Published:Updated:

ஸ்டேன்லீ... ஸ்பேம்லீ... ஸ்லாட்டர் ரேஸ்... எப்படியிருக்கிறது #RalphBreaksTheInternet

கார்த்தி

படத்தின் தலைப்புக்காக சில நிமிடங்கள் கதை என ஒன்றை யோசித்து இருக்கிறார்கள். மற்றபடி எப்படியிருக்கிறது இந்த ரேல்ஃப் பார்ட் 2?

ஸ்டேன்லீ... ஸ்பேம்லீ... ஸ்லாட்டர் ரேஸ்... எப்படியிருக்கிறது #RalphBreaksTheInternet
ஸ்டேன்லீ... ஸ்பேம்லீ... ஸ்லாட்டர் ரேஸ்... எப்படியிருக்கிறது #RalphBreaksTheInternet

பழைய படங்கள கிண்டல் பண்ணி, நாஸ்டாலஜிய தூண்டுற சீசன் இது. மார்வெல்லோட டெட்பூல், சூப்பர் ஹீரோஸ கலாய்ச்சு தள்ளுச்சு! அடுத்து வந்த ஸ்பீல்பெர்கோட ரெடி ப்ளேயர் ஒன், வீடியோ கேம்கள் மற்றும் பழைய ஹாலிவுட் படங்களுக்கான ஒரு நாஸ்டால்ஜியா பதிவா அமைஞ்சுச்சு. அந்த வரிசைல லேட்டஸ்ட் இந்த #RalphBreaksTheInternet.

ஆமா, கதை ?

முதல் பார்ட் முடிஞ்ச இடத்துல இருந்து ஆறு வருசம் தள்ளி ஆரம்பிக்குது பார்ட் - 2

ஓ, முதல் பார்ட் வேற இருக்கா ?

ஆமா, 2012ல் ரிலீஸ் ஆச்சு. அது பேரு ரெக் இட் ரேல்ஃப் (Wreck It Ralph). 

அதோட கதை என்ன ?

ஃபிக்ஸ்- இட் ஃபெலிக்ஸ் ஜூனியர் (Fix-It Felix Jr) விளையாட்டில் இருக்கும் ரேல்ஃப் தான் இந்தப் படத்தின் ஹீரோ. அந்த மெகா சைஸ் பையன் கேமில் வில்லனாக இருந்தாலும், ரொம்ப நல்லவன். சுகர் ரஷ் என்னும் கார் ரேஸ் விளையாட்டில் இருக்கும் வென்னலோப்தான் நாயகி. லிட்வாக் என்னும் வீடியோ கேம் கடையில் இருக்கும் இந்த வீடியோ கேம் ஸ்டேசன்கள்தான் படத்தின் மொத்த பலமும். மக்கள் விளையாடிவிட்டு சென்றதும், இவர்கள் அனைவரும் செய்யும் லூட்டிகள்தான் முதல் பாகத்தின் கதை. வென்னலோப் சுகர் ரஷ் கேம்ல ஒரு க்ளிட்ச். அதைக் கடந்து வென்னலோப் எப்படி ஜெயிக்குது என்பதுதான் முதல் பாகம். அது பயங்கர ஹிட் .

ஓ....

ரெண்டாவது பாகத்தோட கதை, ட்ரெய்லரையே நிறைய வந்துடுச்சு. சுகர் ரஷ் கேம்ல வென்னலோப் கில்லி ஆகிடுது. ஒரு கட்டத்துக்கு மேல், பப்பிம்மா வென்னலோப்க்கு அந்த கேம் போர் அடிச்சுடுது. அதுக்குள்ள அந்த கேம விளையாட வர்ற பொண்ணு, அந்த கேமோட கன்ட்ரோலர உடைச்சுடுது. அந்த பழைய மெஷினோட வீல், ebay சைட்ல விக்குது. ஆனா, ரொம்ப காஸ்ட்லி. இதெல்லாம் வாங்க முடியாதுன்னு, கடை ஓனர் கை விரிக்கறார். ஆனா, அத இணையம் மூலமா வாங்க ரேல்ஃபும், வென்னலோப்பும் முடிவு பண்றாங்க. 

இணையம் மூலமா எப்படி விளையாட்டுல இருக்குற பொம்மைகள் வாங்க முடியும் ?

ரொம்ப புத்திசாலியா இருக்கீங்க. அப்ப இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்காது. பாஸ், இது குழந்தைக அனிமேசன் படம். கூல் டவுன்!

ஓக்கே. இணையம் எப்படி வந்துச்சு ? முதல் பார்ட்ல இருக்கா?

அதான் இல்ல. அப்புறம் ரெண்டு பார்ட்டுக்கும் வித்தியாசம் இல்லாம போயிடுமே. முதல் பார்ட் முழுக்க லிட்வாக் கடைக்குள் இருக்கும் விளையாட்டுப் பொம்மைகள், கடைய மூடுனதுக்கு அப்புறம் பண்ற லூட்டி மட்டுமே. இந்த பார்ட் ஆரம்பத்துலயே, லிட்வாக் முதலாளி, பெரிய மனசோட கடைக்கு WiFi மாட்டறார்.

WiFiன்னா, வேற என்ன எல்லாம் இருக்கு ?

WiFi காட்சிகள் ஆரம்பிச்சதும் படத்தோட கலர் மொத்தமா மாறிடுது. ஒட்டுமொத்தமா ஓட்டி வச்சு இருக்காங்க. நாம் ஏதாவது டைப் பண்றதுக்கு முன்னாடியே முந்திரக்கொட்டையா அதுவே டைப் பண்ற கூகுள் சர்ச் இஞ்சினுக்குப் பேர் KnowsMore. இப்படி எல்லோரையும் ஓட்டி வச்சு இருக்காங்க. கூகுள், யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம், எல்லோரையும் பாரபட்சம் பார்க்கமா பங்கம் பண்ணியிருக்காங்க.

ஓ. ட்ரெய்லர்ல, டிஸ்னி பத்தி வேற சீன்ஸ் வந்துச்சே.

படத்தோட ஹைலைட்டே அதுதான். சில நாட்கள் முன்னாடி மறைந்த காமிக்ஸ் சூப்பர்ஸ்டார் ஸ்டேன்லீ கூட படத்துல வர்றார். அயர்ன் மேன், ஸ்டார்வார்ஸ் கதாபாத்திரங்கள் கூட வர்றாங்க. வால்ட்- டிஸ்னி அனிமேசன் ஸ்டூடியோஸ் சார்பா இதுவரை வெளியான எல்லா ப்ரின்சஸும், இந்தப் படத்துல இருக்காங்க. ட்ரெய்லர்ல வர்ற அந்த சீன்ஸ் இன்னுமே அழகா இருக்கு. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ரெடி ப்ளேயர் ஒன், வீடியோ கேம் பத்தின நாஸ்டால்ஜியான்னா, இந்தப் படம் கண்டிப்பா டிஸ்னி ஸ்டூடியோஸ் சார்பா வெளியான ப்ரின்சஸ் பத்தின நாஸ்டால்ஜியாவ பார்க்கறவங்க மனசுல ஏற்படுத்தும்.

வேற என்னவெல்லாம் படத்துல ஸ்பெஷல் ?

இணையத்த நாம யூஸ் பண்றப்ப வர்ற தொல்லை தரும் விளம்பரங்கள் பேர் Spamலீ. இணையத்துல எதை வித்தியாசமா பண்ணினாலும், ஹார்ட் இன் போடுற மக்கள், திட்டி கமென்ட் போடுற மக்கள்னு பார்க்கிற பார்வையாளர்களையும் பல இடங்கள்ல கனெக்ட் பண்ணி இருக்காங்க. அதே சமயம், Spamலீயோட, வைரஸ். அதுல இருந்து காப்பாத்த ஆன்டி வைரஸ். அப்புறம் டார்க் வெப்னு கொஞ்சம் டெக்னிக்கலாவும் படம் போகுது. இந்தக் காட்சிகள் எல்லாம் பெரியவங்களுக்கே கொஞ்சம் ஆவ்வ்வ் ரகமா இருப்பதால், குழந்தைகளுக்கு எந்தளவுக்கு கனெக்ட் ஆகும்னு தோணல.

படத்துல ரொம்பவும் ஸ்பெஷல் எது ?

ப்ரின்சஸ் வர்ற காட்சிகள் தான். படத்தோட ஒரு பகுதியா வர்ற ஸ்லாட்டர் ரேஸ் நாயகிக்கு குரலுதவி வொண்டர் வுமன் புகழ் கல் கடோட் கொடுத்திருந்தாலும், ப்ரின்சஸ் காட்சிகள் செம்ம. இதுக்கு முன்னாடி, இந்தப் படங்கள் வந்தப்போ, யாரெல்லாம் இந்த ப்ரின்சஸ் கதாபாத்திரங்களுக்கு குரலுதவி கொடுத்திருந்தாங்களோ, அவங்களையே மீண்டும் இந்தப் படத்துக்கு குரலுதவி செய்ய வச்சிருக்காங்க.
 

போஸ்ட் கிரெடிட் காட்சி இருக்கா ?

ஸ்டேன்லீயே படத்துல இருக்கார். போஸ்ட் கிரெடிட் இல்லாம இருக்குமா? அதெல்லாம் வகை தொகையா ரெண்டு இருக்கு. ஆனா, நீங்க டென்சன் ஆகாம, சிரிக்கற மாதிரி அதுலயும் உங்கள ஓட்டி இருக்காங்க .

படம் பார்க்கலாமா, இல்லியா ?

ஏங்க இவ்ளோ சொல்லி இருக்கேன். படம் செம்ம ஜாலியா இருக்கும். ஆனா, குழந்தைகளுக்குப் புரியுமா என்பதுதான் டவுட். இந்த வாரம் வெளியான படத்துல ஜாலி என்டெர்டெய்னர் இதுதான்.