Published:Updated:

அந்த நம்பிக்கைதான் பிக்ஸாரை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது! #35YearsOfPixar

Pixar Studios ( Pixar )

பிக்ஸார் நம்பியது ஒன்றைத்தான் ``Art challenges Technology, Technology inspires Art". அதாவது காலப்போக்கில் கலை புதிய தொழில்நுட்பங்கள் வேண்டுமெனக் கேட்கும், புதிய தொழில்நுட்பங்கள் கலையை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்செல்ல ஊக்குவிக்கும்.

அந்த நம்பிக்கைதான் பிக்ஸாரை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது! #35YearsOfPixar

பிக்ஸார் நம்பியது ஒன்றைத்தான் ``Art challenges Technology, Technology inspires Art". அதாவது காலப்போக்கில் கலை புதிய தொழில்நுட்பங்கள் வேண்டுமெனக் கேட்கும், புதிய தொழில்நுட்பங்கள் கலையை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்செல்ல ஊக்குவிக்கும்.

Published:Updated:
Pixar Studios ( Pixar )

னிமேஷன் படங்கள் என்றாலே கைகளால் வரைந்துதான் எடுக்கவேண்டும் என்பதை உடைத்து கம்ப்யூட்டர் அனிமேஷனில் பல மைல்கற்களைத் தொட்டு கடந்த 30 ஆண்டுகளில் Toy Story, Finding Nemo, Monsters Inc., Cars, The Incredibles, Inside Out, Coco எனத் தொடர்ந்து சிறந்த அனிமேஷன் படங்களைத் தயாரித்துவருகிறது பிக்ஸார். சோதனைகளும் சுவாரஸ்யங்களும் சரிவரக் கலந்த பயணம் பிக்ஸாருடையது.

1986, ஸ்டார் வார்ஸ் புகழ் இயங்குநர் ஜார்ஜ் லூகசின் தயாரிப்பு நிறுவனமான லூகஸ் ஃபிலிம்ஸின் கம்ப்யூட்டர் பிரிவு, தனி நிறுவனமாகப் பிரிந்துவந்து முதலீட்டுக்காகக் காத்திருந்தது. அந்த நிறுவனத்தின் பெயர் பிக்ஸார். அன்றைய அனிமேஷன் முறைகளை விட்டுவிட்டு கம்ப்யூட்டர் அனிமேஷனில் படம் எடுக்க விரும்பி டிஸ்னியால் கழற்றிவிடப்பட்ட ஜான் லஸ்ஸடர், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பிரிவில் PhD பெற்ற உலகின் முதல் சிலரில் ஒருவரான எட் கேட்மல் என பிக்ஸாரின் மொத்த குழுவும் கம்ப்யூட்டர் அனிமேஷனில் ஒரு முழு நீளப் படம் எடுக்கவேண்டும் என்ற நீங்காத கனவுடன் காத்திருந்தது. அதில் கடைசியாகத்தான் வந்துசேர்ந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனம் வெற்றிபெற்று அப்போதே பெரும் கோடீஸ்வரராக இருந்த ஸ்டீவ் இவர்களின் கனவுக்கு உயிர்கொடுக்க விரும்பினார். 10 மில்லியன் டாலர்களை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார். பின்பு, தாங்கள் யாரெனக் காட்டும் விதத்தில் ஒரு குறும்படம் எடுப்போம் என்று களமிறங்கியது பிக்ஸார். டேபிள் விளக்கு உயிர்பெற்றால் எப்படி இருக்கும் என்பதுதான் அந்தப் படத்தின் ஐடியா. இன்றும் படங்களில் பிக்ஸார் பெயர் வரும்போது இந்த டேபிள் விளக்கும் உடன் வரும். இங்குத் தொடங்கிய பிக்ஸாரின் பயணம் இன்று கண்டிருக்கும் வெற்றியின் சீக்ரெட் என்ன?

எட் கேட்மல், ஸ்டீவ் ஜாப்ஸ், ஜான் லஸ்ஸடர்
எட் கேட்மல், ஸ்டீவ் ஜாப்ஸ், ஜான் லஸ்ஸடர்
PIxar

உலகமே தொழில்நுட்பம் வளரத்தொடங்கிய பிறகு அவற்றின் சாத்தியக்கூறுகளை பார்த்து தங்கள் வேலைகள் பறிபோகப்போகிறது என அச்சம் கொள்ளத் தொடங்கியிருந்தது. அனிமேஷன் துறையிலும் அப்படியே. ஆனால், ஜான் லஸ்ஸடர் நம்பியது ஒன்றைத்தான் ``Art challenges Technology, Technology inspires Art". அதாவது காலப்போக்கில் கலை புதிய தொழில்நுட்பங்கள் வேண்டுமெனக் கேட்கும், புதிய தொழில்நுட்பங்கள் கலையை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்செல்ல ஊக்குவிக்கும். டிஸ்னியில் உள்ள பலரும் இதைப் புரிந்துகொள்ளாதபோது இதை நம்பினார் ஜான். இதற்காக வேலையையும் இழந்தார். தொழில்நுட்பம் வெறும் கருவி மட்டுமே என நம்பினார். இன்றும் பிக்ஸாரின் நம்பிக்கை அதுதான். 

டாய் ஸ்டோரியின் கான்செப்ட் ஆர்ட்
டாய் ஸ்டோரியின் கான்செப்ட் ஆர்ட்
Pixar Animation Studios
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனி நிறுவனமாகச் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கரை `டின் டாய்'  படத்திற்காக வெல்ல டிஸ்னியே பிக்ஸாரின் கனவான முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் படத்தை எடுக்க முன்வந்தது. அவர்கள் எதிர்பார்த்த விதத்தில் `டாய் ஸ்டோரி' படத்தின் கதையை பிக்ஸார் எழுதத்தொடங்கியது. சில மாதங்களுக்குப் பிறகு இதை டிஸ்னியிடம் எடுத்துக்கூற அவர்களுக்கு அந்தக் கதை சிறிதும் பிடிக்கவில்லை. படத்தை கைவிடுவதாக அறிவித்தது. சோர்ந்துபோகாமல் `வாங்க நம்ம ஸ்டைல்லேயே யோசிப்போம்' என மூன்று வாரங்கள் `டாய் ஸ்டோரி' கதையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்து மீண்டும் டிஸ்னியின் கதவைத் தட்ட, இந்த முறை க்ரீன் சிக்னல் விழுந்தது. ஒரிஜினாலிட்டி முக்கியம் என்பதை உணர்ந்து அன்று முதல் இன்றுவரை அதைக் கடைபிடித்துவருகிறது பிக்ஸார். எனவே, டிஸ்னி அனிமேஷன் படங்களில் இருப்பது போல இவர்களது படம் மியூசிக்கலாக இருக்காது. பெரும்பாலும் `What if' என்ற அடிப்படையில்தான் இவற்றின் கதை அமையும். இதுவே டிஸ்னியின் கதைகள் `Once upon a time' என்ற அடிப்படையில் அமையும். 

Ratatouille
Ratatouille
Pixar Animation Studios

பிக்ஸார் தொட்டதெல்லாம் வெற்றிதான் என்ற பிம்பம் இருந்தாலும் ஆரம்பிக்கும் முன்னே பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறது இந்தக் குழுவும். இதன் குழுவினரும். ஜான் லஸ்ஸடர் டிஸ்னியில் தனது கனவு வேலையிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். முதல் தடவை கூறும்போது `டாய் ஸ்டோரி' நிராகரிக்கப்பட்டது. முதல் ஐந்து வருடங்களுக்கு நஷ்டத்தில்தான் இந்த நிறுவனத்தை நடத்திவந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால் என்ன தடைகள் வந்தாலும் தளராமல் நம்பிக்கையுடன் உழைத்தது பிக்ஸார். பொது நிறுவனமாக மாறி `டாய் ஸ்டோரி' ரிலீஸுக்குப் பின் 100 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீட்டை மக்களிடம் பெற்றது. பின்னாளில் டிஸ்னியே வாங்கும் அளவுக்கு வளர்ந்தது. வீழ்ந்துகொண்டிருந்த டிஸ்னி படங்களைக் காப்பாற்றியதே இவர்கள்தான் என்னும் அளவுக்கு உழைத்திருக்கிறது பிக்ஸார். கழற்றிவிடப்பட்ட ஜான் லஸ்ஸடர் டிஸ்னியின் கிரியேட்டிவ் ஹெட்டாக வளர்ந்தார். தோல்விக்கு அஞ்சாத இந்தக் குணம் பிக்ஸாரின் அடையாளம்.

எல்லாவற்றையும்விட முக்கியக் காரணம் வரிசையாக வெற்றிகள் கண்டாலும் புதிதாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற துடிப்பு பிக்ஸாரிடம் இன்றும் இருக்கிறது. தொழில்நுட்பத்திலும் சரி, கதைசொல்லலிலும் சரி புதுப் புது உயரங்களை எட்டிக்கொண்டேயிருக்கிறது பிக்ஸார். இன்று வரும் படங்களில் ஒவ்வொரு ஃப்ரேமில் அத்தனை தகவல்கள் இருக்கின்றன. தோல்வியுற்ற வெகுசில படங்களிலும் இவர்கள் அனிமேஷன் முறைகளில் செய்யும் புதிய முயற்சிகளும் அதன் முடிவுகளும் தனி பேசுபொருள் ஆனது. இப்படி ஒரு மாணவனின் கற்றுக்கொள்ளும் ஆர்வம் முழு நிறுவனத்திற்குமே இருப்பதுதான் பிக்ஸாரின் தாரக மந்திரம்.

Soul
Soul
Pixar Animation Studios

தங்கள் அனிமேஷன் திரைப்படங்களுடன் ஒரு அனிமேஷன் குறும்படம் ஒன்றையும் வெளியிடுவது இவர்களின் வழக்கம். 8-10 நிமிடங்களில் மக்கள் நெகிழ வைக்கும் கதைகளை இப்படிக் கூறிவிடுகிறது பிக்ஸார். சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான இந்த வருட ஆஸ்கர் விருதும் இவர்களின் `Bao' என்னும் குறும்படத்திற்குத்தான் கிடைத்தது. இந்த பிப்ரவரி மாதத்தோடு 33-வது ஆண்டில் கால் எடுத்து வைக்கும் பிக்ஸார் இப்போதும் தங்களது முதல் படமான டாய் ஸ்டோரியின் 4-வது பாகம் முதல் மூன்று பாகங்களைவிட நன்றாக வரவேண்டும் என்று அயராது உழைத்துக்கொண்டிருக்கும்.