Published:Updated:

``நீங்க நெனைக்கிற ஆள் நான் இல்ல!" - இன்ஃபினிட்டி வார் பிரச்னைகளைத் தீர்க்க வரும் `கேப்டன் மார்வல்' முதல் டிரெய்லர்!

ர.சீனிவாசன்
``நீங்க நெனைக்கிற ஆள் நான் இல்ல!" - இன்ஃபினிட்டி வார் பிரச்னைகளைத் தீர்க்க வரும் `கேப்டன் மார்வல்' முதல் டிரெய்லர்!
``நீங்க நெனைக்கிற ஆள் நான் இல்ல!" - இன்ஃபினிட்டி வார் பிரச்னைகளைத் தீர்க்க வரும் `கேப்டன் மார்வல்' முதல் டிரெய்லர்!

மார்வல் காமிக்ஸ் தன் சொந்த நிறுவனத்தின் மூலம் படங்கள் தயாரிக்க ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகின்றன. தொடர் வெற்றிகள், பாராட்டுகள், டெம்ப்ளேட் படங்களை எடுக்கிறீர்கள் போன்ற விமர்சனங்களை கடந்து இந்த வருடம் அதன் இமாலய படமான `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சுவாரஸ்யமாகப் படத்தின் இறுதியில் வில்லன் தானோஸ் வெற்றி பெறுவதுபோலவும் பாதி உலகம் அழிந்துவிடுவது போலவும் படம் முடிக்கப்பட்டது. படத்தின் எண்டு க்ரெடிட்ஸில் ஷீல்டின் தலைவரான நிக் ஃப்யூரி பாதி அழிந்துபோன உலகை மீட்டெடுக்க `கேப்டன் மார்வல்' எனும் பெண் சூப்பர்ஹீரோவை உதவிக்கு அழைப்பதுபோல ஒரு காட்சி இருக்கும்.

அது முதல், அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் `கேப்டன் மார்வல்' படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்துக்கும் இன்ஃபினிட்டி வார் படத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்குமா என்று தெரியாத நிலை இருந்தாலும், இந்தப் படம் வெளியாகி அடுத்த மாதமே வெளியாகும் அவெஞ்சர்ஸ் இறுதி  பாகத்தில் கேப்டன் மார்வல்தான் உலகைக் மீட்டெடுப்பாள் என்று தெளிவாகத் தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் `கேப்டன் மார்வல்' தனிப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. தற்போது அதன் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

பீரியட் படமான இதில் நிக் ஃப்யூரி இளவயது தோற்றத்தில் வருகிறார். அதற்காகப் பிரத்யேக கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்று உள்ளன. மார்வல் ஸ்டுடியோஸ் அதிகாரபூர்வமாக வெளியிட்ட படத்தின் முதல் டிரெய்லர் இதோ...