Published:Updated:

நோலன், கேமரூன், ஸ்பீல்பெர்க் தெரியும்... உலக சினிமாவில் கலக்கும் இந்தப் பெண் இயக்குநர்கள் தெரியுமா?

நோலன், கேமரூன், ஸ்பீல்பெர்க் தெரியும்... உலக சினிமாவில் கலக்கும் இந்தப் பெண் இயக்குநர்கள் தெரியுமா?
News
நோலன், கேமரூன், ஸ்பீல்பெர்க் தெரியும்... உலக சினிமாவில் கலக்கும் இந்தப் பெண் இயக்குநர்கள் தெரியுமா?

உலக அளவில் மிக முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் பெண் இயக்குநர்களும் இருக்கிறார்கள். தனக்கெனத் தனி இடம் பிடித்த சில பெண் இயக்குநர்களைப் பற்றிப் பார்ப்போம்.

``உலக அளவில் ஃபேமஸா இருக்கிற மூன்று இயக்குநர்கள் பெயரைச் சொல்லுங்க…

ஜேம்ஸ் கேமரூன், கிறிஸ்டோபர் நோலன், ஸ்டீவன் ஸ்பீல்பர்க்." - பெரும்பாலான சினிமா ரசிகர்களின் பதில் இப்படித்தான்!

பெண்கள் யாரும் சினிமாவே எடுக்கலையானு உங்களுக்குத் தோணலாம். ஆனால், பரவலாக அறியப்படும் ஆண் இயக்குநர்களுக்கு நிகராக, எந்தவித சளைப்பும் இல்லாமல் `பிரபல'மாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள், பல பெண் இயக்குநர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உலக அளவில் மிக முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் பெண் இயக்குநர்களும் இருக்கிறார்கள். தனக்கெனத் தனி இடம் பிடித்த சில பெண் இயக்குநர்களைப் பற்றிப் பார்ப்போம்.

சமிரா மக்மல்பஃப் :

``ஒரு அப்பா, தனது இரண்டு மகள்களையும் வீட்டிலேயே சிறை வெச்சிருக்காரு. 11 வருடமா இரண்டு பேருமே சூரியனைப் பார்த்ததே இல்லை. இது தெரிஞ்ச அக்கம் பக்கத்தினர் அரசுக்குத் தகவல் கொடுக்குறாங்க. அந்த அப்பாவைக் கண்டிச்சு மறுபடியும் குழந்தைகளை அவருடனேயே அனுப்புகிறது அரசு. ஆனால், மறுபடியும் அவர் சிறை வைக்கிறார். அந்தக் குழந்தைகளோட உடல்நிலையைப் பார்த்துக்கிறதுக்கு வர்ற நர்ஸ் ஒருநாள் அந்த அப்பாவைச் சிறை வெச்சுட்டு, குழந்தைங்களை விளையாடக் கூட்டிக்கிட்டுப் போறாங்க. வாழ்க்கையில் முதல்முறையாக அந்தக் குழந்தைகள் சுதந்திரமா இருக்காங்க, அப்பா வீட்டுச் சிறையில இருக்கார்!” – இது `THE APPLE' என்ற படத்தின் கதைச்சுருக்கம். இந்தப் படம் 1998-ல் ரிலீஸ் ஆகுது. அடுத்த இரண்டு வருடத்துல 100 ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல இந்தப் படம் திரையிடப்படுது. ஸ்பெயின், அர்ஜென்டினா, பிரேசில், யுகே, கிரீஸ்ல நடந்த ஃபெஸ்டிவல்ல விருதுகளை வாங்கிக் குவிக்குது. இந்தப் படத்தை எடுத்தவங்கதான், சமிரா மக்மல்பஃப். இந்தப் படத்தை இயக்கும்போது, அவருடைய வயது 17.

சமிரா மக்மல்பஃப் பிப்ரவரி 15, 1980-ல் இரான்ல பிறந்தவங்க. மிகவும் பிரபலமான இரான் இயக்குர் மொஹசென் மக்மல்பஃபின் மகள்தான், சமிரா. உலகின் மிகவும் குறைவான வயதில் இயக்குநர் ஆனவர், சமிராதான். உலகின் தலைசிறந்த 40 இயக்குநர்களில் சமிராவும் ஒருவர். 17 வயதில் படம் இயக்கத் தொடங்கிய சமிரா, `THE APPLE', `BLACK BOARDS', `AT FIVE IN THE AFTERNOON', `TWO LEGGED HORSE' எனப் பல படங்களை இயக்கியிருக்காங்க. குறைவா படம் எடுத்தாலும் எடுத்த எல்லாப் படங்களுக்கும் சேர்த்து 20-க்கும் அதிகமான விருதுகள் வாங்கியிருக்காங்க. `வாழ்க்கை வெறுமை நிரம்பியது. இந்த வெறுமையை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழியில் நிரப்பிக்கொள்கின்றனர். நான் சினிமாவின் வழியாக… என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து என்னை மகிழ்ச்சியூட்ட மீதமுள்ள ஒரு பொம்மை இந்த சினிமா!' - சினிமா மீதான தன் காதலை இப்படிக் கூறியிருக்கிறார், சமீரா.

அவா துவர்னே :

`வாழ்க்கையை முத்தமிடுங்கள். வாழ்க்கை மீண்டும் உங்களை முத்தமிடும். வாழ்வதற்கும், காதலிக்கவும், சிரிக்கவும், கற்றுக்கொள்ளவும் புதியதாக இன்னொரு ஆண்டு' - கடந்த ஆண்டு தனது பிறந்தநாளில் அவா துவர்னே பதிவிட்ட முகநூல் பதிவு இது. வாழ்க்கையை இவ்வளவு பாசிட்டிவாகப் பார்க்கும் அவா துவர்னே அமெரிக்காவைச் சேர்ந்த பெண் இயக்குநர். கறுப்பின மக்களுக்காகப் போராடும் ஒரு போராளி, எழுத்தாளர், பெண்ணியவாதியும்கூட. துவர்னே, அமெரிக்காவில் ஆகஸ்ட் 24, 1972-ல் பிறந்தவர். ஆங்கில இலக்கியம், பத்திரிகை எனப் பல துறைகளில் தன்னுடைய பின்புலம் இருந்தாலும், தனது 32-வது வயதில் கேமராவை எடுத்தவர், இன்னும் இறக்கி வைக்காமல் இயங்கிக்கொண்டிருக்கிறார். துவர்னேவின் படைப்பு இன்னும் பலருக்கு அடி கொடுத்துகிட்டுதான் இருக்கு.

`WOMEN CAN DIRECT DINOSAURS. BELIEVE ME' - ஆமாம்.. இது துவர்னே சொன்னதுதான். `கறுப்பினத்துல இருந்து வந்த ஒரு பெண் இயக்குநராக, அவர்களுடைய வாழ்க்கையை உண்மையுடனும் கலைப்பூர்வமாகும் வெளிப்படுத்துவதே என் குறிக்கோள்' என்கிறார், துவர்னே. 'கோல்டன் குளோப் அவார்ட்' மற்றும் 'சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது' உள்ளிட்ட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் கறுப்பின பெண் இயக்குநரும் இவங்கதான். அடிமைத்தனம் பற்றி இவர் எடுத்த `13TH' என்ற ஆவணப்படம் மிகவும் பிரபலமானது.  அதுவும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. `THIS IS THE LIFE, SELMA, I WILL FOLLOW, A WRINKLE IN TIME' போல பல பிரபலமான படங்களையும் நமக்குத் தந்திருக்கிறார். இந்தப் படங்கள் எல்லாமே பல விருதுகளைக் குவித்த படங்கள். இவங்க கடைசியா எடுத்த `A WRINKLE IN TIME' படத்தின் பட்ஜெட் 100 மில்லியன் டாலர்கள். அமெரிக்காவில், ஒரு பெண் இயக்குநர் மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பதும் இதுவே முதல்முறை.

கேத்ரின் பிகிலோ :

`ஓவியத்திலிருந்து இயக்குநராக நான் வந்தது கான்சியஸ் ஆன ஒன்றுதான். ஓவியம் அரிதான, மிகக் குறைவான ரசிகர்களின் கலை. ஆனால், திரை ஒரு அற்புதமான, நிறைய மனிதர்களை சென்றடையக்கூடிய ஒரு கருவியாக நினைக்கிறேன்' - என்கிறார், கேத்ரின். உண்மையிலேயே கேத்ரின் ஓவியத்தை விட்டுட்டு இயக்குநராக வந்தது திரைத்துறைக்குப் பெருமை என்றுதான் சொல்லவேண்டும். பெண்கள் என்றாலே சாதுவாக அல்லது பெண்ணியம் பேசுகின்ற படங்களைத்தான் எடுப்பாங்கனு நினைச்சீங்கனா, கேத்ரின் பிகிலோவின் படைப்புகளை நீங்க கண்டிப்பா பார்க்கணும். ஹார்ட் பீட் காதில் ஒலிக்கும்படியான சஸ்பென்ஸ், வயலன்ஸ் படங்களைக்கூட இயக்கியிருக்கிறார், கேத்ரின். ஆனால், இவங்க கூலான டைரக்டர்தான்.

1951-ல் கலிஃபோர்னியாவில் பிறந்தவர், கேத்ரின். 1978-ல் தன்னுடைய முதல் படத்தை வெளியிட்டார். பிறகு 1981-ல் `THE LOVELESS' படத்தை எடுத்தார். பல விமர்சனங்களை சந்தித்தாலும், அடுத்து இவங்க என்ன படம் பண்ணப் போறாங்க என்ற கவனிப்பு இவர்மீது இருந்தது. `NEAR DARK', `BLUE STEEL', `POINT BREAK', 'ZERO DARK THIRTY' என இவருடைய பல படங்கள் பெரும் விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றன. போர் நடக்கும் இடங்களில் உள்ள வீரர்களின் நிலையை தத்ரூபமாகவும், சுவாரஸ்யமான ஆக்‌ஷன் காட்சிகளுடனும் சொன்ன படம்தான், `THE HURT LOCKER'. இப்படம் 2008-ல் வெளியானது. கேத்ரினுக்குச் சிறந்த இயக்குநர் என்று ஆஸ்கர் விருது வாங்கிக் கொடுத்த படம் இது. மேலும், பல விருதுகளையும் இப்படம் வாரிக் குவித்தது. இவ்வளவு பண்ணியிருக்கிற கேத்ரின் யார் தெரியுமா... `அவதார்', `டைட்டானிக்', `டெர்மினேட்டர்'னு படம் எடுத்தாலே அவார்டு வாங்கிக் குவிக்கும் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி.

ஹைஃபா அல் மன்சூர் :

சைக்கிள் வாங்கணும்னு ரொம்பநாளா அந்தப் பொண்ணுக்கு ஆசை. ஆனால், அதற்காக என்ன முயற்சி எடுத்தாலும், தோற்றுப் போகுது. கடைசியா தன் பள்ளியில் குரான் ஒப்புவிக்கும் போட்டி நடக்க, அதில் கலந்துகொண்டு ஜெயித்தால் பணம் கிடைக்கும். அந்தப் பொண்ணு கலந்துக்கிட்டாங்களா, சைக்கிள் வாங்கினாங்களா இல்லையா... என்பதுதான், மன்சூர் இயக்கிய `WADJA' என்ற படத்தின் கதை. கட்டுப்பாடுகள் மிகுந்த ஒரு நாட்டில் ஒரு பெண் சைக்கிள் வாங்கணும் என்ற தன் கனவை நனவாக்க எவ்வளவு போராடவேண்டி இருக்கிறது என்பதை ஆழமான வலியுடன் சொல்லிப் புரியவைத்த படம். சவுதியின் முதல் பெண் இயக்குநர் ஹைஃபாதான். இந்த ஹைஃபா இயக்கிய முதல் படமே பல விருதுகளைக் குவித்தது. சவுதி நாட்டிலிருந்து முதல் முறையாக ஆஸ்கருக்குச் சென்ற படமும் இதுதான்.

சவுதி அரேபியாவில் 1974 ஆகஸ்ட் 10- ம் தேதியில் பிறந்தவர், ஹைஃபா. `யாருக்கும் தெரியாமதான் படங்களைப் பார்க்க ஆரம்பிச்சேன். ஜாக்கிசான், டிஸ்னி எல்லோரும் என்னோட எல்லையை, எனக்கான உலகத்தை எனக்குக் காட்டினாங்க. இயக்குநர் ஆகணும் என்ற கிறுக்குத்தனமான காரணத்துக்கு, இவர்கள்தான் பொறுப்பு!' – எனச் சொல்கிறார், ஹைஃபா மன்சூர். சில ஆவணப்படங்களும் எடுத்திருக்கும் மன்சூரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான `MARRY SHELLY' என்கிற ஆட்டோ பயோகிராஃபி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனாலேயே இவருடைய அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் கூடியிருக்கு.   

உங்களுக்குத் தெரிந்த சிறந்த பெண் இயக்குநர்கள், சிறந்த பெண் இயக்குநர்களின் படைப்புகளையும் கமென்ட் பாக்ஸில் பகிர்ந்துகொள்ளுங்கள்!