Published:Updated:

"அனபெல்லுக்கு உன் ஆன்மாவைக் கொடு!" - #AnnabelleComesHome டிரெய்லர்

'தி நன்' படத்தின் தயாரிப்பாளரான கேரி டௌபர்மேன் இயக்குநராக அறிமுகமாகும் படம், 'அனபெல் கம்ஸ் ஹோம்'. இப்படத்தின் டிரெய்லர் யூ-டியூபில் வெளியாகி டிரெண்டிங்கில் டாப் இடத்தில் உள்ளது.

ஹாலிவுட்டில் பேய் படங்களுக்கென்றே தனி யுனிவர்ஸை உருவாக்கியுள்ளது 'கான்ஜூரிங்'. அந்தப் படங்களின் கதையில் 'அனபெல்' பட பாகங்களும் மிகப் பெரிய பங்கிருக்கிறது. இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இதன் மூன்றாம் பாகமான 'அனபெல் கம்ஸ் ஹோம்' (Annabelle comes Home) ரீலிஸாகக் காத்திருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது யூ-டிபில் டாப் டிரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது.