Published:Updated:

முன்னாடி ஹோட்டல்... இப்போ கப்பல்! எப்படியிருக்கிறது #HotelTransylvania3 ?

முன்னாடி ஹோட்டல்... இப்போ கப்பல்! எப்படியிருக்கிறது #HotelTransylvania3 ?

காமெடி காட்சிகளாலும், வண்ண வண்ண  ஆடைகளாலும் தப்பிக்கிறது இந்த சம்மர் வெக்கேஷன்.

முன்னாடி ஹோட்டல்... இப்போ கப்பல்! எப்படியிருக்கிறது #HotelTransylvania3 ?

காமெடி காட்சிகளாலும், வண்ண வண்ண  ஆடைகளாலும் தப்பிக்கிறது இந்த சம்மர் வெக்கேஷன்.

Published:Updated:
முன்னாடி ஹோட்டல்... இப்போ கப்பல்! எப்படியிருக்கிறது #HotelTransylvania3 ?

னிதர்களுக்கும், பூதங்களுக்கும் இடையே காலங்காலமாக ஓர் ஒப்பந்தம் உண்டு. எந்த வகையிலும் மனிதன் பார்த்திராத ஒரு பொருளை வைத்துக்கொண்டு பல நூற்றாண்டுகளாக மனிதன் விளையாடிக்கொண்டே இருக்கிறான். மனிதனுக்குத் தன்னை பயமுறுத்த எப்போதும் ஓர் ஆள் தேவை. அது மனிதனைவிடவும் அகோரமாக இருக்க வேண்டும். காலம் காலமாக குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்ட, ``மூணு கண்ணன் வாரான்; பேய் வந்துடும் " என மிரட்டித்தான் ஊட்டுவார்கள். அதன் அப்படியே உல்ட்டாதான் ஹோட்டல் டிரான்ஸில்வேனியாவின் கதைகள். #HotelTransylvania3

மனிதர்களுக்கு பயந்து பயந்து வாழ்கின்றன பூதங்கள். மனிதர்கள் எந்த நேரத்திலும் தங்களைக் கொன்றுவிடுவார்கள் என்கிற அச்சத்தில் இருக்கும் பூதங்களுக்கு, ஒரே அடைக்கலம ஹோட்டல் டிரான்ஸில்வேனியாதான். ஆம், மனிதர்களின் கால் தடம் கூட பதியாத ஒரு காட்டுக்குள் ஹோட்டல் ஒன்றை மான்ஸ்டர்களுக்காக மட்டுமே நடத்தி வருகிறது 540 வயதான கௌன்ட் டிராகுலா. கௌன்ட் டிராகுலாவின் மனைவி மார்த்தாவை மனிதர்கள் கொலை செய்துவிட, மனிதர்களை வெறுக்கிறார் கௌன்ட் டிராகுலா. டிராகுலாவின் மகள் மேவிஸுக்கு 118 வது (ஆம் 118) பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட நினைக்கிறார் டிராகுலா. மகளுக்கோ ஹோட்டலைவிட்டு வெளியே சென்று, மனிதர்களை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்று ஆசை. மகள் முன் பூதங்களையே மனிதர்களாகச் சித்திரித்து ஏமாற்றிவிடுகிறார் டிராகுலா. டிராகுலாக்களும், பூதங்களும் அங்கு வந்து ஜாலியாக டைம்பாஸ் செய்கிறார்கள். மனிதர்கள் என்றாலே மோசமானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறாள் மேவிஸ். மேவிஸுக்கு மூன்று பாகங்களிலும், குரலுதவி செய்வது செலினா கோம்ஸ் என்பதாலேயே, மேவிஸ் பேசுவது கூட பாடுவது போலவே இருக்கும். 

முதல் பாகத்தை (2012) விட இரண்டாம் பாகத்தில் (2015) காமெடிக் காட்சிகள் குறைவு என அலுத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியாய் வந்திருக்கிறது மூன்றாம் பாகமான ஹோட்டல் டிராஸில்வேனியா 3 : சம்மர் வெக்கேஷன். குழந்தைகளுக்கான அனிமேஷன் படத்தில் கூட காமெடி காட்சிகளை தேட வேண்டியிருக்கிறது. கழுதை மட்டுமல்ல டிராகுலாவும் தேய்ந்து கட்டெறும்பு ஆகும் என்பது போல் இருக்கிறது இந்த மூன்றாம் பாகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் பாகத்தில் டிராகுலாவின் அன்பு மகள் மேவிஸுக்கும், தவறுதலாக ஹோட்டல் டிரான்ஸில்வேனியாவுக்குள் நுழையும் மனிதன் ஜானிக்கும் காதல் மலர்கிறது. அட, கல்யாணம் கூட ஆகிறது. மேவிஸ் ஜானியை விட 100 வயதுதான் மூத்தவர் என்பது கூடுதல் செய்தி. 

இரண்டாம் பாகம் கதைக்கு என்ன செய்வது என யோசித்த குழு, கௌன்ட் டிராகுலாவுக்குத் தந்தை ஒருவரை வைத்து சில காட்சிகளை இணைத்தது. மேவிஸுக்கும், ஜானிக்கும் டென்னிஸ் என்ற அழகான ஆண் குழந்தை பிறக்கின்றது. பின் தொலைக்காட்சிகளில் வரும் பட்டிமன்றம் போல், மேவிஸ் புகுந்த வீட்டுக்குச் செல்ல வேண்டுமா இல்லை பிறந்த வீட்டிலேயே இருக்கலாமா எனக் கதை நீண்டது. பிறந்த வீட்டிலேயே இருக்கலாம் என்றால், டென்னிஸ் டிராகுலாவாக இருக்க வேண்டும். காமெடி காட்சிகள் குறைவு என்றாலும், க்ளைமாக்ஸில் அதகளம் செய்திருந்தார்கள். சரி, மூன்றாம் பாகத்தின் கதைக்கு வருவோம்.

Hotel Transylvania 3: Summer Vacation

கதைக்கு இனி எங்கே செல்வது என யோசித்த கதைக்குழு ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்குடன் ஆரம்பிக்கிறார்கள். ஆம், கௌன்ட் டிராகுலா நண்பர்களுடன் ரயிலில் புடாபெஸ்ட் செல்ல, அங்கு வரும் வேன் ஹெல்சிங், இவர்களைக் கொல்ல முடிவு செய்கிறார். வழக்கம் போல, டிராகுலா வென்றுவிட, எப்படியேனும் பழிவாங்குவேன் என சபதம் எடுக்கிறார்.

நிகழ்காலத்தில், ஹோட்டலில் வேலை செய்து போரடித்ததால், ஜாலியாகக் கப்பலில் சுற்றுலா செல்ல திட்டமிடுகிறாள் மேவிஸ். ஒட்டுமொத்த பூதக்கூட்டமும் அங்கு செல்ல, களைகட்டுகிறது. கப்பலின் கேப்டனாக எரிக்கா என்னும் பெண். (வேற யாரு வேன் ஹெல்ஸிங்கின் கொள்ளுப்பேத்திதான் )..

டிராகுலாவுக்கு எரிக்கா மேல் காதல் வருகிறது. வேன் ஹெல்ஸிங் டிராகுலாவை பழி தீர்த்ததா என்பதை வழக்கம் போல, காமெடியுடன் சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஹோட்டலுக்குப் பதிலாக புதிய இடம் , கப்பல், ரயில், விமானம் என கலர்ஃபுல்லாக இருக்கிறது இந்த பாகம். தற்போது இருக்கும் Creche பள்ளிகளை நக்கல் செய்ததும் அருமை. அதே போல், பல ஆண்டுகளுக்குப் பின், மகரீனா பாடலை நினைவுபடுத்தியதற்கும் நன்றி. Tinder, ஆப்பிள் சிரி, கூகுள் அசிஸ்டென்ட்டையும் விட்டுவைக்கவில்லை படக்குழு.

வண்ணவண்ண மீன்கள், புதிய கோணத்தில் பெர்முடா முக்கோணம் என ஒவ்வொரு காட்சியிலும் அனிமேஷன் அருமை. குழந்தைகளை இது அதிகம் மகிழ்விக்கும். ஆனால், குழந்தைகள் படத்தில் இரட்டை அர்த்தக் காட்சிகள், வசனங்கள் ஏன் டீம் ? படத்தின் இறுதியில் வரும் The End , உண்மையிலேயே இந்தப் படங்களுக்கான END என்றால் மகிழ்ச்சி எனச் சொல்ல வைக்கும் அளவுக்கு ஏனோதானோ எனக் கதை இருக்கிறது. 

காமெடி காட்சிகளாலும், வண்ண வண்ண  ஆடைகளாலும் தப்பிக்கிறது இந்த சம்மர் வெக்கேஷன்.