மார்வெல் மற்றும் DC காமிக்ஸ் நிறுவனங்களுக்கிடையே எப்போதும் ‘டிஷ்யூம் டிஷ்யூம்’ பனிப்போர் இருக்கும். இன்று வரை தொடர்ந்துவரும் ஒரு பெயர் குழப்பம், அதற்குப் பெரிய எடுத்துக்காட்டு.

சென்ற மாதம் மார்வெல் காமிக்ஸின் பெண் சூப்பர் ஹீரோ படமான ‘கேப்டன் மார்வெல்’ வெளியானது. இந்த மாதம் DC-யின் ‘ஷசாம்’ என்ற சூப்பர் ஹீரோ படம் வெளியாகியுள்ளது. DC-யின் இந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரம்தான் உண்மையான ‘கேப்டன் மார்வெல்’ என்று ரசிகர்களுக்குள் பரபரப்பு வாதம். அது உண்மையா? ஒரு குட்டி ரீவைண்டு...

1940-களில் ‘கேப்டன் மார்வெல்’ என்ற தலைப்பில் ஃபாசெட் என்ற நிறுவனம் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டது. 1941-ல் இந்தக் கதை, கறுப்பு வெள்ளை படமாக எடுக்கப்பட, கேப்டன் மார்வெல் காமிக்ஸ் விற்பனை சூடு பிடித்தது. DC காமிக்ஸில் முன்னரே வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் காப்பிதான் கேப்டன் மார்வெல் என ஃபாசெட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தது DC. இறுதியாக, 1953-ல் தன் ‘கேப்டன் மார்வெல்’ காமிக்ஸ்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகப் பின்வாங்கியது ஃபாசெட் நிறுவனம்.

‘கேப்டன் மார்வெல்’ என்ற பெயரின் புகழை, மார்வெல் காமிக்ஸ் பயன்படுத்தி, ஒரு பெண் சூப்பர் ஹீரோ காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டது. இந்நிலையில், 1972-ல் பழைய ஃபாசெட் நிறுவனத்தின் ஒரிஜினல் ‘கேப்டன் மார்வெல்’ காமிக்ஸ் உரிமங்களை DC நிறுவனமே பெற்றுக்கொண்டது. ஆனால், மார்வெல் காமிக்ஸ் ‘கேப்டன் மார்வெல்’ என்ற பெயரில் ஏற்கெனவே காமிக்ஸ் வெளியிட்டு வருவதால் DC-க்கு சிக்கல் உண்டானது. எனவே, தன் கதையில் வரும் மந்திரச் சொல்லான ‘ஷசாம்’ என்ற பெயரைவைத்து DC தன்னுடைய ‘கேப்டன் மார்வெல்’ காமிக்ஸ்களை வெளியிட்டது. ஆனால், 2011-ம் ஆண்டு வரை அதில் வரும் சூப்பர் ஹீரோவின் பெயர் ‘கேப்டன் மார்வெல்’ என்றே வெளியானது. பின்னர் அதுவும் ‘ஷசாம்’ என்றாகிப் போனது. ஒரிஜினல் ‘கேப்டன் மார்வெல்’ நம் DC-யின் ‘ஷசாம்’தான் என்றாலும், காப்பிரைட் பஞ்சாயத்துகளால், தற்போது அந்தப் பெயர் மட்டும் மார்வெல் காமிக்ஸிடம் இருக்கிறது.

- ர.சீனிவாசன்