Published:Updated:

"வெறுப்புக்கும் அவதூறுக்கும் நான் உரியவள் என நீங்கள் நம்பினால்..." - மனம் திறந்த ஆம்பர் ஹெர்ட்!

ஆம்பர் ஹெர்ட்

ஜானி டெப் Vs ஆம்பர் ஹெர்ட் வழக்கின் தீர்ப்பு வெளியாகி பத்து நாள்களுக்கு மேல் ஆகிவிட்டன. அந்தத் தீர்ப்பு குறித்து தற்போதுதான் முதன்முறையாக ஆம்பர் ஹெர்ட் மனம் திறந்து பேசியுள்ளார்.

Published:Updated:

"வெறுப்புக்கும் அவதூறுக்கும் நான் உரியவள் என நீங்கள் நம்பினால்..." - மனம் திறந்த ஆம்பர் ஹெர்ட்!

ஜானி டெப் Vs ஆம்பர் ஹெர்ட் வழக்கின் தீர்ப்பு வெளியாகி பத்து நாள்களுக்கு மேல் ஆகிவிட்டன. அந்தத் தீர்ப்பு குறித்து தற்போதுதான் முதன்முறையாக ஆம்பர் ஹெர்ட் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆம்பர் ஹெர்ட்

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட் வழக்கின் தீர்ப்பு விவரங்களைப் படிக்க...

ஜானி டெப்புக்கு 10.35 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாக ஆம்பர் ஹெர்ட் கொடுக்க வேண்டுமெனவும், அதேபோல் ஆம்பருக்கு 2 மில்லியன் இழப்பீடு கிடைக்கவும் வழிசெய்யும் வகையில் வெர்ஜினியா நீதிமன்றம் ஜூன் 1 அன்று தீர்ப்பு வழங்கியது. இந்த ஹை-ப்ரொபைல் வழக்கின் விசாரணை ஆறு வாரங்களுக்கு மேல் நீடித்தது. இந்த வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு ஆம்பரும் ஜானியும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டனர்.

ஆம்பர் பகிர்ந்திருந்த அறிக்கையில், "இன்றைக்கு நான் உணர்கிற ஏமாற்றம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. மலையளவிலான ஆதாரங்கள் அதிகாரத்துக்கு, செல்வாக்குக்கு, புகழுக்கு முன்பு பெரிதில்லை. இந்தத் தீர்ப்பு மற்ற பெண்களுக்கு என்னவாகச் சென்றிருக்கும் என்பதை யோசிக்கும் போது இன்னும் மோசமாக உணர்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

ஆம்பர் ஹெர்ட் - ஜானி டெப்
ஆம்பர் ஹெர்ட் - ஜானி டெப்

அமெரிக்க நாட்டின் ஊடகமொன்றிற்குத் தற்போது அவர் அளித்திருக்கும் நேர்காணலில், "நான் நடுவர்களைக் குறை சொல்லவில்லை. என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் அன்பிற்குரிய கேரக்டர். மக்களுக்கு அவரைத் தெரிந்திருக்கிறது. அவர் ஒரு அற்புதமான நடிகர்."

சமூக வலைதளங்களான ட்விட்டரிலும் டிக் டாக்கிலும் ஜானிக்கு ஆதரவான அலை இருந்தது. டிக் டாக்கில் Justice of Amber Heard என்கிற ஹேஷ்டேக் 27 மில்லியன் பார்வைகளை எட்டியது என்றால், ஜானிக்கு ஆதரவான பதிவுகள் 20 பில்லியன் பார்வைகள் வரை சென்றன.

இது குறித்து ஆம்பர், "என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என் திருமணத்தில் நான்கு சுவர்களுக்குள் எனது வீட்டில் நடந்தது குறித்து எந்தவித தீர்ப்பை உருவாக்க விரும்புகிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலை கிடையாது. ஒரு சாதாரண மனிதன் இவற்றை அறிந்திருக்க வேண்டியது இல்லை. அதனால் தனிப்பட்ட அவர்களின் கருத்தை நான் எடுத்துக் கொள்வதில்லை.

ஜானி டெப்
ஜானி டெப்

அதே நேரத்தில் நான் இத்தனை வெறுப்புக்கும் அவதூறுக்கும் உரியவள், நான் பொய் சொல்கிறேன் என நீங்கள் நினைத்தால் என் கண்ணைப் பார்த்து ஒன்று மட்டும் சொல்லுங்கள். சமூக வலைதளங்களில் இருவர் பற்றிய பிரதிபலிப்பு நியாயமாக இருந்ததா என்று. நியாயமாகத்தான் இருந்தது என உங்களால் சொல்ல முடியாது" எனப் பேசியுள்ளார் ஆம்பர்.