Published:Updated:

ஸ்கூப், டாம் அண்ட் ஜெர்ரி, எக்ஸ்டின்க்ட்... 2020 அனிமேஷன் படங்கள் லிஸ்ட்!

இந்த ஊரடங்கு நாள்களில் வீடடைந்துகிடக்கும் குட்டி சுட்டீஸ்களுக்கு, க்வாரன்டீன் முடிந்ததும் விஷுவல் விருந்து வைக்கக் காத்திருக்கும் அனிமேஷன் படங்கள் பற்றிய பட்டியல். நோட் பண்ணிக்கோங்க பெற்றோர்களே.

ஸ்கூப், டாம் அண்ட் ஜெர்ரி, எக்ஸ்டின்க்ட்... 2020 அனிமேஷன் படங்கள் லிஸ்ட்!

இந்த ஊரடங்கு நாள்களில் வீடடைந்துகிடக்கும் குட்டி சுட்டீஸ்களுக்கு, க்வாரன்டீன் முடிந்ததும் விஷுவல் விருந்து வைக்கக் காத்திருக்கும் அனிமேஷன் படங்கள் பற்றிய பட்டியல். நோட் பண்ணிக்கோங்க பெற்றோர்களே.

Published:Updated:

இந்த ஆண்டு வெளியாகவிருந்து, கோவிட்-19 பிரச்னையால் அடுத்த ஆண்டு ரிலீஸுக்கு தள்ளிப்போயிருக்கும் படங்களும் நிறைய இருக்கின்றன. ஆதி மனிதர்களின் அலப்பறைகள் நிறைந்த `தி க்ரூட்ஸ் 2', உருவத்தில் குழந்தையும், உள்ளத்தில் இளைஞனாகவும் இருந்து கூத்துகள் பல செய்யும் ` தி பாஸ் பேபி 2', உலக ஃபேமஸ் மினியான்ஸ் மீண்டும் வரவிருக்கும், `மினியான்ஸ் : ரைஸ் ஆஃப் க்ரூ' என வரிசைகட்டி நிற்கின்றன. கீழ்க்கண்ட திரைப்படங்களுக்கும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனாலும் போகலாம்!

Boss Baby 2
Boss Baby 2
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்கூப்

Scoob!
Scoob!
Courtesy: Warner Bros. Pictures

60'ஸ் கிட்ஸில் இருந்து 90'ஸ் கிட்ஸ் வரை எல்லோருடைய ஃபேவரைட்டான ஸ்கூபி டூ, இப்போது 2K கிட்ஸையும் மகிழ்விக்க வருகிறது. `ஸ்கூபி டூ' ஃப்ரான்சைஸின் ரீபூட் வெர்ஷனாக உருவாகியிருக்கும் `ஸ்கூப்!' படத்தின் டிரெய்லர், இணையத்தில் ஏற்கெனவே வைரல். வார்னர் அனிமேஷன் குரூப் தயாரிக்கும் இப்படத்தை, டோனி செர்வோன் இயக்குகிறார். ஸ்கூபி மற்றும் ஷேகி சேர்ந்து செய்யும் சேட்டைகளை, திரையில் கண்டு மகிழலாம். ஸ்கூபி டூபி டூ...

ரயா அண்ட் தி லாஸ்ட் டிராகன்

Raya and the Last Dragon
Raya and the Last Dragon

`டேங்கல்', `ஃப்ரோஸன்', `ஸூடோப்பியா' போன்ற ப்ளாக்பஸ்டர் அனிமேஷன் திரைப்படங்களின் தலைமை ஸ்டோரிபோர்டு கலைஞராகப் பணியாற்றியவர், பால் ப்ரிக்ஸ். அவரும் டீன் வெல்லின்ஸ் என்பவரும் இணைந்து இயக்கும் படம் இது. குமந்த்ரா எனும் மர்மம் நிறைந்த சாம்ராஜ்யத்தில் வாழும் உலகின் கடைசி டிராகனை, ரயா எனும் பெண் தேடி கண்டுபிடிப்பதே படத்தின் கதை.

டாம் அண்ட் ஜெர்ரி

Tom and Jerry
Tom and Jerry

கார்ட்டூன் உலகின் காமெடி கிங்ஸ் டாம் மற்றும் ஜெர்ரியின், அலப்பறைகள் நிறந்த முழுநீளப் படமாக வெளியாக உள்ளது, இந்த `டாம் அண்ட் ஜெர்ரி'. `ஃபென்டாஸ்டிக் 4' படங்களை இயக்கிய டிம் ஸ்டோரிதான் படத்தின் இயக்குநர். எனவே, டிம் ஸ்டோரி படத்தின் ஸ்டோரியில் எந்தக் குறையும் வைக்க மாட்டார் என நம்பிப் போகலாம். எல்லாம் தாண்டி, `டாம் அண்ட் ஜெர்ரி'யை திரையில் பார்த்தாலே போதும், வேறென்ன வேணும்!

தி ஸ்பான்ஜ் பாப் மூவி : ஸ்பான்ஜ் ஆன் தி ரன்

The Sponge bob Movie: Sponge on the Run
The Sponge bob Movie: Sponge on the Run

ஸ்பான்ஜ் பாப் மற்றும் பாட்ரிக்கின் காமெடி கலாட்டாக்கள் நிறைந்த, `ஸ்பான்ஜ் பாப் ஸ்கொயர் பேன்ட்ஸ்' தொலைக்காட்சி சீரியலின் முழுநீள வெர்ஷனாக, புத்தம்புது கதையோடு வருகிறது இந்த அனிமேஷன் திரைப்படம். பாரமவுன்ட் அனிமேஷன், நிக்கலோடியன் மூவீஸ் எனப் பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கைகோத்திருக்கும் இந்தப் படத்திற்கு இசை யார் தெரியுமா? ஹான்ஸ் ஜிம்மர்! அப்போ, கண்ணுக்கு மட்டுமில்ல... காதுக்கும் செம விருந்து இருக்கு.

எக்ஸ்டின்க்ட்

Extinct
Extinct

`சிம்ப்ஸன்' அனிமேஷன் சீரியஸின் சில பகுதிகளை இயக்கிய, டேவிட் சில்வர்மேன் இயக்கத்தில் வெளியாகும் படம், `எக்ஸ்டின்க்ட்'. ஃப்ளம்மல்ஸ் எனப்படுகிற இரு விசித்திர ஜீவராசிகள், 1835-ல் இருந்து இந்தக் காலத்து ஷாங்காய் நகரத்துக்கு வந்தடைவதும், அதன்பிறகு நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களும்தான் படத்தின் கதை. உடம்பில் ஏதோ உளுந்தவடை போல் ஓட்டை இருக்கும் இந்த உயிரினங்கள், என்ன குறும்புத்தனம் செய்யப்போகிறதோ!

விஷ் டிராகன்

Wish Dragon
Wish Dragon

சென்ற ஆண்டே வெளியாகியிருக்கவேண்டிய படம். தாமதமாகி இந்த ஆண்டு வெளியாகிறது. ஜாக்கி சான் தயாரித்து, குரல் கொடுத்திருக்கும் இப்படத்தின் கதை, ரொம்பவே சிம்பிள். ஒரு சிறுவன், அவன் ஆசையை நிறைவேற்றும் மாயாஜால டிராகன். அதனால் ஏற்படும் பிரச்னைகளும், அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதும்தான் படம்.