Published:Updated:

Heart of Stone: நெட்ஃபிளிக்ஸ் படத்தில் `வொண்டர் வுமன்' கல் கடோட்டோடு இணையும் அலியா பட்!

அலியா பட்

'Heart Of Stone' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அலியா இணையவுள்ள அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் தன்னுடைய அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

Heart of Stone: நெட்ஃபிளிக்ஸ் படத்தில் `வொண்டர் வுமன்' கல் கடோட்டோடு இணையும் அலியா பட்!

'Heart Of Stone' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அலியா இணையவுள்ள அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் தன்னுடைய அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

Published:Updated:
அலியா பட்

அலியா பட் நடித்த 'கங்குபாய் கத்தியவாடி' திரையரங்குகளில் வெளியான ஒரு வாரத்தில் 100 கோடி வசூல் செய்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. 'கண்ணா, லட்டு தின்ன ஆசையா' எனச் சந்தோஷத்தில் இருந்தவருக்கு 'கண்ணா இன்னொரு லட்டு' என நெட்ஃபிளிக்ஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. அலியா ஹாலிவுட்டிற்கு போகிறார் என்கிற செய்தியோடு அவரது ரசிகர்களுக்கு இன்றைய நாள் தொடங்கியிருக்கிறது.

அதுவும் நம்ம 'வொண்டர் உமன்' ஹீரோயின் கல் கடோட் (Gal Gadot) மற்றும் '50 ஷேட்ஸ்' புகழ் ஜேமி டோர்னன் (Jamie Dornan) உடன் அவர் இணைந்து நடிக்க, நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினலாக உருவாகும் படத்தை ஸ்கைடான்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ளார்கள். இன்டர்நேஷனல் ஸ்பை திரில்லராக இந்தப் படம் உருவாக உள்ளது. மற்றதெல்லாம் சஸ்பென்ஸ் என்கிறார்கள் படக்குழு! கல் கடோட் அலியாவை வரவேற்று பதிவிட்டு இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

The Aeronauts, Wild Rose உள்ளிட்ட படங்களை இயக்கிய டாம் ஹார்பர் இயக்குகிறார். 'Heart Of Stone' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அலியா இணையவுள்ள அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் தன்னுடைய அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் போன நட்சத்திரங்களான பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் பச்சன், அனில் கபூர், மறைந்த நடிகர் இர்பான் கான், அலி பஸால் வரிசையில் அலியாவும் இணைந்திருக்கிறார். தீபிகா படுகோன் 'ட்ரிபிள் எக்ஸ்' படத்தில் வின் டீசலுடன் நடித்திருந்தார்.

இந்தச் செய்தியைப் பகிர்த்திருக்கும் அலியாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள் ரசிகர்கள். சமந்தா, ஷான்வி கபூர் தங்களுடைய வாழ்த்துகளை கமென்ட் செய்துள்ளார்கள். இந்தியாவின் டார்லிங் அலியாவை ஹாலிவுட் வரவேற்கக் காத்திருக்கிறது!