Published:Updated:

``எனக்கு இன்னொரு அயர்ன்மேன் வேணும்... அடம்பிடிக்கும் ஸ்பைடர்மேன்" - #SpidermanFarFromHome

``எனக்கு இன்னொரு அயர்ன்மேன் வேணும்... அடம்பிடிக்கும் ஸ்பைடர்மேன்" - #SpidermanFarFromHome
``எனக்கு இன்னொரு அயர்ன்மேன் வேணும்... அடம்பிடிக்கும் ஸ்பைடர்மேன்" - #SpidermanFarFromHome

`Spider-Man: Far From Home' டிரெய்லரில் என்னென்ன ஸ்பெஷல்?!

`அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' படத்தைப் பார்க்காதவர்களுக்கு இதில் கண்டிப்பாகப் பல ஸ்பாய்லர்கள் இருக்கும். இப்படித்தான் தொடங்குகிறது, `ஸ்பைடர்மேன் - ஃபார் ஃப்ரம் ஹோம்' படத்தின் டிரெய்லர் (இந்தக் கட்டுரைக்கும் அது பொருந்தும்). அதைச் சொல்வதோ, ஸ்பாய்லர்களை லீக் செய்வதற்குப் பேர்போன நடிகர் டாம் ஹோலாண்ட். அதற்காகவே `அமாவாச... நீதான் பேசுறியா' எனும் அளவுக்கு நெட்டிசன்ஸ் அவரைக் கலாய்த்துத் தள்ளுகிறார்கள். `அவெஞ்சர்ஸ்' தொடர் முடிவுக்கு வந்த பிறகு, மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸில் வெளியாகும் முதல் படம் இது. மேலும், அந்தத் தொடரின் மூன்றாம் கட்டத்தின் (ஃபேஸ் த்ரி) கடைசிப் படமும் இதுவே. அதனாலேயே என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு இதில் எக்கச்சக்கம். அப்படி இந்தப் படத்தில் என்னதான் ஸ்பெஷல்?

``எனக்கு இன்னொரு அயர்ன்மேன் வேணும்... அடம்பிடிக்கும் ஸ்பைடர்மேன்" - #SpidermanFarFromHome

`எண்டு கேம்' படத்தில் அயர்ன்மேனை (டோனி ஸ்டார்க்) இழந்து அந்தத் துக்கத்திலிருந்து மீளாமல் வாடுகிறான், பீட்டர் பார்க்கர் என்கிற ஸ்பைடர்மேன். `எங்கே பாத்தாலும் எனக்கு அவர் முகம்தான் தெரியுது' என்றபடி டிரெய்லர் தொடங்குகிறது. அந்தத் துக்கம் அவனைப்போலவே பலருக்கும் இருக்கிறது. இருந்தாலும், டோனி ஸ்டார்க்கின் செல்லப்பிள்ளையான பீட்டருக்குப் பிறரைவிட அதிகமாகவே துக்கம் இருக்குமல்லவா?! அப்படி இருக்கையில் தன் பள்ளி நண்பர்களுடன் ஐரோப்பாவுக்கு டூர் செல்கிறார், பீட்டர். அதுவும் தன்னுடைய அவெஞ்சர்ஸ் ஸ்பைடர்மேன் ஷூட் எடுக்காமலே சென்றுவிடுகிறார். அப்போதுதான் அந்த துர் நிகழ்வு நேர்கிறது. `எண்டு கேம்' படத்தில் டோனி ஸ்டார்க் சொடுக்கியதால் (டெஸிமேஷன்) தானோஸ் மற்றும் அவனது படை இறந்தது மட்டுமல்லாமல், மல்டிவர்ஸ் எனப்படும் மாற்று உலகங்களும் திறக்கப்பட்டுவிட்டன. அதனால், பிற யூனிவர்ஸ்களிலிருந்து 'The Elementals' எனும் தீய சக்திகள் இந்த யூனிவர்ஸுக்குள் நுழைந்து விடுகின்றன.

``எனக்கு இன்னொரு அயர்ன்மேன் வேணும்... அடம்பிடிக்கும் ஸ்பைடர்மேன்" - #SpidermanFarFromHome

அவெஞ்சர்ஸின் பிற சூப்பர் ஹீரோக்களான தோர், கேப்டன் மார்வெல், எல்லோரும் பூமியைவிட்டு தொலைதூரத்தில் இருப்பதால், இப்போதைக்கு `உன்னை நம்பிதான் இந்த உலகமே இருக்கு' எனச் சும்மா இருந்த பீட்டரைச் சுரண்டுகிறது, நிக் ஃப்யூரி தலைமையிலான `ஷீல்ட்'. `நானே பொடிப்பய... எனக்கும் ஃப்ரெண்ட்ஸ், கேர்ள் ஃப்ரெண்ட்லாம் இருக்காங்க. என்னையே ஏன் திரும்பத் திரும்பத் தொல்லை பண்ணுறீங்க' எனக் கூறிவிட்டு, அவர்களைத் தட்டிக் கழிக்கிறான், பீட்டர். மேலும், `இந்த உலகத்துக்கு இன்னொரு அயர்ன்மேன் வேணும்' என எமோஷனலாகவும் சொல்கிறான்.

``எனக்கு இன்னொரு அயர்ன்மேன் வேணும்... அடம்பிடிக்கும் ஸ்பைடர்மேன்" - #SpidermanFarFromHome

அப்படி அலட்சியமாக இருக்கும் பீட்டரை, `நீதான் அந்த அடுத்த அயர்ன்மேன். மீண்டும் எழுந்துவா படைவீரா' எனப் `KGF' படம் ரேஞ்சுக்கு வசனம் பேசி சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றனர். பீட்டர் மீண்டும் ஸ்பைடர்மேன் ஆகிறானா, உலகத்தைக் காப்பாற்றுவானா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. இதற்கிடையில் எம்.ஜேவுடனான காதல், ஹேப்பியுடனான பாசம் என உணர்வுகளையும் கொட்டித் தீர்க்கப்போகிறது, 'ஃபார் ஃப்ரம் ஹோம்'.

``எனக்கு இன்னொரு அயர்ன்மேன் வேணும்... அடம்பிடிக்கும் ஸ்பைடர்மேன்" - #SpidermanFarFromHome

இப்படத்தின் மிக முக்கிய அம்சம், மிஸ்டீரியோ எனப்படும் க்வண்டின் பெக் என்ற கேரக்டர்தான். பொதுவாக, மிஸ்டீரியோ பாத்திரம் மார்வெல் காமிக்ஸ்களில் ஸ்பைடர்மேனுக்கு சூப்பர் வில்லன் பாத்திரமாகத்தான் வரும். ஆனால், இந்த டிரெய்லரில் அவன் மல்டிவெர்ஸ் வழியாக இந்த உலகத்துக்கு இன்னொரு சூப்பர் ஹீரோவாகத்தான் வருகிறான். மல்டிவெர்ஸின் அறிவியல் அப்படித்தான் இயங்கும். அப்படியானால், அந்த உலகத்தில் ஸ்பைடர்மேன் வில்லனாகக்கூட இருக்கலாம். அதற்கும் இந்த டிரெய்லரில் சில குறியீடுகள் உள்ளன. கறுப்பு நிறத்தில் ஒரு ஸ்பைடர்மேன் வருகிறான். ஒருவேளை அவன் வில்லனாக இருப்பதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது. அதே சமயத்தில் மிஸ்டீரியோதான் ஹீரோ வேடத்தில் இருந்த வில்லன் எனக் கடைசியில் ட்விஸ்ட் அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எதுவாக இருந்தாலும், ஜூலை 2- ம் தேதி தெரிந்துவிடும். இந்தப் படத்தில் மிஸ்டீரியோவாகப் புகழ்பெற்ற நடிகர் Jake Gyllenhaal நடித்துள்ளார். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு