Published:Updated:

`` `அயர்ன்மேன்’ விஜய், `தோர்’ அஜித், `கேப்டன் அமெரிக்கா’ சூர்யா, `ஹல்க்’ ஆர்யா...’’ - `கேப்டன் மார்வெல்’ நிகழ்ச்சி

சுஜிதா சென்

``விஜய் அயர்ன் மேனா நடிக்கலாம். ஏன்னா, அவருக்கு நல்ல ஹியூமர் சென்ஸ் இருக்கு. அயர்ன் மேனுக்கு இருக்கிற ஸ்டைலை, விஜய்யால் செமயா இமிடேட் பண்ண முடியும்.’’ - சமந்தா

`` `அயர்ன்மேன்’ விஜய், `தோர்’ அஜித், `கேப்டன் அமெரிக்கா’ சூர்யா, `ஹல்க்’ ஆர்யா...’’ - `கேப்டன் மார்வெல்’ நிகழ்ச்சி
`` `அயர்ன்மேன்’ விஜய், `தோர்’ அஜித், `கேப்டன் அமெரிக்கா’ சூர்யா, `ஹல்க்’ ஆர்யா...’’ - `கேப்டன் மார்வெல்’ நிகழ்ச்சி

மார்வெல் பட சீரீஸின் முதல் சோலோ லேடி சூப்பர் ஹீரோ திரைப்படம், கேப்டன் மார்வெல். வருகிற மார்ச் 8-ம் தேதி உலக பெண்கள் தினத்தன்று இப்படம் ரிலீஸாகவிருக்கிறது. ப்ரீ லார்சன், சாமுவேல் ஜாக்சன், பென் மென்டல்சன் ஆகியோர் நடித்த இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்தின் அறிமுக விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இதில், தமன்னா, காஜல், சமந்தா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யா, ``இந்த மேடையில நான்கு சூப்பர் ஹீரோயின்ஸ் இருக்காங்க’’ என்று அறிமுகம் கொடுக்கும்போது, தமன்னா குறுக்கிட்டு, ``இந்த அறையிலிருக்கும் ஒவ்வொரு பெண்களுமே சூப்பர் ஹீரோஸ்தான்’’ என்று ஆரம்பத்திலேயே மேடையை அதகளப்படுத்தினார். ``இங்கே வர்றதுக்கு முன்னாடி நான் சூப்பர் ஹீரோஸ் பத்தி நிறைய படிச்சுட்டு வந்தேன். ஆனா, இங்க என்னைவிட காஜலுக்குத்தான் சூப்பர் ஹீரோஸ் பத்தி அதிகம் தெரியும்’’ என்று காஜலைப் பார்த்துக் கூறினார் தமன்னா. 

```கேப்டன் மார்வெல்’ டிரெய்லரைப் பார்த்தவுடனே உங்களுக்கு என்ன தோணுச்சு?’’ என்ற கேள்வியை ரம்யா அனைத்து ஹீரோயின்களிடமும் முன்வைத்தார். 

``பவர்ஃபுல்லான `கேப்டன் மார்வெல்’ டிரெய்லரைப் பார்க்கும்போது, அந்தப் படத்துல வர்ற முக்கியக் கதாபாத்திரமா நான் என்னை உருவகப்படுத்திக்குவேன். பெண்களை இவ்வளவு வலிமையா இந்தப் படத்துல காட்டியிருக்குறதுக்கு ஹாட்ஸ் ஆஃப்’’ என்று கூறினார் ரகுல் ப்ரீத்.  

``சூப்பர் ஹீரோவா ஒரு பொண்ணைப் பார்க்கும்போது, ரொம்பப் பெருமையா இருக்கு. நம்மளாலேயும் சமூகத்துல மாற்றம் கொண்டு வர்ற விஷயங்களைப் பண்ண முடியும்னு தோணுது. எல்லோருக்குமே `கேப்டன் மார்வெல்’ ஒரு சிறந்த இன்ஸ்பிரேஷனா இருக்கும்னு நினைக்கிறேன்’’ என்றார் சமந்தா.  

``எல்லாப் பொண்ணுங்களுக்கும் அவங்கவங்க வாழ்க்கையில பிரச்னை இருக்கும். அந்தப் பிரச்னைகளை சமாளிக்கிறதுக்கான பக்குவமும் பொண்ணுங்களுக்கு அதிகமா இருக்கும். ஸோ, `கேப்டன் மார்வெல்’ நம்மில் ஒருத்தினு சொல்லலாம். நானும் கேப்டன் மார்வெல்லும் ஒரேமாதிரி ஹேர் ஸ்டைல் வெச்சிருக்கோம்’’ என்று கண்ணடித்துச் சிரித்தார் தமன்னா.  

``நான் தீவிரமான `மார்வெல்’ ஃபேன். இந்தப் படத்துல வர்ற ஹீரோ ப்ரீ, ஒரு ஏர்ஃபோர்ஸ் பைலட். தன் வேலைகளை மிகச் சரியா செய்யக்கூடிய ஆள். எல்லாப் பொண்ணுங்களும் வலிமையானவங்களா இருக்கணும். மார்வெல் யுனிவெர்ஸ்லேயே கேப்டன் மார்வெலுக்குத்தான் அதிக சக்தி இருக்கு. இந்தப் படத்துல கேப்டன் சண்டை போடுறதுலயிருந்து எமோஷனல் சீன் வரைக்கும் எல்லாமே  பிரமாதமா இருந்துச்சு’’ என்றார் காஜல் அகர்வால். 

``இப்போ நீங்க எந்தெந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் நம்ம தமிழ் ஹீரோக்களுக்கு செட் ஆகும்னு சொல்லணும். முதல்ல அயர்ன் மேனா யார் நடிக்கலாம்?’’ என்ற ஆங்கரின் கேள்விக்கு, ``விஜய் அயர்ன் மேனா நடிக்கலாம். ஏன்னா, அவருக்கு நல்ல ஹியூமர் சென்ஸ் இருக்கு. அயர்ன் மேனுக்கு இருக்கிற ஸ்டைலை, விஜய்யால் செமயா இமிடேட் பண்ண முடியும்’’ என்றார் சமந்தா.  

``ஹல்க் யார்?’’ 

``ஒருநாள் நான் ஜிம்முக்குப் போகும்போது, ஆர்யா வொர்க் அவுட் பண்றதைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். அதனால, ஹல்க் மேனா ஆர்யா நடிக்கலாம்’’ என்றார் சமந்தா.  

``தோர் யார்?’’

`` `தோர்’ கதாபாத்திரத்துல தெலுங்குல மகேஷ் பாபுவும் தமிழ்ல சூர்யாவும் நடிச்சா நல்லாயிருக்கும்’’ என்று தமன்னா சொல்ல, ``இல்ல இல்ல, அஜித் சார் நடிச்சாதான் நல்லாயிருக்கும். சூர்யாவுக்குக் `கேப்டன் அமெரிக்கா’ கதாபாத்திரம் கொடுத்துடலாம்’’ என்றார் காஜல். காஜல் கூறியதை மற்ற மூவருமே ஒப்புக்கொண்டனர். உடனே, அரங்கம் அதிரும் கைத்தட்டல் காஜலுக்குக் கிடைத்தது.  

``திடீர்னு ஒருநாள் காலையில் எழுந்திருக்கும்போது நீங்க கேப்டன் மார்வெலா மாறியிருக்கீங்கனு வெச்சுக்குவோம். உலகத்துல இருக்கிற எந்த விஷயத்தை நீங்க ஒழிக்கப்பாடுபடுவீங்க?’’ என்ற கேள்விக்கு, ``தூய்மையை மேம்படுத்துவேன். பெண் சிசுக்கொலை, ஊழல், கொலை இது எல்லாத்தையுமே ஒழிப்பேன்’’ என்றார் ரகுல்.  

``நான் தீவிரவாதிகளை ஒழிப்பேன். ஒளியைவிட ஆறு மடங்கு அதிகமான வேகத்துல வந்து எல்லோரையும் கொன்னுட்டுப் பறந்து போயிடுவேன். நான் எங்கேயிருந்து வந்தேன்னுகூட யாருக்கும் தெரியாது’’ என்றார் காஜல். 

``இந்தியாவுல மட்டுமல்ல, உலகத்துல எந்தவொரு மூலையிலேயும் தீவிரவாதம் நடக்கக் கூடாது. எல்லையில போராடுற ஒவ்வொரு வீரனுக்கும் குடும்பம் இருக்கு. அதை எல்லோரும் யோசிச்சுப் பார்க்கணும். நாட்டையும் வீட்டையும் நாசம் பண்ணிட்டு அமைதிச் சூழல் நிலவும்னு நம்புறது முட்டாள்தனம். அதனால, தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை மேம்படுத்தணும்’’ என்றார் தமன்னா.   

`` `கேப்டன் மார்வல்’ படத்தோட ஹீரோயின் ப்ரீ லார்சன், இந்தப் படத்துக்காக 140 கிலோ த்ரஸ்ட்டர்ஸ் எக்ஸர்சைஸ் (Thrusters Workout) பண்ணாங்களாம். நீங்க எல்லோரும் இந்த மாதிரியான உடற்பயிற்சிகள் செய்வீங்கனு தெரியும். அதைப் பத்தி இங்கே பகிர்ந்துக்கோங்க’’ என்று ரம்யா கேட்டார்.  

ரகுல் ப்ரீத் சிங் 

``காலையில எழுந்து உடற்பயிற்சி பண்ணாதான் என்னால அடுத்தடுத்த வேலைகளை சரியா பார்க்க முடியும். என் உடம்புல இருக்கிற செல்கள் எல்லாமே உடற்பயிற்சி பண்றது மூலமாதான் சுவாசிக்குதுனு நினைக்கிறேன். தினமும் ஒரு மணிநேரம் நான் இதுக்காக செலவழிக்கிறேன். உலகத்துல எங்கே இருந்தாலும், எந்த வேலையில இருந்தாலும் வொர்க் அவுட்டை மிஸ் பண்ணவே மாட்டேன்.’’  

சமந்தா 

``எனக்கு டார்கெட்ஸ் ரொம்பப் பிடிக்கும். எக்ஸர்சைஸ் பண்ணும்போது இன்னைக்கு என்னோட டார்கெட்டை நான் அச்சீவ் பண்ணிட்டேனா, அடுத்த நாள் டார்கெட்டை அதிகப்படுத்துவேன். இப்படி டார்கெட்ஸ் அச்சீவ் பண்றது எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.’’  

தமன்னா 

``காலை, மாலை யோகா ரெகுலரா பண்ணுவேன். மனசையும் உடம்பையும் ஒருங்கிணைக்கிறது யோகாதான். நான் டயட் இருக்க மாட்டேன். கண்ணுல படுற எல்லாத்தையும் சாப்பிடணும்னு நினைப்பேன். அதனால, கொஞ்சமா தினமும் வொர்க் அவுட் பண்ணி ஃபிட்டா இருக்கணும்னு நினைப்பேன்.’’  

காஜல் 

``நான் நிறைய மராத்தான் ஓட்டத்துல கலந்துக்குவேன். சமந்தா சொன்ன மாதிரி நமக்கு நாமே, `வெயிட் லிஃப்டிங்’ பண்ண முடியுமா’னு சேலஞ்ச் பண்ணுவோம். அந்த வொர்க் அவுட் பண்ணி முடிச்சதும், நமக்கு சந்தோஷமா இருக்கும். வெயிட் லிஃப்டிங், பிலேட்ஸ் ட்ரெயினிங் (pilates training) ரெண்டுமே அதிகமா பண்ணுவேன்.’’ 

மேடையில் கேப்டன் மார்வெலைப் பற்றி பேசி முடித்தவுடன், நான்கு ஹீரோயின்களும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.  

`` `கேப்டன் மார்வெல்’ படத்தைப் பற்றிய ட்ரோல்களுக்கு உங்க கருத்து என்ன?’’

``நாம நல்லாயிருந்தாலும் இந்த உலகம் பேசும், நல்லா இல்லைனாலும் பேசும். அதெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கக் கூடாது. பேசுற மக்களோட வாயை அடைக்கவும் முடியாது. பையனா இருந்தா என்ன, பொண்ணா இருந்தா என்ன, யார் வேண்டுமானாலும் சூப்பர் ஹீரோவா நடிக்கலாம். ட்ரோல்களைக் கண்டுக்காதீங்க’’ என்றார் தமன்னா.  

``ரகுல் ப்ரீத், உங்களோட லேடி ரோல் மாடல் யார்?’’

``குறிப்பிட்ட ஒருவரை நான் ரோல் மாடலா வெச்சுக்கிட்டது கிடையாது. நாம தினந்தினம் பார்க்கிற அனைத்துப் பெண்கள்கிட்டேயும் கத்துக்க வேண்டிய விஷயங்கள் அதிகமா இருக்கு. எல்லோருக்கும் அவங்கவங்களோட அம்மாதான் ரோல் மாடலா இருப்பாங்க. எனக்கும் அப்படித்தான்! எல்லா அம்மாக்களுமே அவங்க குழந்தைகளுக்காக நிறைய தியாகங்கள் பண்ணியிருக்காங்க. அதையெல்லாம் நம்ம ஜெனரேஷன்ல பண்ண முடியுமானு தெரியலை. ஹீரோவா இருக்கிற அத்தனை அம்மாக்களுக்கும் இந்த `சூப்பர் ஹீரோ’ படம் சமர்ப்பணம்.’’ 

``இந்தியாவுல `கேப்டன் மார்வெல்’ மாதிரியான பெரிய பட்ஜெட் படங்கள் பெண்களை வைத்து எடுக்கப்படுறதில்லை. இது குறித்து என்ன நினைக்கிறீங்க?’’

``இந்தியாவிலும் பெண்களை வெச்சுப் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்குறாங்க. பெண்களை மையப்படுத்திய கதைகளும் அதிகமா வருது. `அருந்ததீ’ மாதிரியான படங்கள் பெண்களை வலிமையானவர்களாகக் காட்டியிருக்கு. `கேப்டன் மார்வெல்’ பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கும்னு நினைக்கிறேன்’’ என்று முடித்தார் காஜல் அகர்வால்.