Published:Updated:

தானோஸ் vs அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா & தோர்... `வாவ்' #AvengersEndGame புதிய டிரெய்லர்!

ம.காசி விஸ்வநாதன்
தானோஸ் vs அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா & தோர்... `வாவ்' #AvengersEndGame புதிய டிரெய்லர்!
தானோஸ் vs அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா & தோர்... `வாவ்' #AvengersEndGame புதிய டிரெய்லர்!

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் என்றால் அது ``அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்" திரைப்படம்தான். இந்த மாதம் 26-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்திற்காக ப்ரோமோஷன்களில் முழுவீச்சில் இறங்கியுள்ளது மார்வெல் நிறுவனம். நேற்று மார்வெல் இந்தியா சார்பாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் `மார்வெல் ஆந்தெம்" என்ற பாடலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இன்று இந்தப் படத்தின் சிறப்பு டிரெய்லர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியான `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தின் தொடர்ச்சிதான் `அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்'. அந்தப் படத்தில் சூப்பர் ஹீரோக்களுக்கு எதிராக வில்லன் தானோஸ் வெற்றிபெற, அண்டத்தின் பாதி மக்கள்தொகை மறைந்து போனது. இதில் ஸ்பைடர்மேன், பிளாக் பேந்தர் எனப் பல சூப்பர் ஹீரோக்களும் அடங்குவர். இவர்களின் நிலை என்ன, மீதமிருக்கும் சூப்பர்ஹீரோக்கள் இவர்களை மீட்டெடுப்பார்களா போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் இந்தப் படம். இப்போது வெளியாகியுள்ள புதிய டிரெய்லரில் இவர்கள் மீண்டும் தானோஸை நேருக்கு நேர் சந்திக்கின்றனர். விண்வெளியில் சிக்கிக்கொண்டிருந்த அயர்ன்மேன் மீண்டும் கேப்டன் அமெரிக்காவைச் சந்திக்கிறார். இன்னும் வெளியாக இருபதிற்கும் மேலான நாள்கள் இருப்பினும் இந்தப் புதிய டிரெய்லர் இப்போதே மார்வெல் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்திருக்கிறது. 

ம.காசி விஸ்வநாதன்

விகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி