Published:Updated:

வேணாம் மார்வெல்லு... சோனிக்கு இது சரியா வரல! சூப்பர்வில்லன் #Venom படம் எப்படி

வேணாம் மார்வெல்லு... சோனிக்கு இது சரியா வரல! சூப்பர்வில்லன் #Venom படம் எப்படி

ஒரு நிறுவனம் மனிதனை வைத்து செய்யும் ஆராய்ச்சிகள். அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள். டம்மி ஹீரோ சூப்பர்வில்லன் ஆவது. இதுதான் வெனம்.

வேணாம் மார்வெல்லு... சோனிக்கு இது சரியா வரல! சூப்பர்வில்லன் #Venom படம் எப்படி

ஒரு நிறுவனம் மனிதனை வைத்து செய்யும் ஆராய்ச்சிகள். அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள். டம்மி ஹீரோ சூப்பர்வில்லன் ஆவது. இதுதான் வெனம்.

Published:Updated:
வேணாம் மார்வெல்லு... சோனிக்கு இது சரியா வரல! சூப்பர்வில்லன் #Venom படம் எப்படி

கடந்த சில ஆண்டுகளில் ஸ்பைடர்மேன் சீரிஸ் அளவுக்கு ரீபூட் ஆன சீரிஸ் வேறெதுவும் இல்லை. அதில் ஏதோவொரு சீரிஸின்(ஸ்பைடர்மேன் - 3 2007), மூன்றாம் பாகத்தில் வில்லனாக வெனம் வருவார். ஸ்பைடர்மேன் உடலுக்குள்ளும், பத்திரிகையாளர் எட்டி உடலுக்குள்ளும் மாறி மாறி நுழையும் வெனம் Venom இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் அப்படத்தின் கதை. பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்த அந்தப் படத்தின் கதையும் கதாபாத்திரங்களும், இறுதிச் சண்டைக்காட்சியும் கூட சற்று சுவாரஸ்யமாக இருக்கும். சரி, இந்தப் படத்துக்கு வருவோம்.

வேணாம் மார்வெல்லு... சோனிக்கு இது சரியா வரல! சூப்பர்வில்லன் #Venom படம் எப்படி
பூமியை விட்டுவிட்டு பிற கிரகங்களில் இருக்கும் வாழ்வியல் சூழல் பற்றி, லைஃப் பவுண்டேசன் ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறது. 4 சாம்பிள் சிம்பையாட்களை பூமிக்கு மீட்டுவர, அந்த விமானம் மலேசியாவில் விழுந்து நொறுங்குகிறது. அதிலிருந்து 3 சிம்பையாட் பாராசைட்களை (இப்படிச் சொன்னால் அவற்றுக்குக் கோபம் வந்துவிடும். இந்த வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை ) எடுத்துக்கொண்டு சான் ஃபிரான்சிஸ்கோ சென்று விடுகிறது லைஃப் பவுண்டேசன். தப்பித்த சிம்பையாட் அங்கிருக்கும் ஒரு மனிதர், தாய்க்கெழவி, சிறுமி என மாறி மாறி பயணிக்கிறது. சிம்பையாட் உடலுக்குள் புகுந்துவிட்டால், அசுர பலம் கிடைக்கும், ஆனால் அதுவாக விரும்பாமல், நாம் அதைத் துரத்த முடியாது. தமிழ்ப் படங்களில் பேய்களைத் துரத்த தர்கா செல்வது போல், பாராசைட்களுக்கு... அட, இது ஸ்பாய்லர் பாஸ். வேணும்னா, ஸ்பைடர்மேன் 3 க்ளைமாக்ஸ் பார்த்துக்குங்க. சரி சரி, மீண்டும் இந்தப் படத்துக்கு வருவோம்.


லைஃப் பவுண்டேசன் ஓனரிடம் பத்திரிகையாளர் எட்டி பிராக் (டாம் ஹார்டி ) கேள்விக் கணைகளைத் தொடுக்க, அவரை வேலையைவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். வேலை, காதலி எல்லாம் எட்டிக்குப் போய்விடுகிறது. நல்லவேளையாக நம்மூரைப்போல் கைது செய்யவில்லை. அப்புறம் என்ன நடக்கும்னு நினைக்கறீங்க. ஒரு சுபயோக சுபதினத்தில், வெனம் எட்டி பிராக்கின் உடலுக்குள் புகுந்துவிடுகிறது. இல்லாத அட்டூழியம் எல்லாம் செய்கிறது. மற்றொரு சுபயோக சுபதினத்தில், மலேசியாவில் தப்பித்த சிம்பையாட் ஆள் மாறி ஆள்மாறி ஆள் மாறி, சான் ஃபிரான்சிஸ்கோ வந்து லைஃப் பவுண்டேசன் ஓனரையே தாக்கிவிடுகிறது. இறுதியில் நடக்கும் அந்தப் பர பர கிளைமாக்ஸில், சீக்கிரம் முடிங்கடா டேய் என நாம் கதற படம் முடிகிறது.

வேணாம் மார்வெல்லு... சோனிக்கு இது சரியா வரல! சூப்பர்வில்லன் #Venom படம் எப்படிமார்வெல் யுனிவர்ஸ் சினிமாக்களில் இருக்கும் `அள்ளிக்கொட்டிய நகைச்சுவைக் காட்சிகள்' இதிலும் இருக்கின்றன. என்ன அவற்றில் எல்லாம் அது கதையோடு ஏதோவொரு விதத்தில் கனெக்ட் ஆகி இருக்கும். இதில், படு செயற்கையாக இருக்கிறது. லாரென்ஸ் உடம்புக்குள் புகுந்த ராஜ்கிரண் போல், வெனமும் டாம் ஹார்டியும் அடிக்கடி பேசிக்கொள்வது சிரிப்பு மூட்டினாலும், நீ டெரர் வில்லன்டா என அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டியதிருக்கிறது. கதாபாத்திரமாகவே மிகவும் டொங்கலாக இருக்கிறது. வெனம், ஏன் இங்கே தங்க விரும்புகிறது (`ஸ்பைடர் மேன் 3ல் நடிக்க' போன்ற பதில்களை கமென்ட்டில் தெரிவிக்கலாம்), போன்ற கேள்விகள் எக்கச்சக்கமாய் எழுகிறது. நாயகன் பட கமலைக்கூட நல்லவரா கெட்டவரா என வகைமைப்படுத்தலாம் போல, வெனமை எல்லாம் ம்ஹூம். ஒரு 15 ஆண்டுகளுக்கு முன், வரவேண்டிய அளவுக்கு க்ளீஷேவாக இருக்கிறது படத்தின் வசனங்கள். பிளாக் பேந்தரில் பட்டையைக் கிளப்பிய லுட்விக் கொரான்ஸனின் இசை , இதில் ஏமாற்றியிருக்கிறது. மற்ற டெக்னிக்கல் க்ரூ பற்றியெல்லாம் சொல்லும் அளவுக்குக்கூட இல்லை. ஏதோ சில ஒட்டாத காட்சிகளில் எல்லாம் காமெடி பாராசைட் மூலம் ஒட்டியிருக்கிறார்கள். ஆனால், அது ஏனோ இறுதியில், `இதத்தான் ராத்திரி பூராம் உட்காந்து ஒட்டினியாக்கும்' எனப் பரவை முனியம்மா சொல்வது போல அவுட்புட் வந்திருக்கிறது.

படத்தின் டிரெய்லர்


 

டிசி சினிமாக்கள் டார்க் மோடிலும், மார்வெல் சினிமாக்கள் காமெடியாகவும் வரும் என்பதுதான் சமீபகால வரலாறு. ஜஸ்டிஸ் லீகை டிசி காமெடியாக்கிச் சொதப்பியது என்றால், வெனமை மார்வெல் காமெடியாக்கிச் சொதப்பியிருக்கிறது. `சிவன் பப்பிள் எல்லாம் விடமாட்டார் என்பது போல்' ஒருவரை விழுங்குவதை எல்லாம் காமெடியாக்கி அடக்கெரகமே ஆக்கிவைத்திருக்கிறார்கள்.

பொறுமையாக உட்கார்ந்து படத்தைப் பார்த்தால்., இறுதியில் வரும் போஸ்ட் கிரெடிட் காட்சி சற்று நம்பிக்கையளிக்கிறது. டாம் ஹார்டி வெர்சஸ் வுட்டி ஹாரல்ஸென் எப்படியிருக்கும் எனக் காத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. 

இதில் இப்படம் மார்வெல் இல்லை சோனி, அதனால்தான் இப்படி இருக்கிறது என ஆங்காங்கே மார்வெல் ரசிகர்கள் போர்க்கொடி தூக்குகிறார்களாம். மொக்கை வாங்குனா தம் கட்டக் கூடாது பாஸ், ஒத்துக்கணும். ப்ரீ லார்சன் நடிப்பில், கேப்டன் மார்வெல்லுக்குக் காத்திருப்போமாக.