Published:Updated:

Arnold Schwarzenegger: டெர்மினேட்டர் படங்களில் இருந்து விலகிய அர்னால்டு; காரணம் இதுதான்!

அர்னால்ட் ஸ்வார்சநேகர்

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, டெர்மினேட்டர் படங்களில் நடிப்பதிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Published:Updated:

Arnold Schwarzenegger: டெர்மினேட்டர் படங்களில் இருந்து விலகிய அர்னால்டு; காரணம் இதுதான்!

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, டெர்மினேட்டர் படங்களில் நடிப்பதிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அர்னால்ட் ஸ்வார்சநேகர்
டெர்மினேட்டர் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.  இப்படத்தின் முதல் பாகத்தை ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர்  ஜேம்ஸ் கேமரூன் 1984ல் இயக்கிருந்தார். 

பின் 1991-ல் ‘டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே, 2003-ல் ‘டெர்மினேட்டர் 3: ரெய்ஸ் ஆப் தி மெஷின்ஸ்’, என்று அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்த மூன்று பாகங்களிலுமே பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நேகர்தான்  நடித்திருந்தார். 

அர்னால்ட் ஸ்வார்சநேகர்
அர்னால்ட் ஸ்வார்சநேகர்

2009-ல் வெளியான டெர்மினேட்டர் நான்காம் பக்கத்தில் அவர் நடிக்கவில்லை. அதன்பின் 2015-ல் டெர்மினேட்டர் 5: ஜெனிசிஸ், 2019-ல் டெர்மினேட்டர்: 6  டார்க் ஃபேட் போன்ற பாகங்கள்  வெளியானது. ஆனால் அவை மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. அதனால் இனிவரும் டெர்மினேட்டர் படங்களில் நடிப்பதிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.     

இதுகுறித்து பேசிய அர்னால்டு, “ எனது வெற்றிக்கு ‘டெர்மினேட்டர்’ ஒரு மிகப்பெரிய காரணம். முதல் மூன்று பாகங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. நான்காவது பாகத்தில் நான்  கலிஃபோர்னியா மாகாண ஆளுநராக இருந்ததால் அதில் நடிக்கவில்லை. ஐந்து மற்றும் ஆறாவது பாகங்கள் என்னைப் பொறுத்தவரை சரியாக ஓடவில்லை. காரணம் அவை சரியாக எழுதப்படவில்லை. இதனால் டெர்மினேட்டர் படங்களில் இருந்து விலகிவிட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார்.