Published:Updated:

தாராவி குடிசை டு ஹாலிவுட் சினிமா; சர்வதேச மாடலாக மாறிய 14 வயது சிறுமி மலீஷா!

மலீஷா

மும்பை தாராவி குடிசைப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி மலீஷா சர்வதேச மாடலாக மாறியிருக்கிறார்.

Published:Updated:

தாராவி குடிசை டு ஹாலிவுட் சினிமா; சர்வதேச மாடலாக மாறிய 14 வயது சிறுமி மலீஷா!

மும்பை தாராவி குடிசைப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி மலீஷா சர்வதேச மாடலாக மாறியிருக்கிறார்.

மலீஷா
மும்பை தாராவி பகுதியில் அதிகப்படியான குடிசைகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. வறுமையான சூழலில் அங்கு வளரும் பலர் படிப்பு, தனித்திறமை உள்ளிட்டவற்றில் சிறப்பான இடத்தை அடைந்திருக்கின்றனர்.

இக்குடிசைப்பகுதியில் இருந்து சிறுமி ஒருவர் பிரபல காஸ்மெடிக் பொருளுக்கு விளம்பர மாடலாக மாறியிக்கிறார். தாராவி குடிசைப்பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் போட்டி மூலம் குடிசைகளின் இளவரசியாக மலீஷா கார்வா என்ற சிறுமியைத் தேர்ந்தெடுத்தார். இப்போது 14 வயதாகும் அச்சிறுமி ஏழை குடும்பத்தில் பிறந்த ஆயிரக்கணக்கான பெண்களின் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

மலீஷா
மலீஷா

தற்போது பாரஸ்ட் எஸ்சன்சியல்ஸ் என்ற காஸ்மெடிக் பிராண்டின் `தி யுவதி கலெக்‌ஷன்' விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மலீஷா இளம் வயதில் கண்ட கனவு நனவாகி இருக்கிறது. பின் தங்கிய பகுதியை சேர்ந்த பெண்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்து தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திலும், எங்கு இருந்தாலும் கனவை நிறைவேற்ற முடியும் என்பதை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் மலீஷாவின் படம் பாரஸ்ட் எஸ்சன்சியல்ஸ் விளம்பரத்தில் இடம் பெற்று இருப்பதாக அக்கம்பெனி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு அந்நிறுவனம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் மலீஷா ஒரு கடைக்குள் நுழைகிறார்.

அந்த கடையில் மலீஷாவின் புகைப்படத்துடன் கூடிய விளம்பரம் ஒன்று அவரது கண்ணில்படுகிறது. அதைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியின் எல்லைக்கே செல்லும் மலீஷா அந்த விளம்பரம் அருகில் நின்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். அந்த வீடியோவை இது வரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். பலரும் மலீஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சோசியல் மீடியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் மலீஷா ஒருமுறை டிவியில் நடிகை பிரியஙகா சோப்ராவின் பேஷன் ஷோ நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தானும் பிரியங்காவை போல் வர விரும்பியதாக தன் சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மலீஷா இரண்டு ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவால்தான் என்னை இந்த உலகம் கண்டுகொண்டதாக மலீஷா தெரிவித்துள்ளார்.