Published:Updated:

விண்வெளியில் சிக்கிய டோனி ஸ்டார்க்... நாசா கொடுத்த ஐடியா... குஷியில் மார்வெல் ரசிகர்கள் #Avengers

விண்வெளியில் சிக்கிய டோனி ஸ்டார்க்... நாசா கொடுத்த ஐடியா... குஷியில் மார்வெல் ரசிகர்கள் #Avengers
விண்வெளியில் சிக்கிய டோனி ஸ்டார்க்... நாசா கொடுத்த ஐடியா... குஷியில் மார்வெல் ரசிகர்கள் #Avengers

2019-ம் ஆண்டு வெளியாகவுள்ள படங்களில் இப்போது இருந்தே எதிர்பார்ப்பில் இருக்கும் படம் மார்வெல்லின் அவெஞ்சர்ஸ் நான்காம் பாகம். மூன்றாவது பாகமான `தி இன்ஃபினிட்டி வார்', `பாகுபலி' படத்தைப் போல முடிந்ததால், அடுத்த பாகத்தில் என்னவாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு மத்தியில் நான்காம் பாகத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தது. இந்தக் குழப்பங்களை சமீபத்தில் வெளியான டிரெய்லர் மூலம் தீர்த்து வைத்து படத்துக்கு `அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் வெளியான இந்த டிரெய்லர், முதல் 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற சாதனையை இதுவரை தக்கவைத்து வந்த அவெஞ்சர்ஸ் மூன்றாம் பாகமான `அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' சாதனையை முறியடித்தது. முதல் 24 மணிநேரத்தில் இந்த `எண்டு கேம்'  டிரெய்லர் யூடியூபில் 43 மில்லியன் பேரும், ட்விட்டரில் 35 மில்லியன் பேரும், ஃபேஸ்புக்கில் 28 மில்லியன் பேரும் மொத்தமாக மற்ற அனைத்து தளங்களையும் சேர்த்து 289 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 

இதற்கிடையே, `அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' டிரெய்லரில் மரணத்தின் விளிம்பில் அயர்ன்மேன் தனியாக விண்வெளியில் மாட்டிக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்த மார்வெல் ரசிகர்களை அயர்ன் மேனை காப்பாற்ற உதவுமாறு அமெரிக்க விண்வெளி மையமான நாஸாவுக்கு ட்வீட்களை தட்டிவிட்டனர். இது வைரலான நிலையில், தற்போது ரசிகர்களுக்கு நாசா பதிலளித்துள்ளது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``ஹே மார்வெல், நாங்கள் டோனி ஸ்டார்க் பற்றி கேள்விப்பட்டோம். 

நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், அவெஞ்சர்ஸ் சென்ற விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையத்தை முதலில் தொடர்பு கொள்ளுங்கள். அவ்வாறு தொடர்புகொள்ள முடியவில்லை எனில், பூமியிலிருக்கும் எங்கள் குழுவுடன் இணைந்து விண்கலத்தை ஸ்கேன் செய்து காணாமல் போன டோனி ஸ்டார்க்கை கண்டுபிடிக்கலாம்" எனக் கூறியுள்ளது. நாசாவின் இந்த ரிப்ளை மார்வெல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.