமான பல சம்பவங்களும் அரங்கேறின.

 2017-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, பிரபலங்களின் கறுப்பு நிற ஆடைகளின் அணிவகுப்புடன் வெகுசிறப்பாக அரங்கேறியது. ஏஞ்சலீனா ஜோலி, ஜெனிஃபர் லாரன்ஸ், எம்மா ராபர்ட்ஸ், மார்கட் ராபி முதலிய பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். `டன்கிர்க்', `ஷேப் ஆஃப் வாட்டர்', `கோகோ' உள்ளிட்ட திரைப்படங்கள் பல்வேறு விருதுகளைத் தட்டிச்சென்றன.

கோல்டன் குளோப் விழாவைத் தொடர்ந்து BAFTA-விலும் கறுப்பு நிற ஆடைகள்தான் டிரஸ் கோட். `TimesUp' பிரசாரத்துக்கு ஆதரவு அளிக்கும்விதமாகப் பிரபலங்கள் அனைவரும் கறுப்பு நிறத்தில் ஆடை உடுத்தியிருந்தனர். ஆனால், `டச்சஸ் ஆஃப் கேம்பிரிட்ஜ்' duchess of cambridge எனப் போற்றப்படும் கேட் மிடில்டன், ஆலிவ் நிற ஆடையில் தோன்றியது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சாதாரண மனிதர்கள் முதல் பிரபலங்கள் வரை உலகின் பல இடங்களில் இந்தப் பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும்போது, ராஜவம்சத்தில் இருக்கும் ஒருவர் ஆதரவு அளிக்காததைக் கண்ட பொதுமக்கள், பல கேள்விகளையும் எதிர்ப்புகளையும் முன்வைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர் பெண்களுக்கான பெண் அல்ல என்றும், மற்றவர்களைவிட தான் தனியே தெரிய வேண்டும் என்பதற்காக இப்படி உடை அணிந்திருக்கிறார் என்றும் பல எதிர் பதிவுகள் சமூக வலைதளங்களில் குவிந்தன. உண்மையில் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் சமூகப் பிரச்னைகளில் ஈடுபடவோ, கருத்துகளைப் பதிவுசெய்யவோ அனுமதி இல்லை. அவர்களுக்கு, இறுதிச்சடங்குகளைத் தவிர மற்ற பொதுக்கூட்டங்களில் கறுப்பு நிற ஆடைகள் உடுத்தவும் அனுமதி இல்லை. ராஜவம்சமாக இருந்தாலும், அவர்களுக்கு ஏராளமான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. எனினும், தன் ஃப்ளோயி டிரஸ்ஸில் கறுப்பு நிற பெல்ட் அணிந்திருந்தார் கேட்.

பிரபலங்களின் பிரசாரத்துக்கு இடையில், `Sister's Uncut' எனும் அமைப்பைச் சேர்ந்த சில பெண்கள், கறுப்பு நிற டீ-ஷர்ட்டில் பர்ப்பிள் நிறத்தில் `TimesUp' எனும் வாக்கியம் பதித்த உடையை அணிந்து வித்தியாசமாகப் பிரசாரம் செய்தனர். அனைத்துப் பெண்களும் கைகோத்து தரையில் சாய்ந்து ``சகோதரிகள் அனைவரும் இணைந்துவிட்டோம். இனி எங்களை தோற்கடிக்க முடியாது'' என்று கோஷமிட்டு, தங்களின் ஆதரவை பதிவுசெய்தனர். இது அனைவரின் பார்வையையும் ஈர்த்தது. சிறிது நேரமே நடந்த இந்தப் பிரசாரம், அங்கு இருந்த பாதுகாவலர்களால் கலைக்கப்பட்டது.

வெளியூர் பயணத்தால் BAFTA-வில் கலந்துகொள்ள முடியாத எம்மா வாட்சன், காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். UK-ல் `Metoo', `TimesUp' போன்ற பிரசாரங்களைத் தொடங்கிவைத்தவர் எம்மா வாட்சன். அவர் ``TimesUp, பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை, பெண்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தவறாகச் சித்திரிக்கப்படுவதற்கான நேரம் முடிந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. அனைத்து இடங்களிலும், ஆண் - பெண் இருவரும் இணைந்து பெண்களுக்காகத் தோள்கொடுக்கும் நேரம் இது" என்று தன் காணொளியில் பதிவிட்டிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism