Published:Updated:

'அவெஞ்சர்ஸ்' டோனி ஸ்டார்க் - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆர்யா ஸ்டார்க்... இருவருக்குமான 6 ஒற்றுமைகள்!

'அவெஞ்சர்ஸ்' டோனி ஸ்டார்க் - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆர்யா ஸ்டார்க்... இருவருக்குமான 6 ஒற்றுமைகள்!

'அவெஞ்சர்ஸ்' டோனி ஸ்டார்க் - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆர்யா ஸ்டார்க் இருவருக்குமான ஒற்றுமைகள்.

'அவெஞ்சர்ஸ்' டோனி ஸ்டார்க் - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆர்யா ஸ்டார்க்... இருவருக்குமான 6 ஒற்றுமைகள்!

'அவெஞ்சர்ஸ்' டோனி ஸ்டார்க் - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆர்யா ஸ்டார்க் இருவருக்குமான ஒற்றுமைகள்.

Published:Updated:
'அவெஞ்சர்ஸ்' டோனி ஸ்டார்க் - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆர்யா ஸ்டார்க்... இருவருக்குமான 6 ஒற்றுமைகள்!

டோனி ஸ்டார்க், ஆர்யா ஸ்டார்க் இந்த இருவரும்தான் தற்போதைய 'டாக் ஆஃப் தி டவுன்'. இந்த இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். (இது முழுக்கவே அவர்களது உலகத்தின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது.) 

முன் குறிப்பு : 'அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' மற்றும் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' 8-வது சீஸனில் 3-வது எபிசோடுகள் பார்க்காதவர்கள் இந்தக் கட்டுரையைத் தவிர்க்கவும். 

'அவெஞ்சர்ஸ்' டோனி ஸ்டார்க் - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆர்யா ஸ்டார்க்... இருவருக்குமான 6 ஒற்றுமைகள்!

டோனி ஸ்டார்க்கும் ஆர்யா ஸ்டார்க்கும் வெவ்வேறு உலகத்தைச் சேர்ந்தவர்கள். ஜார்ஜ் மார்டின் எழுதிய 'A song of ice and fire' எனும் புத்தகத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்தின் பெயர்தான், ஆர்யா ஸ்டார்க். அதை மையமாக வைத்து வெளிவந்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரிஸில் ஆர்யா ஸ்டார்க் கதாபாத்திரத்தில் நடித்தவர் பெயர் மெய்ஸி வில்லியம்ஸ். அந்தக் கதாபாத்திரத்தைவிட இவர் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான் அது ஃபேமஸ் ஆனது. அதேபோல, மார்வெல் உலகின் சூப்பர் ஹீரோவான அயர்ன் மேன் கதாபாத்திரம், ராபர்ட் டௌனி ஜூனியர் எனும் நடிகன் அதில் நடித்த பிறகுதான் பிரபலமானது. இப்படி இந்த இருவரும் பிரபலமாக, எல்லோருக்கும் இவர்களைப் பிடித்துப்போக என்ன காரணம்?

கதைப்படி, டோனி ஸ்டார்க் ஹோவர்டு ஸ்டார்கின் மகன். மார்வெல்லின் 'அவெஞ்சர்ஸ்' அணியைச் சேர்ந்தவர். அந்த டீமின் ஹைடெக் டெக்கி இவர்தான். அவெஞ்சர்ஸில் இருக்கும் எல்லோருக்கும் சில சூப்பர் ஹீரோ தன்மைகள் இருந்தாலும், தன் புத்திக் கூர்மையால் மட்டுமே சூப்பர் ஹீரோவாக உருமாறியிருப்பார், அயர்ன் மேன் (எ) டோனி ஸ்டார்க். முதல் பாகத்தில் ஆப்கானிஸ்தான் ஆர்மியிடம் மாட்டிக்கொள்ளும் இவர், தன் புத்திசாலித்தனத்தால் மட்டுமே அங்கிருந்து தப்பிப்பார். அதோடு நிறுத்தாமல், அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பைத் தலையில் ஏற்றிக்கொண்டார். அதற்காக தன்னுடைய அயர்ன் மேன் உடையை வெவ்வேறு பரிமாணத்தை எட்டச் செய்து அசுர வளர்ச்சியடைந்தார். மார்வெல் சார்பாக வெளியான முதல் படம் 'அயர்ன் மேன்'தான். அங்கிருந்து ஆரம்பித்து 10 வருடங்களுக்கும்மேல் பயணித்த இவர், 'அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' வரை வந்திருக்கிறார். 

'அவெஞ்சர்ஸ்' டோனி ஸ்டார்க் - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆர்யா ஸ்டார்க்... இருவருக்குமான 6 ஒற்றுமைகள்!

மறுமுனையில், ஆர்யா ஸ்டார்க். வின்டர்ஃபெல்லைச் சேர்ந்த நெட் ஸ்டார்க்கின் செல்ல மகள். அந்தச் சின்ன வயதில் பொம்மை, கண்ணாமூச்சி என விளையாடச் செல்லாமல், சிறு வயதிலேயே கத்தியைத் தூக்கிக்கொண்டு வாள் வீச்சுப் பயிற்சியை மேற்கொள்ளச் சென்றவர். டோனி ஸ்டார்க்கைப்போல, ஆர்யா ஸ்டார்க்கும் தன்னைத் தானே செய்துக்கியவள்தான். கிங்ஸ் லேண்டிங்கில் தனது கண் முன்னே அவரின் தந்தையான நெட் ஸ்டார்க்கை இழந்தார். அங்கிருந்து தட்டுத் தடுமாறி பயணத்தைத் தொடங்கி, ப்ராவோஸ் வரை சென்றார். தன் அம்மாவையும் அண்ணனையும் இழந்த இவள் முழுக்கவே பழிவாங்கும் உணர்வோடுதான் வளர்ந்தாள். ஃபேஸ்லெஸ் மென் எனும் அமைப்பில் சேர்ந்து பல வித்தைகளைக் கற்றுக்கொண்டாள். கற்றுக்கொண்ட வித்தைகளைத் தனது பழிவாங்கலுக்குப் பயன்படுத்திக்கொண்டாள். வெவ்வேறு உலகத்தில் வாழ்ந்துகொண்ட இந்த இருவரும் தங்களது திறமைகளை மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டார்கள். 

'அவெஞ்சஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தில் தானோஸின் கோபத்துக்கு ஆளாகி கிட்டத்தட்ட பாதி உயிரை இழந்துவிடுவார் டோனி ஸ்டார்க். பின் டாக்டர் ஸ்ட்ரேன்ஜின் உதவியோடு மீண்டும் உயிர்த்தெழுவார். 'எண்டு கேம்' பாகத்தில் மீண்டும் தானோஸுடன் சண்டையிடும்போது, மொத்த அவெஞ்சர்ஸும் இவரால்தான் தப்பிக்கும். உயிரிழக்க நேரிடும் எனத் தெரிந்த பின்னும், இவர் எடுக்கும் இறுதி முடிவு பார்த்த ஒவ்வொருவரையும் பதைபதைக்க வைத்திருக்கும். 

மறுபக்கம், ஆர்யா ஸ்டார்க்கின் வெறித்தனப் பாய்ச்சல். மொத்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரிஸும் இறுதியில் நைட் கிங்குடன் நடக்கப்போகும் யுத்தத்துக்குதான் தயாராகிக்கொண்டிருக்கும். 'அவெஞ்சர்ஸ்' படத்தில் மொத்த நம்பிக்கையும் இழந்துவிடுவதைப்போல, 'கேம் ஆஃப் த்ரோன்ஸி'லும் மொத்தப் படையும் அவர்களது நம்பிக்கையை இழந்துவிடும். ப்ரானும், தன்னுடைய இறுதி வார்த்தைகளைச் சொல்லிவிட்டு மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார். யாரும் எதிர்பார்க்காத அந்த நேரத்தில் பாய்ந்து வந்து நைட் கிங்கைக் கொன்றதெல்லாம்... ஏலியன் லெவல்! 'அவெஞ்சர்ஸ்', 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' என இருதரப்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ் எலமென்ட் இது! 

'அவெஞ்சர்ஸ்' டோனி ஸ்டார்க் - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆர்யா ஸ்டார்க்... இருவருக்குமான 6 ஒற்றுமைகள்!

இவர்களுக்கிடையே இருக்கும் மிகப்பெரிய ஒற்றுமை, தன்னம்பிக்கை. அதை எந்தச் சூழலிலும் இருவரும் இழக்க மாட்டார்கள். நினைத்ததை அடைந்தே தீர வேண்டும் என்ற நம்பிக்கைதான், பலருக்கும் இவர்களைப் பிடிக்கக் காரணமாக இருக்கும். தவிர, இவர்கள் இருவருக்குமிடையே இருக்கும் குணாதிசியம். எந்தக் கடினமான பிரச்னைகளையும் 'ஜஸ்ட் லைக் தட்' டீல் செய்வார்கள். அதேசமயம் பிடித்தவர்களுக்காகத் தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள இருவருமே தயங்க மாட்டார்கள். 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' வெளியாகி ஹிட்டான சமயத்தில் பலரும் அவர்களின் குழந்தைகளுக்கு ஆர்யா எனப் பெயரிட்டார்கள். 

இந்த இரண்டு ஸ்டார்க்களும் நமக்குத் திரையில்தான் அறிமுகமானார்கள். ஆனால், இந்த இருவருமே நமக்கு ரொம்பப் பரிச்சயமான ஆளாகத்தான் திகழ்கிறார்கள். அதற்குக் முக்கியக் காரணம், அவர்களை நம் குணாதிசயத்தோடு பொருத்திப் பார்ப்பதுதான். இருவரின் பார்வையில் இருக்கும் கம்பீரம். கீழே விழுந்தாலும் கம்பீரமாக மீண்டும் எழுந்து நின்று அடிக்கும் இவர்களது தைரியம்தான், அனைவரையும் இவர்களின் பக்கம் கட்டி இழுத்தது. இவற்றையெல்லாம் தாண்டி இவர்களைப் பிடிக்க மற்றொரு முக்கியக் காரணம், இவர்களது மெச்சூரிட்டி. கடைசி வரை ஒரே குறிக்கோளில் நிற்கும் தன்மை. 

இருவருமே அவர்களது உலகின் சூப்பர் ஹீரோதான்!