Published:Updated:

``முருகேசு... இந்த வாலக்கோட எஸ்டிடி தெரியுமா உனக்கு?'' - 'தி நன்' விமர்சனம் #TheNun

``முருகேசு... இந்த வாலக்கோட எஸ்டிடி தெரியுமா உனக்கு?'' - 'தி நன்' விமர்சனம் #TheNun

``முருகேசு... இந்த வாலக்கோட எஸ்டிடி தெரியுமா உனக்கு?'' - 'தி நன்' விமர்சனம் #TheNun

``முருகேசு... இந்த வாலக்கோட எஸ்டிடி தெரியுமா உனக்கு?'' - 'தி நன்' விமர்சனம் #TheNun

``முருகேசு... இந்த வாலக்கோட எஸ்டிடி தெரியுமா உனக்கு?'' - 'தி நன்' விமர்சனம் #TheNun

Published:Updated:
``முருகேசு... இந்த வாலக்கோட எஸ்டிடி தெரியுமா உனக்கு?'' - 'தி நன்' விமர்சனம் #TheNun

'தி கான்ஜூரிங்', 'அனபெல்' படங்களில் காட்டப்பட்ட 'வாலக்' கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதை விரிவாகச் சொல்ல முயன்ற, 'தி நன்' படம் எப்படி? 

உண்மைச் சம்பவத்தை மையமாகவைத்து எடுக்கப்பட்டதாகக் கூறி அனைவரையும் மிரட்டிய படம், 'தி கான்ஜூரிங்'. அதன் வெற்றி, சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் கான்செப்ட் போல பேய்ப் படங்களையும் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. அந்த வகையில், ஹாலிவுட்டின் ஹாரர் ஜானர் படங்களுக்கு ஒரு மைல்கல்லாக இந்தப் படம் அமைந்தது. 'தி கான்ஜூரிங்' படத் தொடரைப் பொறுத்தவரை, அதன் கதை பின்னோக்கி நகர்வதை நம்மால் உணர முடியும். அப்படியாக, 1950-களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது, 'தி நன்'. எட் வாரன் - லொரைன் வாரன் என்ற பேயோட்டும் தம்பதியைச் சுற்றித்தான் 'கான்ஜூரிங்' படத்தின் கதை பயணிக்கும். 'தி கான்ஜூரிங்', 'அனபெல்' இரண்டு படங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 'வாலக்' எனும் பேய், லொரைனையும் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் அச்சுறுத்திக்கொண்டே இருக்கும். குறைந்தபட்சம் அந்த கதாபாத்திரத் தாக்கமாவது மற்ற பாகங்களின் கதையில் இடம்பெற்றிருக்கும். வாலக் கதாபாத்திரம், 'கான்ஜூரிங்' சீரியஸின் டிரேட்மார்க் என்றே சொல்லலாம். அப்படி முத்திரை பதித்த இக்கதாபாத்திரத்தின் கதையை முழுமையாக எடுத்துச்சொல்லும் படமாகத்தான் 'தி நன்' வெளியாகியிருக்கிறது. நம்முடைய எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ததா... லொரனை அச்சுறுத்தும் வாலக், நம்மையும் மிரட்டுகிறதா... என படம் முடிந்தபின் கொசுவர்த்தி சுருள் போட்டு நமக்கு நாமே கேட்டுக்கொண்டால், கேள்விக்குறிதான் விடையாக வருகிறது.  

முதலில், நன் என்பவர் யார்? கன்னியாஸ்திரியாக மாறும் பெண்களைத்தான் 'நன்' என்று குறிப்பிடுவார்கள். கதைப்படி, 1952ல் ரொமானியாவில் உள்ள தேவாலயத்தில் இரண்டு நன்கள் வாழ்ந்துவருகிறார்கள். இருவரையும் தவிர, மூன்றாவதாக இன்னொருவர் இருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். அவர்தான் வாலக். அதை உறுதிசெய்ய 'கடவுள் இங்கே முடிகிறார்' (God Ends Here) என்று குறிப்பிட்ட இடத்தில் பரிசோதித்துப் பார்க்கும் ஒரு பரீட்சை, விஷப்பரீட்சை ஆவதோடு, ஒருவர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. மற்றொருவர் தேவாலயத்தின் வாசலில் தூக்குப்போட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாட்டிக்கன் கத்தோலிக் அமைப்பிலிருந்து ஃபாதர் ப்ரூக் (டெமியன் பிச்சிர்) என்பவரும், கன்னியாஸ்திரி மட பயிற்சி முகாமிலிருந்து சிஸ்டர் ஐரின் (தைஸா ஃபார்மிகா) என்பவரும் இந்தக் கொலையை விசாரிக்க ரொமானியா வருகின்றனர். தற்கொலைசெய்துகொண்ட சிஸ்டர் விக்டோரியாவின் உடலை முதலில் பார்த்த ஃப்ரென்சியின் (ஜோனஸ் ப்ளோகெட்) உதவியோடு, மூவரும் தேவாலயத்துக்குள் செல்கின்றனர். ஊருக்குள் எத்தனையோ தேவாலயங்கள் இருந்தும், இந்தத் தேவாலயத்துக்கு எதற்காக வாலக் வந்தது... எதற்காக நன்னைப் போலவே உடையணிந்து அங்கிருந்த இருவரையும் கொன்றது... உள்ளே சென்ற இந்த மூவரையும் என்ன செய்தது... வாலக்கிற்கும் 'கான்ஜூரிங்' லொரைனுக்கும் என்ன தொடர்பு... வாலக்கிற்கு உண்மையிலேயே என்ன வேண்டும்... போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது 'தி நன்'. நல்ல முயற்சி! 

 பேய் படங்களைப் பொருத்தவரை ஒருவருக்கு பேய் பிடிக்கும், பிறகு க்ளைமாக்ஸின்போது சர்ச்சிலிருந்து ஃபாதர் வருவார், பின் சில சடங்குகள் நடைபெற்று பேய் விரட்டியடிக்கப்படும். ஆனால், 'தி நன்' படத்தைப் பொருத்தவரை பேய் இருக்கும் தேவாலயத்திலிருந்துதான் கதையே ஆரம்பமாகிறது. இதோடு சேர்த்து, கதை நடக்கும் சூழ்நிலைக்குத் தகுந்த சூழல்தான் படத்துக்கு மிகப்பெரிய பலம். 'இது பிரார்த்தனைக்கான நேரமல்ல... வேட்டையாடுவதற்கான நேரம்!' போன்ற 'தெறி' ரக வசனங்களும் சிறப்பு. படத்தில் நன்னோடு சேர்த்து நான்கே கதாபாத்திரங்கள்தான். குறிப்பாக, ஃப்ரென்சி கதாபாத்திரத்தில் நடித்த ஜோனஸ் ப்ளோகெட், அதிக கவனம்பெறுகிறார். மயான அமைதியில் இவர் அடிக்கும் லூட்டிகள், பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது. 

பாழடைந்த தேவாலயம், அதற்கு அருகிலேயே சுடுகாடு, எங்கு பார்த்தாலும் இருள் சூழ் உலகு... எனக் காணும் இடமெல்லாம் பீதியடையச் செய்யும் லொக்கேஷன்கள் படத்துக்கு மற்றொரு ப்ளஸ். அதைத் தத்ரூமாகக் காட்ட ஒளிப்பதிவாளர், மாக்ஸிம் அலெக்ஸான்ட்ரே நிறையவே உழைத்திருக்கிறார். காட்சியில் பயத்தைக் கொடுக்கத் தவறியதை, இசையமைப்பாளர் கார்ஸெனியோவிஸ்கியின் சவுண்ட் எஃபெக்ட்ஸாவது கொடுத்து ஈக்குவல் செய்திருக்கலாம். ஆரம்பத்தில் ஒரே ஒரு காட்சிக்கு தூக்கிவாரிப்போட்ட சவுண்ட் எஃபெக்ட், படம் முடியும்வரை வாரவும் இல்லை, தூக்கவும் இல்லை. 'தி கான்ஜூரிங்' படத்தில் லிலி டெய்லரின் காதருகே வரும் குழந்தை, 'Shall we play hide and seek?' என்று சொல்லிவிட்டு கைதட்டும் காட்சியை நினைத்துப் பார்த்தாலே இரவு தூக்கம் வராது. அதில் இடம்பெற்ற பாதியையாவது இதில் இடம்பெறச் செய்திருக்கலாம். 

விஷுவல், படத்தை வேற லெவலுக்கு கொண்டுசென்றாலும், பயங்காட்டுவதை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம். 'நன்' வாலக்கின் ஆர்ஜின் ஸ்டோரி என விளம்பரப்படுத்தப்பட்ட படம், வாலக் ஏன் 'நன்' வேடத்தில் அலைகிறது என்பதை மட்டுமே தெளிவாகக் கூறுகிறது. பாதாள நரகத்திலிருந்து வாலக்கை ஏன் வெளியே கொண்டுவருகிறார்கள்... வாலாக்கின் நோக்கம்தான் என்ன... என்ற இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில் கூறியதுபோல சொன்னது நெருடல். இப்பேர்ப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்திய கதாபாத்திரத்துக்கு இன்னும் டீடெயிலிங் கொடுத்து விவரித்திருக்கலாம். விஷுவலாக மட்டுமே படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்ற இயக்குநர் கோரின் ஹார்டி, கதையிலும் அது கொடுக்கும் தாக்கத்திலும் சற்று சறுக்கிவிட்டதாகவே தோன்றுகிறது. 

கிளைமாக்ஸில், வாலக்குடன் வெடிக்கும் போராட்டத்தில் யார் வெல்லப்போகிறார்கள் என்ற கேள்விக்கு, கணிக்கக்கூடிய காட்சிகளாக விடைகள் விரிந்தாலும், அவை ரசிகர்களிடையே கைதட்டல்பெறவும் தவறவில்லை. அதே சமயம், படம் முடிந்த பிறகு ' 'தி நன்' படத்தின் வாலக்கைவிட 'தி கான்ஜூரிங்' பட வாலக்கே பெட்டர்...' என்று ரசிகர்கள் பெருமூச்சுவிடவும் தயங்கவில்லை. 

'தி கான்ஜூரிங்' படத்தில் இருந்த சுவாரஸ்யத்தையும், அச்சுறுத்தலையும் இந்தப் படத்திலும் தூவியிருந்தால், ஹாரர் படங்களுக்கு மத்தியில் 'தி நன்' நன்மதிப்பைப் பெற்றிருக்கும். இருப்பினும், 'தி நன்'னை ஒரு முறை விசிட் அடிக்கலாம்!

'Mile 22' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!