Published:Updated:

கார்ப்பரேட்களை எதிர்க்கும் இந்த தனி ஒருத்தி யாரோ?!

கார்ப்பரேட்களை எதிர்க்கும் இந்த தனி ஒருத்தி யாரோ?!
கார்ப்பரேட்களை எதிர்க்கும் இந்த தனி ஒருத்தி யாரோ?!

கார்ப்பரேட்களை எதிர்க்கும் இந்த தனி ஒருத்தி யாரோ?!


    
வீடியோ கேம்களை திரைப்படமாக்கி ஹிட் அடிப்பது ஹாலிவுட் ஸ்டைல். கடந்த ஆண்டு வெளியான ஆங்ரி பேர்ட்ஸ், அசாஸின்ஸ் கிரீட் ஆகிய ’வீடியோ கேம் டூ சினிமா’ படங்கள் கவனம் ஈர்த்தன. ஆனால், இவற்றுக்கு எல்லாம் முன்னோடி ரெஸிடென்ட் ஈவில்..! 2002-ல் முதன் முதலாக வெளியானது ரெஸிடென்ட் ஈவில் Resident Evil. அன்று முதல் 2012-ல் வெளியான Resident Evil: Retribution வரையிலான பாகங்கள் எல்லாமே அசுர ஹிட். கிட்டதட்ட லேடி ஜேம்ஸ் பாண்ட் போன்ற படத்தின் பிரதான கதாபாத்திரமான மில்லா ஜோவோவிச் (Milla Jovovich) படத்தின் பெரும் வசீகரம்.

கார்ப்பரேட்களை எதிர்க்கும் இந்த தனி ஒருத்தி யாரோ?!


    பயோவெப்பன்கள் தயாரிக்கும் அம்ப்ரெல்லா கார்ப்பரேஷன் தான் படத்தின் வில்லன். அதிரடி நாயகி மில்லா ஒவ்வொரு பாகத்திலும் புதுப்புது அதிரடிகள் மூலம் அம்ப்ரெல்லா நிறுவனத்தின் சதிகளை முறியடிப்பதாக படத்தை இயக்கியிருப்பார் பால் W.S ஆண்டர்சன். மில்லா ஜோவோவிச், ஆண்டர்சன் கெமிஸ்ட்ரி எப்படிப்பட்டது என்றால், இருவரும் 2009-ம் ஆண்டு திருமணமே செய்து கொண்டார்கள். 
இந்நிலையில், இந்த வாரம் வெளியாக இருக்கும் ரெஸிடென்ட் ஈவில் : தி ஃபைனல் சாப்டர்தான் இறுதியானது என அறிவித்து இருக்கிறார் பால் ஆண்டர்சன். முந்தைய பாகங்களைப் பற்றிய ஒரு குவிக் ரவுண்ட் அப் போலாமா..?


    அம்ப்ரெல்லா கார்ப்பரேஷன்  தி ஹைவ் என்னும் ரகசிய இடத்தில் சில ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறது. டி-வைரஸ் கசிய, அங்கு இருக்கும் மனிதர்கள் ஜோம்பிகளாக மாறிவிடுகிறார்கள். மிருகங்கள் அழிக்க முடியாத ம்யுட்டன்ட்களாக மாறி விடுகின்றன. அதிலிருந்து, அங்கு வேலை செய்யும் ஆலைஸ் (மில்லா) எப்படி தப்பிக்கிறார் என்பது தான் முதல் பாகத்தின் கதை.
இரண்டாம் பாகத்தில், பாதிக்கப்பட்ட ரக்கூன் நகருக்குள் யாரும் நுழையாதபடி தடை அமைக்கிறார், மேஜர் டிம்மோதி. கோமாவில் இருந்து மீளும் ஆலைஸுக்கு எப்படி அசுர சக்திகள் கிடைக்கிறது என்பது ரெஸிடென்ட் ஈவில் அபோகாலிப்ஸ்

கார்ப்பரேட்களை எதிர்க்கும் இந்த தனி ஒருத்தி யாரோ?!


    மூன்றாம் பாகமான எக்ஸ்டிங்ஸனிலேயே மனிதர்களற்ற உலகை நோக்கிப் பயணிக்கிறது ரெஸிடென்ட் ஈவில். ஆலைஸ் தோற்றத்தில் பல்வேறு க்ளோன்கள் உருவாக்கப்பட்டு இருப்பதை அங்குதான் கண்டுகொள்கிறாள். 
ஆலைஸுக்கும் அம்ப்ரெல்லா கார்ப்பரேஷனுக்கும் இடையே நடக்கும் சண்டைகளின் வேறு வேறு பரிமாணங்கள்தான் ஒவ்வொரு பாகம் என்றாலும், படம் பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி ஹிட் அடிப்பதற்கு காரணம், அதில் இருக்கும் சண்டைக் காட்சிகள்தான். போதாதற்கு ஒவ்வொரு பாகத்திற்கும் புது கலர், புது லொக்கேஷன் என ரசிகர்களை ஈர்க்கவும் ரெஸிடென்ட் ஈவில் படக்குழு மறப்பதில்லை.


அதுவும் ஒரு காட்சியில் அலைஸைக் கொன்று, தூக்கி எறிவார்கள். அந்த இடம் முழுக்க, ஆலைஸ் போன்று க்ளோன் செய்யப்பட்ட உருவங்களாக இருக்கும். ரத்தமும், சதையுமாக படத்தில் வரும் சண்டைக் காட்சிகளை பார்ப்பதற்கே, படத்திற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள். 
படத்தில் வரும் சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும், மில்லா டூப் போட்டதில்லை. படத்தில் அவருக்கு இருக்கும் சிறுசிறு காயங்கள் எல்லாம் நிஜமானது என்கிறது படக்குழு. தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் படத்திற்கு, முதல்முறையாக தமிழில் தீம் சாங் வெளியிட்டு இருக்கிறது சோனி பிக்சர்ஸ். 

கார்ப்பரேட்களை எதிர்க்கும் இந்த தனி ஒருத்தி யாரோ?!


என்னதான், இந்தப் பாகம் தான் கடைசி என தயாரிப்புக்குழு அறிவித்து இருந்தாலும், சில நாட்களுக்கு முன்னர் ரெஸீடென்ட் ஈவில் : 7 பயோ ஹசார்ட் என கேமிங் ரசிகர்களுக்கான அடுத்த பாகத்தை வெளியிட்டு ஹின்ட் கொடுத்து இருக்கிறார்கள். 
முதல் பாகத்தின் வெளியீட்டின் போது, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க பிளான் போட்டது சோனி நிறுவனம். போஸ்டர் டிசைன் செய்ய ரசிகர்களை அழைத்தது. அதே போல் ரசிகர்களின் கருத்தை எப்போது கேட்டு, அதற்கேற்ப, அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ஆண்டர்சன். 


இந்த ஆறாவது பாகத்துக்கு ‘இறுதி அத்தியாயம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஆனால், இதுதான் இறுதியா என்பது யாருக்கும் தெரியாது. முந்தைய பாகங்களைப் போலவே இந்தப் பாகத்திலும் ஸோம்பிகள் சூழ் உலகத்தில் இருக்கிறாள் ஆலைஸ். அப்போது ரெட் க்வீனிடமிருந்து (ஞாபகமிருக்கிறதா... அந்த கணினி சிறுமி!) அவளுக்கு ஒரு செய்தி வருகிறது. அம்ப்ரெல்லா நிறுவனத்தின் ரகசிய பரிசோதனை சாலைக்கு இரண்டு நாட்களுக்குள் வந்தால், ஸோம்பிகளை தடுக்கும் மருந்து கிடைக்கும் என்கிறது ரெட் க்வீன். அந்த இரண்டு நாள் பயணம் எப்படிப்பட்டது, அதன் முடிவு என்ன... அதுதான் படம்! 


    இந்த முறை நேரடியாக தமிழ் பேசவிருக்கும் ஆலைஸூக்காக தீம் பாடல், தமிழில் ‘யாரோ இவள்’ என டைட்டில் என தடபுடல் வரவேற்பு கொடுக்கிறார்கள். தனிமனித நலன்களை நசுக்கும் கார்ப்பரேட்களை எதிர்ப்பது இப்போது உலகம் முழுக்க பற்றிப் படரும் புரட்சிப் போராட்டம். அதை கடந்த 16 வருடங்களாக தனி ஒருத்தியாக செய்து கொண்டிருக்கிறாள் ஆலைஸ். இந்தப் பாகத்தில் அவள் என்ன புரட்சி செய்யவிருக்கிறாள் என்பதையும்தான் பார்ப்போமே..!     

பின்குறிப்பு: வரும் வெள்ளியன்று படம் இந்தியா முழுவதும் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னரே இந்தப் படத்தினை ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கில் பார்க்க விருப்பமா..!? காத்திருங்கள்.. அறிவிப்பு இன்று! 

அடுத்த கட்டுரைக்கு