Published:Updated:

சம்மருக்கு குழந்தைகளை இந்தப் படம்லாம் பார்க்க வைங்க!

Vikatan Correspondent
சம்மருக்கு குழந்தைகளை இந்தப் படம்லாம் பார்க்க வைங்க!
சம்மருக்கு குழந்தைகளை இந்தப் படம்லாம் பார்க்க வைங்க!

குழந்தைகளின் இயல்பான படைப்பாற்றலையும், நல்லியல்புகளையும்  தக்க வைத்துக்கொள்ளவும், அவர்களின் கற்பனை வளத்தை வளர்த்தெடுக்கவும் குழந்தைகள் பார்க்க வேண்டிய ஒன்பது படங்களின் பார்வை... 

1. தி ரெட் பலூன் ( the red balloon )

சம்மருக்கு குழந்தைகளை இந்தப் படம்லாம் பார்க்க வைங்க!

ஒரு சிறுவனுக்கும், சிகப்பு வண்ண பலூனுக்கும் இடையேயான நட்பை பேசுகிறது இப்படம். சிறுவனுக்கும் பலூனுக்கும் இடையில் நடக்கிற காட்சிகள் குழந்தைகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும், அதே நேரத்தில் முற்றிலும் இயந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படத்தைப் பார்க்கும் போது நாமும் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தை  நிச்சயம் பெறுவோம் என்று  உறுதியாகச் சொல்ல முடியும். 1956 இல் வெளியான இக்குறும்படம் 34 நிமிடங்களே ஓடக்கூடியது. கேன்ஸ் ,ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இக்குறும்படத்தை இயக்கியவர் ஆல்பர்ட் லாமோரைஸ்.

2. தி வே ஹோம் ( the way home)

சம்மருக்கு குழந்தைகளை இந்தப் படம்லாம் பார்க்க வைங்க!

பாட்டிக்கும் பேரனுக்கும் இடையேயான உறவையும், நிபந்தனையற்ற அன்பின் வலிமையையும்  உணர்வு பூர்வமாக  சித்தரிக்கிறது இந்தப் படம். பாட்டியிடம் கதை கேட்கும் காலம் மலையேறி போன காலத்தில் இந்தப் படத்தைப் பார்க்கும் குழந்தைகள் நிச்சயம் பாட்டியின் அருமையை புரிந்துகொள்வார்கள். 2002 ல் கொரிய மொழியில் வெளியான இப்படத்தை இயக்கியவர் ஹியாங் லீ என்ற பெண்.

3. சில்ரன் ஆஃப் ஹெவன் ( children of heaven)

சம்மருக்கு குழந்தைகளை இந்தப் படம்லாம் பார்க்க வைங்க!

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அண்ணன், தங்கைக்கு இடையேயுள்ள அன்பையும், தொலைந்து போன ஷூவையும் பற்றியது  இந்த  ஈரானியப் படம். மனதுக்கு நெகிழ்வான பல காட்சிகளை கொண்ட இப்படத்தைப் பார்க்கும் குழந்தைகள் மனதில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் , பெற்றோர்களின் நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்  போன்றவை ஆழமாக பதியும். 1997 இல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் மஜித் மஜீதி

4 .ஈ.டி. (et extra terrestrial)

சம்மருக்கு குழந்தைகளை இந்தப் படம்லாம் பார்க்க வைங்க!

ஜீராசிக் பார்க் படத்தை இயக்கிய ஸீடீவன் ஸிபில்பெர்க் இயக்கிய படம் இது. பூமிக்கு வந்த ஏலியனுக்கு சிறுவர்களுக்கும் இடையேயான நடபையும் அன்பையும் பேசுகிறது இப்படம். குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற பல காட்சிகளையும் அற்புதமான கதையையும் கொண்ட இந்தப் படத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளுடன் பார்க்க வேண்டும். 1982 இல் வெளியான இந்தப் படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கிறது.

5. மை நெய்பர் டொட்டோரோ (my neighbour totoro)

சம்மருக்கு குழந்தைகளை இந்தப் படம்லாம் பார்க்க வைங்க!

வீட்டுக்கு அருகில் இருக்கும் காட்டுக்குள் செல்கிற இரு குழந்தைகளுக்கு காட்டிலுள்ள விசித்திரமான உயிர்களுடன் ஏற்படுகிற அன்பையும் நடபையும் சாகசத்தையும் இப்படம் சித்தரிக்கிறது. குழந்தைகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிற ஜப்பானிய அனிமேஷன் படம் இது. இந்தப் படத்தை இயக்கியவர் ஜப்பானின் வால்ட் டிஷ்னி என்று திரைப்பட ரசிகர்களால் புகழப்படுகிற மியாசகி.

6. இன்சைட் அவுட்

சம்மருக்கு குழந்தைகளை இந்தப் படம்லாம் பார்க்க வைங்க!


நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும், நம் மனதிற்குள் சண்டைகள் நடக்கும். அப்படி சண்டையிடும் ஒவ்வொருவரும், மனிதர்களாக இருந்தால். நாம் இந்த நொடியில் கோப்பப்பட வேன்டுமா? , அழ வேண்டுமா? சிரிக்க வேண்டுமா? என்பதையெல்லாம் மூளை தான் தீர்மானிக்கிறது. மூளைக்குள் கோபம், சோகம்,மகிழ்ச்சி போன்ற மனிதர்கள் உள்ளிருந்து நம்மை ஆட்டிப்படைத்தால் என்னாகும். அது தான் இன்சைட் அவுட் படம். கட்ந்த ஆண்டு வெளியான அனிமேஷன் படங்களில் குழந்தைகள் மட்டும் அல்லாது பெரியவர்களையும் பெரிதும் பாதித்த படம் இன்சைட் அவுட் தான் .2015-ம் ஆண்டிற்கான சிறந்த அனிமேஷன் படம் என்னும் விருதை பெற்றதும் இந்தப்படம் தான்

7. தி குட் டைனோசர்

சம்மருக்கு குழந்தைகளை இந்தப் படம்லாம் பார்க்க வைங்க!


அனிமேஷன் படங்களில் சிறப்பம்சமே, நம்மால் எதிர்பார்க்க முடியாத ஒன்றை நிகழ்த்திக்காட்டுவது தான். இதுவரையில், டைனோசர்கள் என்றாலே தீயவை என காட்டிவந்த சினிமாவில், முதல் முறையாக டைனோசர்களை நல்லவர்கள் ஆக்கியிருக்கிறார்கள்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், சக்தி வாய்ந்த எறிகல் ஒன்று தாக்கிதான் டைனோசர்கள் இறந்துபோயின, அந்த எறிகல் தாக்காமல் இருந்து இருந்தால் என படமே அசத்தலாக லாஜிக்கோடு ஆரம்பிக்கிறது.படத்தில் பாவமாய் இருக்கும் குட்டி டைனோசர் தான் இறுதியில் ஹீரோ அகும். படத்தில் ஜந்து மாதிரி போன்று குட்டி உருவம் தான் ஹைலைட். அது யார் என எந்த மிருகத்திற்கும் தெரியாது. அது தான் மனிதன். இப்படி ஒரு வித்தியாசமான கதை தான் தி குட் டைனோசர். டைனோசர்களுக்காக குழந்தைகள் அழுதது இது தான் முதல் முறை

8. ஜூடோபியா

சம்மருக்கு குழந்தைகளை இந்தப் படம்லாம் பார்க்க வைங்க!


இப்போது இருக்கும் உலகம் அப்படியே இருக்க, எல்லாத்துறைகளிலும் மிருகங்களே முக்கிய பொறுப்பில் இருந்தால் எப்படி இருக்கும் ? அது தான் ஜூடோபியா படம். காவல்துறை தலைவராக காட்டெருமை, புதிதாக காவல் துறையில் சேர்ந்து இருக்கும் முயல், அந்த நகரின் மேயராக சிங்கம், வாகன பதிவுதுறையில் அலுவலகத்தில் மெதுவாக நகரும் ஸ்லாத்துகள் என படம் தெறி லெவல் கற்பனை ரகம். அரசு அலுவலகங்கள் என்றாலே மெதுவாக வேலை செய்வார்கள் என்அதினால், அதற்கு ஸ்லாத் விலங்கை தேர்வு செய்தததெல்லாம் வேற லெவல். இந்த ஆன்டு வெளியான ஜூடோபியா குழந்தைகளோடு பெரியவர்களையும் அதி பயங்கரமாய்  கவர்ந்தது
 

9. குங்ஃபூ பாண்டா ( தொடர்)
 

சம்மருக்கு குழந்தைகளை இந்தப் படம்லாம் பார்க்க வைங்க!

குங்ஃபூ பாண்டா படங்களில் இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்து இருக்கிறது. நூடுல்ஸ் விற்று கொண்டு இருக்கும் குங்ஃபூ பாண்டா, எப்படி டிராகன் வாரியர் ஆகி, சிறுத்தையை அழிப்பது என்பது தான் முதல் பாகம். இரண்டாம் பாகத்தில் மயிலையும், மூன்றாம் பாகத்தில் காட்டெருமையும் அழிக்கும் பாண்டா. எப்படி பாப்பாய் கீரை சாப்பிடுவது; சோட்டா பீம் லட்டு சாப்பிடுவது எல்லாம் ஹிட் அடித்ததோ அதே போல், பாண்டாக்கள் டம்ப்லிங் என்னும் ஊணவை சாப்பிடுவதும் குழந்தைகள் மனதில் சுவையான ஹிட். இதன் மூன்றாம் பாகம் இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 

-சக்திவேல், கார்த்தி