Published:Updated:

`கேம் ஆஃப் த்ரோன்ஸ்' முக்கிய கதாபாத்திரங்களின் சம்பளம் எவ்வளவு?

செ.கார்த்திகேயன்

படங்களைவிட சீரியலில், தன் பக்கம் ரசிகர்களை ஈர்ப்பது மிகவும் சவாலான காரியம். ஆனால், 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்', அதைக் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறது. இந்த சீரியலுக்கு இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இன்று கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

`கேம் ஆஃப் த்ரோன்ஸ்' முக்கிய கதாபாத்திரங்களின் சம்பளம் எவ்வளவு?
`கேம் ஆஃப் த்ரோன்ஸ்' முக்கிய கதாபாத்திரங்களின் சம்பளம் எவ்வளவு?

`கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒளிபரப்பாகும் நேரம் அதிகாலையாக இருந்தாலும் சரி, அதன் ரசிகர்கள் ஸ்க்ரீன் முன்பாக ஆன்-டைமில் ஆஜராகிவிடுகிறார்கள். அந்த அளவுக்கு ஹிட் சீரியலாக `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' உருவெடுத்திருக்கிறது.

படங்களைவிட சீரியலில் தன் பக்கம் ரசிகர்களை ஈர்ப்பது மிகவும் சவாலான காரியம். `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' அதைக் கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறது. இந்த சீரியலுக்கு இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை 7 சீஸன்கள் முடிந்திருக்கின்றன. தற்போது 8-வது சீஸன் ஆரம்பமாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சக்சஸ் சீரியலாக உருவெடுத்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம் இதன் கதைக்களமாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் பங்கும் பெருமளவு இருக்கிறது. அதனால்தான் இந்த சீரியலைத் தயாரிக்கும் ஹெச்.பி.ஓ நிறுவனம் கோடிக்கணக்கில் அவர்களுக்குச் சம்பளம் வழங்கிக்கொண்டிருக்கிறது. 

முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த ஒவ்வொருவரும், ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதுதான் இப்போது டாக் ஆஃப் தி டவுன். யார் யார், எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது தெரிந்தால், நீங்கள் வியப்பில் ஆழ்வது நிச்சயம்!

ஜான் ஸ்நோ 

இந்த சீரியலில் `ஜான் ஸ்நோ' கதாபாத்திரத்தில், கிட் ஹாரிங்டன்  நடித்துக்கொண்டிருக்கிறார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் முதல் சீஸனிலிருந்து, 8-வது சீஸன் வரை முழுமையாக டிராவல் செய்திருக்கும் கதாபாத்திரங்களில் ஜான் ஸ்நோ கதாபாத்திரமும் ஒன்று. 8-வது சீஸனுக்கு முன்பு வரை ஜான் ஸ்நோவாக நடிக்கும் கிட் ஹாரிங்டன் சம்பளம் ஒரு எபிசோடுக்கு சுமார் 3.5 கோடி ரூபாயாக ($ 5,00,000) இருந்தது. தற்போதைய 8-வது சீஸனின் ஒரு எபிசோடுக்கு சுமார் 5 கோடி ரூபாயை ($ 710,000) சம்பளமாகப் பெறுகிறார். 

டெனேரியஸ் டர்கேரியன்

இந்த சீரியலில் டெனேரியஸ் டர்கேரியனாக நடிப்பவர் எமிலியா க்ளார்க். இவரும் முதல் சீஸனிலிருந்து 8-வது சீஸன் வரை நடித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கென்றே தனியாக ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. 7-வது சீஸன் வரை இவருடைய சம்பளம் ஒரு எபிசோடுக்கு சுமார் 3.5 கோடி ரூபாயாக ($5,00,000) இருந்தது. 8-வது சீஸனுக்கு சுமார் 5 கோடி ரூபாயை ($710,000) சம்பளமாகப் பெறுகிறார்.

ஸ்டார்க் கிட்ஸ்: பிரண்டன், ஆரியா & சான்ஸா

ஹவுஸ் ஸ்டார்க் அரச குடும்பங்களில் வாரிசுகளாக ஆரியா ஸ்டார்க் கதாபாத்திரத்தில் மெய்ஸி வில்லியம்ஸ், பிரண்டன் ஸ்டார்க் கதாபாத்திரத்தில் ஐசக் ஹெம்ப்ஸ்டெட் ரைட் மற்றும் சன்ஸா ஸ்டார்க் கதாபாத்திரத்தில் சோஃபி டர்னர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். டெனேரியஸ் டர்கேரியன் கதாபாத்திரத்துக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், ஆரியா ஸ்டார்க் கதாபாத்திரத்துக்கும் இருக்கிறது எனச் சொல்லலாம். ஏனெனில், முதல் சீஸனில் குழந்தை நட்சத்திரமாகவே வாழ்க்கையைத் தொடங்கி, 8-வது சீஸனில் பெண்ணாக வளர்ந்து நிற்கும் ஆரியா ஸ்டார்க் கடந்து வந்த பாதை அதிபயங்கரமானது. இவர்கள் மூவருக்கும் கடைசி சீஸனின் ஒவ்வொரு எபிசோடுக்கும் சுமார் 1.5 கோடி ரூபாய் ($2,10,000) சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. 

செர்சி லானிஸ்டர் 

கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையில் லீனா ஹெட்டிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் `செர்சி லானிஸ்டர்' கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் இந்த சீரியலில் வில்லியாகவே வாழ்ந்திருக்கிறார். இவருக்கும் தற்போதைய 8-வது சீஸனின் எபிசோட் ஒன்றுக்கு சுமார் 5 கோடி ரூபாய் ($ 710,000) சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது.

டிரியன் லானிஸ்டர்

ஹாலிவுட்டின் பிரபல நடிகர்களுள் ஒருவரான, பீட்டர் டிங்க்லேஜ், இந்த சீரியலில் `டிரியன் லானிஸ்டர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விளையாட்டுத்தனமான கதாபாத்திரம் என்றாலும், கதைக்களத்தின் அனைத்து கோணங்களிலும் டிராவல் செய்யும் கதாபாத்திரமாக இது இருக்கும். இவருக்கும் கடைசி சீஸனின் ஒவ்வொரு எபிசோடுக்கும் சுமார் 5 கோடி ரூபாய் ($710,000) சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. 

ஜெய்மி லானிஸ்டர்

ஜெய்மி லானிஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நிகோலஜ் கோஸ்டெர்-வால்டோ. ஜான் ஸ்நோ, டெனேரியஸ் டர்கேரியன் போல இந்தக் கதாபாத்திரமும் முதல் சீசனிலிருந்து கதைக்களம் முழுவதும் டிராவலாகும். இவருக்கும் கடைசி சீசனின் ஒவ்வொரு எபிசோடுக்கும் சுமார் 5 கோடி ரூபாய் ($ 710,000) சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.