Published:Updated:

வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் ஆஸ்கர், கலங்கும் கறுப்பினக் கலைஞர்கள்

வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் ஆஸ்கர், கலங்கும் கறுப்பினக் கலைஞர்கள்
வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் ஆஸ்கர், கலங்கும் கறுப்பினக் கலைஞர்கள்

உலக சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு கறுப்பர் இனத்தைச் சார்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இவ்வருடம் அது இன்னும் ஒரு படி மேலே போய் பல பிரபலங்கள் இவ்விழாவைப் புறக்கணித்துள்ளனர். பிரபல நடிகர் வில் ஸ்மித், இயக்குநர் ஸ்பைக் லீ ஆகிய முக்கியப் பிரமுகர்கள் கடுமையாக ஆஸ்கர் அமைப்பைச் சாட, கறுப்பின மக்கள் பலரும்  போராட்டங்களில் ஈடுபட்டனர்.

வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் ஆஸ்கர், கலங்கும் கறுப்பினக் கலைஞர்கள்

88 ஆண்டுகளில் 1 விருது

மென் இன் பிளாக்’, ‘ஐ ரோபாட்’ போன்ற வெற்றிப்படங்களின் நாயகன் வில் ஸ்மித் நடித்திருந்த கன்கசன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தில் டாக்டர். பென்னட் ஒமாலு என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் ஸ்மித். விமர்சகர்கள், ரசிகர்கள், நடிகர்கள் எனப் பலரும் அவரது நடிப்பைப் பாராட்டித் தள்ளினர். கோல்டன் குளோப் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்த இவரது பெயர், ஆஸ்கர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் கடும் கோபத்துக்குள்ளான அவரது மனைவி, நடிகை ஜோடா பென்னாட், விருது விழாவைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறினார். கடந்த சில வாரங்கள் முன்பு வில் ஸ்மித்தும், தான் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்தார்.

வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் ஆஸ்கர், கலங்கும் கறுப்பினக் கலைஞர்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வெள்ளையரல்லாத நடிகர் நடிகையும் பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறி முன்னனி இயக்குநரான ஸ்பைக் லீயும் விருது விழாவைப் புறக்கணித்தார். இதேபோல் கிரீட் படத்தின் இயக்குநர் ரியான் கூக்ளரும் விழாவைப் புறக்கணித்தார். அப்படத்தில் நடித்த முன்னணி நடிகர் சில்வஸ்டர் ஸ்டோலன் சிறந்த துணை நடிகர் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போதும், தனது பெயர் இயக்குநர்கள் பிரிவில் ஏன் பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறி அவர் புறக்கணித்தார்.இவர்கள் மட்டுமல்லாது அனோனி, ரோஜர் ராஸ் வில்லியம்ஸ், அவா டுவெர்னீ உள்ளிட்ட பல கருப்பின நடிகர், நடிகைகள், இயக்குநர்களும் புறக்கணிப்பு செய்தனர்.

அவர்கள் மட்டுமின்றி ரெவெரன்ட் அல் ஷார்ப்டன் தலைமையில் ஒரு குழு ஆஸ்கர் நிகழ்ச்சி தொடங்கும் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது. பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான கறுப்பர்கள் கலந்துகொண்டு இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 88 ஆண்டு பழமையான இந்த ஆஸ்கரை இதுவரை ஒரே ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண் மட்டுமே வாங்கியிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் ஆஸ்கர், கலங்கும் கறுப்பினக் கலைஞர்கள்

40க்கு 40 வெள்ளை?

கடந்த இரண்டு ஆண்டுகளாக, சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை என்ற நான்கு பிரிவுகளின் கீழும் ஒரு கறுப்பர் இனத்தவர்கூட பரிந்துரைக்கப்படவில்லை. 40 பேரும் வெள்ளையர்களே. இதை தற்செயலாக நடப்பதாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஆஸ்கர் விருதுப்பட்டியலில் இடம்பெறும் பெயர்கள் அகாடெமியிலுள்ளவர்களின் பரிந்துரையின் படியே தேர்வு செய்யப்படுகிறது.சுமார் 6,000 பேர் அடங்கிய அந்த அகாடெமியில் 94 சதவிகிதம் பேர் வெள்ளையர்களே. இப்படியிருக்கையில் இனப்பாகுபாடு இல்லை என்று எப்படி நாம் இவ்விஷயத்தை ஒதுக்கிவிட முடியும்? இப்படி வெள்ளையர்களை மட்டும் கவுரவப்படுத்த எதற்காக விருது வழங்க வேண்டும்? அதுவும் எந்த வித பாகுபாடும் தெரியக்கூடாத கலைத்துறையில்?

வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் ஆஸ்கர், கலங்கும் கறுப்பினக் கலைஞர்கள்

2044ம் ஆண்டு கணக்கில் அமெரிக்காவில் வெள்ளையர்களே சிறுபான்மையின மக்களாக இருப்பார்கள் என்று பி.பி.சி கூறுகிறது. ஆனால் அதுவரையிலும் வெள்ளையர்களின் இந்த நிற ஆதிக்கம் தொடருமா? ஆபிரஹாம் லிங்கன், மார்டின் லூதர் கிங் போன்ற பெருமனிதர்களின் போராட்டத்தால் கிடைத்த கறுப்பர்களின் உரிமை இதுபோன்ற நிகழ்வுகளால் மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளது. நிறத்தை ஒதுக்கி இவர்கள் எப்போது திறமைக்கு மரியாதை செலுத்தப்போகிறார்கள்?

ஆஸ்கருக்கு எதிரான கறுப்பின மக்களின் போராட்டத்தைக் காண கிளிக் செய்க https://www.youtube.com/watch?v=DwVBXxlJeVU

மு.பிரதீப் கிருஷ்ணா

பின் செல்ல