சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

ஸ்டேன் லீ

ஸ்டேன் லீ
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டேன் லீ

ஸ்டேன் லீ

* மார்வெல் ஹீரோக்களான பிளாக் பேந்தர், ஸ்பைடர்மேன்,  ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்,  டேர்டெவில், அன்ட் மேன், அயர்ன்மேன், தோர், ஃபென்டாஸ்டிக் ஃபோர் சாகச வீரர்கள் எல்லோரையும் காமிக்ஸாக உருவாக்கியவர் ஒருவரே. அவர்தான் ஸ்டேன் லீ.

* திரைப்படங்களில் ஸ்டேன் லீ வரும் காட்சியைக் கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். எந்தவித அதிரடியும் இல்லாத காட்சியில், ஒரு வயதான நபர் தள்ளாடியபடி வரும்போது, திரையரங்கமே கைதட்டல்களால் ஆர்ப்பரிக்கும். சந்தேகமே வேண்டாம். அவர்தான் ஸ்டேன் லீ.

* 17 வயதில் டைம்லி காமிக்ஸில் சேர்ந்தார் ஸ்டேன் லீ. அங்கே அவருக்கான வேலை, உணவு வாங்கிவருவது, வண்ணம் திட்டப்பட்ட ஓவியங்களைச் சரிசெய்வதுமே. ஸ்டேன் லீக்குள் இருக்கும் சூப்பர் ஹீரோவைக் கண்டுபிடிக்க டைம்லி காமிக்ஸ் சிறிது காலம் எடுத்துக்கொண்டது.

ஸ்டேன் லீ

* பூச்சிகள், சிலந்திகளை எல்லாம் மனிதர்கள் விரும்பமாட்டார்கள் என, ஸ்டேன் லீயின் ஸ்பைடர்மேன் ஐடியாவுக்குத் தடை போட்டது காமிக்ஸ் நிறுவனம். ஆனால், ஸ்பைடர்மேனைக் கொண்டுவருவதில் தீர்மானமாக இருந்தார் ஸ்டேன் லீ. இன்று உலக அளவில் சுட்டிகளுக்குப் பிடித்த பொம்மை ஸ்பைடர்மேன்.

* ஒருவருக்கு இன்ஸ்பிரேசன் எங்கிருந்து வேண்டுமானாலும் தோன்றலாம். சூப்பர் ஹீரோக்களை ஸ்டேன் லீ உருவாக்கக் காரணம், ‘ஸ்கார்லெட் பிம்பர்நெல்’ என்ற நாவல்தான்.

* 1963-ஆம் ஆண்டு, டேர்டெவிலும் எக்ஸ் மென்னும் ஒன்றாக வெளியாக வேண்டியது. ஏதோ காரணங்களால், டேர்டெவில் தள்ளிப்போக, ‘அவெஞ்சர்ஸ்’ யுகத்தைப் போகிறபோக்கில்  ஆரம்பித்துவைத்தார் ஸ்டேன் லீ.

ஸ்டேன் லீ

* அடுத்த வருடம் வரவிருக்கும் ‘கேப்டன் மார்வெல்’, ‘அவெஞ்சர்ஸ் 4’, ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ ஆகியவற்றுக்கான தன் கேமியோ காட்சிகளை ஏற்கெனவே நடித்துக்கொடுத்துவிட்டார் ஸ்டேன் லீ.

மார்வெல் படங்கள் தவிர, பிற படங்களிலும் ஸ்டேன் லீ அவ்வப்போது தலை காட்டுவார். இந்த நவம்பர் வெளியான ‘ரேல்ஃப் பிரேக்ஸ் தி இன்டெர்நெட்’ படத்திலும் அனிமேசன் கேமியோவில் கலக்கியிருக்கிறார்.

* `நான் வேலை செய்யும்போது மகிழ்ச்சியாக இருப்பேன். வேலை செய்யாதபோது நேரத்தை வீணடித்துவிட்டதாக நினைப்பேன்’ என்கிற ஸ்டேன் லீ, 95 வயது வரை உழைத்துக்கொண்டே இருந்தார்.