Published:Updated:

இந்த ஆண்டு ஆஸ்கர்விருது வாங்கப்போகும் நடிகை யார்? ஓர் அலசல்

இந்த ஆண்டு ஆஸ்கர்விருது வாங்கப்போகும் நடிகை யார்? ஓர் அலசல்
இந்த ஆண்டு ஆஸ்கர்விருது வாங்கப்போகும் நடிகை யார்? ஓர் அலசல்

இந்த ஆண்டு ஆஸ்கர்விருது வாங்கப்போகும் நடிகை யார்? ஓர் அலசல்

நம்மூரில் ஹீரோக்களை முன்னிலைப்படுத்தி படங்கள் வருவது போல, ஹாலிவுட்டில் நடிகைகளை முன்னிலைப்படுத்திய படங்கள் எப்போதுமே வரும். இந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படங்களில் பல ஹீரோயின்கள் கலக்கி இருக்கிறார்கள். மேகி ஸ்மித் (தி லேடி இன் தி வேன்), அலிசியா விகாண்டர் (தி டேனிஷ் கேர்ள்), சார்லைஸ் தெரோன் (மேட் மேக்ஸ்) ரூனி மாரா (கரோல்), ஏமி ஸ்கூனர் (ட்ரெய்ன்ரெக்) ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், இவர்களை விட ஆஸ்கர் குழுவினரைக் கவர்ந்து, அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் ஐந்து படங்களின் ஹீரோயின்கள் யார், அவர்களில் ஆஸ்கரை வெல்லப் போவது யார் என்பதைக் கணிப்போமா?

ஜெனிஃபெர் லாரென்ஸ் (ஜாய்)

இந்த ஆண்டு ஆஸ்கர்விருது வாங்கப்போகும் நடிகை யார்? ஓர் அலசல்

ஜாய் மங்கானோ என்ற அமெரிக்கத் தொழிலதிபரைப் பற்றிய படம் தான் ஜாய். ஜாய் மங்கானோவா ஜெனிஃபெர் லாரென்ஸ் அசத்தி இருந்தாலும் , படம் மிகப்பெரிய ஃபிளாப். 2012-ம் ஆண்டு ‘சில்வர் லைனிங்க்ஸ் பிளேபுக்’ படத்திற்காக ஆஸ்கர் வாங்கிய லாரென்ஸிற்கு இது ஆஸ்கரின் நாலாவது பரிந்துரை.கடந்த ஆண்டு ஹாலிவுட்டில் நடிகர்களுக்கு இணையாக , நடிகைகளுக்கு சம்பளம் தருவதில்லை என போர்க்கொடி தூக்கிய முக்கிய நாயகிகளில் ஜெனியும் ஒருவர். படம் பார்த்தவர்களுக்கு அதன் காரணம் புரியும். ஆனால், ஜெனி வேறு ஒரு நல்ல கதையை தேர்வு செய்து இருக்கலாம்

சார்லோட் ராம்ப்லிங் (45 இயர்ஸ்)

ஆஸ்கர் விருதுகள் பட்டியலில், தன் பெயர் பரிந்துரை செய்யப்பட சார்லோட்டிற்கு ஐம்பது ஆண்டுகள் ஆகி இருக்கிறது. ஆம், சார்லோட் நடிக்க வந்தது 1964-ல். 69 வயதான சார்லோட் இதற்கு முன்னரும் சில நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், ஆஸ்காரின் கடைக்கண் பார்வை இப்போது தான் அவர் மீது பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு ஆஸ்கர்விருது வாங்கப்போகும் நடிகை யார்? ஓர் அலசல்

கேட் மெர்சருக்கும் (சார்லோட் ராம்ப்லிங்), ஜியாஃப் மெர்சருக்கும் (டாம் கர்ட்னி) திருமணம் ஆகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதற்கு விழா ஏற்பாடு செய்கிறார்கள். சரியாக ஒரு வாரத்திற்கு முன் , ஒரு செய்தி அவர்கள் வாழ்க்கையில் பிரிவை ஏற்படுத்துகிறது. 1962-ம்  பனி மலையில் மாட்டிக்கொண்டு இறந்த ஜியாஃபின் முன்னாள் காதலியின் உடல் கிடைக்கிறது. ஜியாஃப் அதிலிருந்து வித்தியாசமாக நடந்துகொள்கிறான். மறுபடியும் புகைபிடிக்க ஆரம்பிக்கிறான். ஒரு நாள் பரண் மேல் எதையோ பார்த்தபடி அமர்ந்து இருக்கிற ஜியாஃப், வெளியே போனதும், அதை சென்று பார்க்கிறாள் கேட். அவரது முன்னாள் காதலி கர்ப்பமாய் இருக்கும் போது பனியில் சிக்கி இறந்துபோயிருக்கிறார் என்பதை அறிகிறார்.
அந்த ஒரு வாரத்தில், ஒரு வயது முதிர்ந்த பெண் எவ்வளவு மன நிம்மதிகளை இழப்பார் என்பதை மிக அழகாக நடித்துக் காட்டியிருக்கிறார் சார்லோட். பெர்லின் திரைப்பட திருவிழாவில் சிறந்த நடிகைக்கான விருதை சார்லோட் வென்று இருந்தாலும், இவ்வருட போட்டியில் ஆஸ்கர் வெல்வதெல்லாம் மிகக்கடினம்.

கேட் பிளாங்கட் (கரோல் )

த்ரில்லர் கதையான ‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் ஏ ட்ரெய்ன்’ எழுதிய பேட்ரிசியா ஹைஸ்மித்தின் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட கதை தான் கரோல். எழுத்தாளர் பேட்ரிசியா ஹைஸ்மித் லெஸ்பியனாக இருந்த போதும், இந்தக் கதையை வேறொரு புனைபெயரில் (Claire Morgan) (க்ளைர் மோர்கன்) தான் எழுதினார்.
கரோல் தன் மகளுக்காக கிறிஸ்துமஸ் பரிசு ஒன்று வாங்க மான்ஹாட்டனில் இருக்கும் ஒரு கடைக்கு வருகிறார்.அங்கு இருக்கும் தெரெசாவிடம் (ரூனி மாரா) ஒரு பொம்மையை ஆர்டர் செய்துவிட்டு, அவரது கிளவுஸை அங்கு விட்டுச்செல்கிறாள் கரோல்.

இந்த ஆண்டு ஆஸ்கர்விருது வாங்கப்போகும் நடிகை யார்? ஓர் அலசல்

தெரெசா தன் பாய்ஃப்ரெண்ட் அவள் மீது காட்டும் காதலில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்.தெரெசா கரோலின் கிளவுசை பார்சலில் அனுப்ப, தெரெசாவை வீட்டுக்கு அழைக்கிறார் கரோல். கரோலுக்கும் அவரது கணவன் மீது நாட்டமில்லை. விவாகரத்திற்காக காத்து இருக்கிறாள்.1950-களில் நடக்கும் கதை என்பதால் LGBT(லெஸ்பியன் கே பைசெக்ஸுவல் ட்ரான்ஸ்ஜெண்டெர்) ஆகியவர்களைப் பற்றிய புரிதல் யாருக்கும் பெரிதாக இல்லை என்பது சொல்லப்படுகிறது.

கணவர் தூற்றுதல், ஒரு சிறு பெண்ணை தன் ஆசைக்கு பலியாக்குதல்,மகளைப் பிரிந்து இருக்கும் போது வாடுதல் என கலக்கியிருக்கிறார் கேட் பிளாங்கட்.

இந்த ஆண்டின் கோல்டன் குளோப் விருதுகளில் படம் எந்தவொரு விருதையும் கைப்பற்றாமல் இருந்தாலும், கேன்ஸ் சர்வதேச திரைப்பட திருவிழாவில்,சிறந்த நடிகைக்கான பட்டம் வென்றது கரோல் திரைப்படம் தான். ஆனால், வென்றவர் கேட் பிளாங்கட் அல்ல தெரெசா கதாபாத்திரத்தில் நடித்த ரூனி மாரா. ஏழாவது முறையாக ஆஸ்கரின் பரிந்துரைப் பட்டியலில் இருக்கும் கேட் இதுவரை இருமுறை ஆஸ்கர் வென்று இருக்கிறார். எண்ணிக்கைப் பட்டியல் மூன்றாகாது என்றே சொல்கின்றனர் விபரம் அறிந்தோர்.

சைரோஸ் ரோனன் (ப்ரூக்லின் )

அடோன்மென்ட் படத்திற்குப் பின் , சைரோஸ் ரோனனுக்கு (Saoirse Ronan) பரிந்துரைப்படும் இரண்டாவது ஆஸ்கர் இது..

அயர்லாந்தில் இருந்து கடல் மார்க்கமாக அமெரிக்காவின் நியு யார்க்கில் இருக்கும் ப்ரூக்லினிற்கு புலம்பெயர்கிறாள் ஐலிஷ். கடலில் பயணப்படும் போதும் சரி, அமெரிக்காவில் இருக்கும் போதும் சரி, ஐலிஷ் அதீத கூச்சமடைகிறாள். அங்கிருக்கும் ஒரு கடையில் வேலைக்கு சேர்கிறாள். 1950-களில் நடக்கும் கதை என்பதால், அயர்லாந்தில் இருக்கும் ஐலிஷின் சகோதரி ரோஸுடன் கடிதப் போக்குவரத்து தொடர்கிறது. ஐலிஷ் தன் வீட்டின் நினைவாகவே இருக்கிறாள். ப்ரூக்லினில் இருக்கும் இத்தாலியரான டோனி , ஐலிஷ் மீது காதல் வயப்படுகிறான்.

இந்த ஆண்டு ஆஸ்கர்விருது வாங்கப்போகும் நடிகை யார்? ஓர் அலசல்

இந்நிலையில் ரோஸ் இறந்துவிட, அயர்லாந்திற்குப் பயணப்படுகிறாள் ஐலிஷ். அதற்கு முன் டோனிக்கும், ஐலிஷுக்கும் ரகசியமாக திருமணம் நடக்கிறது. அயர்லாந்து செல்லும் ஐலிஷ், மீண்டும் ப்ரூக்லின் வந்து டோனியோடு வாழ்ந்தாரா என்பதைச் சொல்லி முடிகிறது கதை.

கள்ளத்தனமாக அமெரிக்க பயணத்தில் பீதியில் உறைந்திருப்பது; டோனி காதலை ஏற்க தாமதிப்பது; இறுதிக்காட்சியில் மீண்டும் அமெரிக்காவிற்கு வரும் போது கெத்தாக ஒரு தேர்ந்த பயணியைப் போல் வருவது என 21 வயதான ரோனன் அசத்தியிருக்கிறார்.

மூன்று ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் ப்ரூக்லின் படம் , ரூம் படம் மட்டும் கடந்த ஆண்டு வராமல் இருந்திருந்தால் சிறந்த நடிகைக்கான விருதை வாங்கியிருக்கும்.

ப்ரீ லார்சன் (ரூம்)

இந்த ஆண்டின் ஆஸ்கரில் நான்கு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது ப்ரீ லார்சன் நடித்த ரூம் திரைப்படம். இரண்டு விருதுகளையாவது ஆஸ்கரில் இப்படம் தட்டிச்செல்லும் என்பது பலரது கணிப்பு.
ஏழு ஆண்டுகளாக ஜாய் என்ற பெண்ணைக் கடத்தி தன் வீட்டில் உள்ள ஓர் அறையில் அடைத்து வைத்து அவளைத் தினமும் பல்வேறு பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குகிறான் நிக். ஜாய்க்கு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு ஜேக் எனப் பெயர் சூட்டுகிறாள். கிச்சன், கழிவறை, கட்டில் என எல்லாம் இருக்கும் அந்த அறை மட்டும்தான் உலகம் என ஜேக்கை நம்பவைக்கிறாள் ஜாய். அங்கு இருக்கும் தொலைக்காட்சியில் வரும் மனிதர்களை எல்லாம் கற்பனை என்கிறாள் ஜாய். அங்கு இருக்கும் பொருட்களுக்கு எல்லாம் ‘குட்மார்னிங்’ சொல்லி, தன்னோடு இருக்கும் நபர்களாக பாவிக்கிறான் ஜேக். அவளைப் பாலியல் கொடுமைகளுக்கு நிக் உட்படுத்தும்போதெல்லாம் ஜேக்கை ஒரு வார்ட்ரோபில் அடைத்து விடுகிறாள் ஜாய்.

இந்த ஆண்டு ஆஸ்கர்விருது வாங்கப்போகும் நடிகை யார்? ஓர் அலசல்

ஜேக்குக்கு ஐந்து வயது ஆகிறது. நிக் வேலையிழக்க, இவர்களுக்கென இனி எதையும் செய்ய முடியாது எனச் சொல்கிறான். ஜேக்கிடம் அறைக்கு வெளியே ஓர் உலகம் இருப்பதாகச் சொல்கிறாள் ஜாய். ஆனால், ஐந்து வயது மூளை இதையெல்லாம் நம்ப மறுக்கிறது. ஜேக்கை வைத்து இந்த அறையை விட்டு வெளியேறத் திட்டம் தீட்டுகிறாள். ஜேக்கிற்கு காய்ச்சல் எனச் சொல்லியும் நிக் அதைக் கண்டுகொள்ளாமல் விட, அடுத்த நாள் ஜேக் இறந்துவிட்டதாகக் கூறி ஒரு தார்ப்பாயில் சுற்றி வைக்கிறாள். ஜேக்கைப் புதைக்க வண்டியில் நிக் எடுத்துச் செல்லும்போது, சிறுவன் தப்பித்து வந்து தாயையும் காப்பாற்றுகிறான். நிக்கை காவல் துறை கைது செய்கிறது.

ஓர் அறையிலேயே மாட்டிகொள்வது; குழந்தையிடம் வேறொரு உலகம் இருக்கிறது என சொல்லி நம்பவைக்க முடியாமல் தோற்கும் போது விரக்தியில் இருப்பது; அவளது தந்தை, ஜேக்கை ஏற்றுக்கொள்ளாத போது கோபம் காட்டுவது; மீடியா பெண் கேட்கும் கேள்விகளால் மனமுடைவது என 26 வயதான ப்ரீ லார்சன் இந்தப் படத்தில் நிகழ்த்தியிருப்பது செம்ம பெர்ஃபார்மன்ஸ்.

இந்த ஆண்டு பாஃப்டா BAFTA விருதுகள், கோல்டன் குளோப் என முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் ப்ரீ லார்சன் தான் சிறந்த நடிகை. ஆஸ்கரிலும் அவர் வாங்குவதற்கான வாய்ப்புகள் 99.99% இருக்கிறது.

-கார்த்தி

அடுத்த கட்டுரைக்கு